25 மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. தமிழ்நாட்டின் தலைவிதியையே மாற்ற போகும் திட்டம்.. வாகன ஓட்டிகளுக்கு குஷி
சென்னை: தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்ட நிலையில் மத்திய நெடுஞ்சாலை துறை முக்கியமான பல நெடுஞ்சாலை துறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 25 புதிய சாலை திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்த திட்டங்கள் திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது. இவை என்னென்ன திட்டங்கள் என்ற அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

சென்னை - சேலம் கிரீன்ஃபீல்ட் வழித்தடம்
குமாரபாளையம் - செங்கப்பள்ளி 8 வழிச்சாலை
கோவை - கரூர் 6 வழிச்சாலை
சேலம் புறவழிச்சாலையை இணைக்கும் தருமபுரி- நாமக்கல் 8 வழிச்சாலை
கிளாம்பாக்கம் மகேந்திரா சிட்டி ஆறுவழி மேம்பால சாலை
ஸ்ரீபெரும்புதூர்-மதுரவாயல் ஆறு வழி மேம்பால சாலை
சென்னை திருச்சி மதுரை பசுமைவழிச் சாலை
கல்லகம் பீன்றகுட்டு நான்குவழி புறவழிச் சாலை
கடலூர் தறைமுக இணைப்பு நான்குவழிச் சாலை
கரூர்-கோவை 6 வழிச்சாலை ரோடு இணைப்பு
ராமநாதபுரம் தூத்துக்குடி நான்கு வழிச்சாலை
உள்ளிட்ட 25 சாலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
கொங்கு திட்டங்கள்: முக்கியமாக நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் வெள்ளக்கோவில்-சங்ககிரி NH81-A 70 கிமீ நான்கு வழிச்சாலை விரிவாக்கம் விரைவில் நடக்க உள்ளது. 2,000 கோடி செலவில் வெள்ளக்கோவில்-சங்ககிரி NH81-A 70 கிமீ நான்கு வழிச்சாலை விரிவாக்கத்தை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது. சேலம், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு இந்த திட்டம் மிக முக்கியமானது ஆகும்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த வாரம் தஞ்சாவூருக்குச் சென்றபோது, தமிழகத்தில் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக ₹1 லட்சம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். சோழபுரம்-தஞ்சாவூர் மற்றும் சேத்தியாத்தோப்பு-சோழபுரம் ஆகிய நான்கு வழிச்சாலையை ஆய்வு செய்தபோது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
4,730 கோடி செலவில் கட்டப்படும் 164 கிமீ விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் புறவழிச்சாலையில், மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு வழி வகுக்கும். அடுத்த 3 மாதங்களில் இதன் பணிகள் நிறைவு அடையும் என்று உறுதி அளித்தார். இங்கே பணிகள் கடந்த 5 வருடமாக சரியாக நடக்கவில்லை. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மேற்கொண்ட ஆய்விற்கு பின் இங்கே நடக்கும் பணிகள் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக முடிக்கப்படாமல் இருந்த விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தை கடந்த வாரம் ஆய்வு செய்தது கவனம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் ₹1 லட்சம் கோடி மதிப்பீட்டில் 2,781 கி.மீ.க்கு மொத்தம் 71 வரவிருக்கும் திட்டங்கள் உள்ளன. பாஜக அரசு 2014 முதல் மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக 2 லட்சம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. தற்போதைய திட்டங்களின் மதிப்பு ரூ.60,000 கோடி. முடிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பு மொத்தம் ₹50,000 கோடி என்றும் அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை ரோடு: இது போக மாமல்லபுரத்தில் இருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்தை இணைக்கும் 10 வழி சென்னை அவுட்டர் சாலையின் பணிகள் இரண்டு கட்டமாக நிறைவடைந்து ஜனவரியில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் திறக்கப்படும் முதல் 10 வழியாக சாலையாக இது மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காட்டுப்பள்ளி துறை முகத்தை மனதில் வைத்து இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, கிண்டி கத்திப்பாரா - மணலி இடையே 100 அடி சாலை, இருளியூர் - புழல் இடையே சென்னை புறவழிச்சாலை, வண்டலூர் - மீஞ்சூர் இடையே சென்னை புறவழிச்சாலை உட்பட பல முக்கிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications