சென்னை ஓஆர்ஆர்.. நகரத்தின் மொத்த லுக்கையே மாற்ற போகும் "ராட்சச" ரிங் ரோடு.. ரெடியான மாஸ்டர்பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 126 sq.km கொண்ட சென்னையின் அவுட்டர் ரிங் ரோட்டின் மாஸ்டர் பிளான் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் பெற்ற நிறுவனம்.. சென்னை மாநகராட்சி வளர்ச்சி ஆணையத்திடம் அந்த ஒப்பந்தத்தை இந்த மாத இறுதியில் வழங்கும்.

சென்னையில் ஓஆர்ஆர் சாலை வேகமாக வளர வாய்ப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கே FSI அதிகரிக்கப்பட உள்ளது. தற்போது 4-5 வரை சராசரி FSI உள்ளது. இதை 8க்கு மேல் உயர்த்த திட்டமிட்டு உள்ளனர்.

automobile chennai

10 வழி சாலையாக இந்த சென்னையின் அவுட்டர் ரிங் ரோடு சாலை அமைக்கப்பட உள்ளது. அதோடு சென்னையில் அமைக்கப்பட்டு வரும் வெளிவட்ட சாலை மீஞ்சூரில் வரவிருக்கும் சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டுடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஏற்றபடி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை சோழிங்கநல்லூருக்கு இணையாக அல்லது அதைவிட பெரிதாக மகாபலிபுரத்தை மாற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

சென்னையில் பல்வேறு சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை 15.7 கோடி ரூபாயை செலவு செய்ய உள்ளது. இதன் மூலம் கிண்டியில் இருந்து தாம்பரம் வரை போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கே புதிய ஐடி பார்க்குகள் வர உள்ளன. மிகப்பெரிய அளவில் நடைபாதை, நீர் நிலைகள், திரைப்பட நகரம், ஐடி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் இங்கே கொண்டு வரப்படும். அதேபோல் இங்கே சாக்கடை அமைப்புகள் , தரைக்கு கீழே மின்சாரம், மற்றும் பூங்காக்கள் என அனைத்து அடிப்படைக் கட்டமைப்புகளும் மொத்தமாக மாற்றப்படும்.

பெரிபெரல் ரிங் ரோடு: ஏற்கனவே சென்னையில் பெரிபெரல் ரிங் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் அமைக்கப்பட உள்ள 10 வழி சாலை இந்தியாவிலேயே பெரிய சாலையாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் அமைக்கப்படும் சாலைகளில் மட்டுமன்றி.. உலகில் அமைக்கப்படும் சாலைகளிலேயே பெரிய ரிங் ரோடு சாலையாக இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறையால் 132.87 கிமீ தூரத்திற்கு இந்த சாலை கட்டப்பட உள்ளது. சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு (CPRR) என்பது, எண்ணூர் துறைமுகம் - மகாபலிபுரத்தை இணைக்கும் வகையில் தமிழ்நாட்டில் 10 வழி அணுகல் கட்டுப்பாட்டு விரைவுச் சாலையாகும். காட்டுப்பள்ளி வரை இந்த சாலை அமைக்கப்படுகிறது.

5 பிரிவுகளைக் கொண்ட இந்த புதிய கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வே சென்னையின் 4வது ரிங் ரோடாக இருக்கும். சிங்கபெருமாள்கோயில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், புதுவொயல், காட்டுப்பள்ளி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ரூ.12,301 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

இந்த விரைவுச்சாலை கட்டுமானத்திற்கு 2025 ஆம் ஆண்டு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. NHAI இன் கட்டுப்பாட்டின் கீழ் கட்டுமானத்தில் உள்ள பெங்களூரு சென்னை விரைவுச்சாலை மற்றும் சித்தூர் - தச்சூர் விரைவுச்சாலை திட்டங்களுடன் இது இணைக்கப்படும். அதன் விரிவான திட்ட அறிக்கை (DPR) ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+