கிராம சாலைகள் எல்லாம் மொத்தமாக மாறப்போகுது.. மாபெரும் அறிவிப்பை வெளியிட்ட தங்கம்.. நோட் பண்ணுங்க
சென்னை: கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2000 கி.மீ. சாலைப்பணிகள் ₹1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் என்ற திருக்குறள் போல, நமது ஆட்சி நடந்து வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 100 ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் தமிழர்களை தலைநிமிரச் செய்துள்ளன. 1990-ல் இலவச மின்சார திட்டத்திற்கு ரூ.550 கோடி ஒதுக்கப்பட்டது; காலை உணவு திட்டத்திற்கு கடந்த நிதி ஆண்டில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது; மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு கடந்த நிதி ஆண்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சமூகநீதி, ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றம், தமிழ்நாட்டு இளைஞர்களை சர்வதேச சாதனையாளர்களாக மாற்றுவது, அறிவுசார் பொருளாதார வளர்ச்சி, சமநிலையுடன் கூடிய பெண் முன்னேற்றம், நிலையான எதிர்காலம், தமிழ்மொழி மற்றும் பண்பாடு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொல்லியல் துறை 5 கோடி ஒதுக்கீடு. அகழ்வாய்வுக்கு நாட்டிலேயே அதிகமாக தொகை ஒதுக்குவது தமிழகம்தான். விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 2023ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும்; கலைஞரின் கனவு இல்லம் என இத்திட்டத்திற்கு பெயர் சூட்டல்
தமிழ் இணைய மின் கல்வி நிலையங்களுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2000 கி.மீ. சாலைப்பணிகள் ₹1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும். தமிழ் மொழியை நவீனப்படுத்த கிமி உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ₹5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும். ₹65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும். கீழடியில் ₹17 கோடி செலவில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்
₹65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும். 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ₹356 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 5000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்ய ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகள் அகலப்படுத்தப்படும்.
18 மீட்டர் முதல் 30 மீட்டர் வரை சாலைகள் அகலப்படுத்தப்படும். 2,000 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்க ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.300 கோடியில் மாநகராட்சியை ஒட்டியுள்ள பகுதிகளில் சாலை வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பட்ஜெட் அறிவிப்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
இதனால் வரும் காலங்களில் கிராமங்களில் உள்ள சாலைகள் மொத்தமாக மாற உள்ளன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications