காத்திருக்கும் அதிர்ச்சி.. தமிழ்நாடு டோல் கேட்டில் வருது மாற்றம்.. வாகன ஓட்டிகளுக்கு பெரிய ஷாக்!
டெல்லி: ஏப்ரல் 1 முதல் தமிழ்நாட்டில் சில டோல் கேட்களில் கட்டணம் உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள NH 234 (கடலூர்-சித்தூர் நெடுஞ்சாலை) மூன்று பிளாசாக்களில் டோல் கட்டணம் ஏப்ரல் 1, 2025 முதல் அதிகரிக்கும். வல்லத்தில் 33.3% (₹40 முதல் ₹30), அதே சமயம் ஏமன்கரியந்தல் மற்றும் தென்னமாதேவி பகுதியில் 16.6% (30₹) உயரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெரிய வாகனங்களுக்கான கட்டணமும் மாற்றப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) NH கட்டண விதிகள், 2008ன் கீழ், பராமரிப்பு செலவுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்தல்களை காரணம் காட்டி இந்த உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ்கள் இப்போது ₹350 ஆக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
எதிர்காலத்தில் குறையும்
அதே சமயம் வாகன ஓட்டிகளுக்கு சலுகை அளிக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக் கட்டணத்திற்கான புதிய கொள்கையை அரசாங்கம் விரைவில் அறிவிக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இதன் மூலம் சுங்க கட்டணம் வெகுவாக குறையும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து பயனர் டோல் பிளாசாக்களும் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள், 2008ன் படி நிறுவப்பட்டுள்ளன. 2023-24ல் இந்தியாவில் மொத்த சுங்கச்சாவடி வசூல் ரூ.64,809.86 கோடியைத் தொட்டது. இது முந்தைய ஆண்டை விட 35 சதவீதம் அதிகமாகும். 2019-20ல் வசூல் ரூ.27,503 கோடியாக இருந்தது.
FASTag முறையின் மூலம் பலருக்கும் அதிக அளவிலான அல்லது எதிர்பார்க்காத அளவிலான சுங்க வரி வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில்தான்
டோல் கேட் கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். வாகன ஓட்டிகளுக்கு சலுகை அளிக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக் கட்டணத்திற்கான புதிய கொள்கையை அரசாங்கம் விரைவில் அறிவிக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
டோல் கட்டணம் குறையும் ஆனால்
இதன் மூலம் சுங்க கட்டணம் வெகுவாக குறையும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் டோல் கேட்கள் மூடப்படாது. அதாவது ஒரு டோல் கேட் என்பது குறிப்பிட்ட ஒப்பந்த காலத்திற்கு மட்டுமே இருக்கும். ஆனால் இந்த இப்பந்தம் முடிந்த பின் டோல் கேட்கள் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த நிதின் கட்கரி, டோல் கேட் தொடர்ந்து செயல்படும். அதன் கட்டணம்தான் சாலைகள் கட்ட, சாலைகள் பராமரிக்க பயன்படுத்தப்படுகிறது. அந்த சாலைகளை தொடர்ந்து பயன்படுத்து டோல் அவசியம். அதனால் டோல்கள் நீக்கப்பட்டது. டோல் தொடர்ந்து செயல்படும், என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பாஸ்ட் டாக் கவனம்
தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் 'ஒரு வாகனம், ஒரு FasTag' என்ற முறை செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முறை நடைமுறைக்கு வந்த நிலையில் இதில் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை வந்த பின்பே பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அதை அமல்படுத்த 3 அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
- அறிவிப்பு 1: பாஸ்ட் டாக் 5 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதை உடனே நீக்க வேண்டும்.
- அறிவிப்பு 2 : பாஸ்ட் டாக் 3 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதில் உடனே கேஒய்சி மாற்ற வேண்டும். .
- அறிவிப்பு 3 - பாஸ்ட் டேக் வாகனத்தின் முன் ஒட்டப்பட்ட வேண்டும். இல்லையென்றால் இரட்டை தொகை கட்ட வேண்டும்.
டோல்: இது போக விரைவில், இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான டோல் கட்டண முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டோல் கட்டண முறைகேடுகளை தவிர்ப்பது, பொய்யான டோல் கட்டண முறையை தடுப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
நாடு முழுக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) விரைவில் புதிய முறையை அறிமுகப்படுத்தும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மார்ச், 2024க்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண முறையை NHAI அறிமுகப்படுத்தும் என்று அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications