சென்னையில் இனிமே ஆட்டோவில் போகணும்னா.. பலமுறை யோசிக்கணும் போலயே.. இப்படி ஒரு ரூல்ஸ் போட்டாங்களே!
சென்னை: சென்னையில் இனிமேல் ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டும் என்றால் பல முறை யோசிக்க வேண்டும் என்ற அளவிற்கு முக்கியமான ரூல்ஸ் ஒன்று போடப்பட்டு உள்ளது.
சென்னையில் போக்குவரத்திற்கு என்று பல்வேறு வழிகள் உள்ளன. உதாரணமாக அதிக தூரம் செல்ல பேருந்துகள், மின்சார ரயில்கள் உள்ளன. சிட்டி உள்ளே செல்ல மெட்ரோ உள்ளது.

சிறிய தூரங்களுக்கு ஆட்டோ உள்ளது. அதேபோல் ஷேர் ஆட்டோ உள்ளது. இது போக அதிகாரப்பூர்வமற்ற முறையில் பைக் டாக்சி இயங்கி வருகிறது.
இதில் சிறிய தூரங்களுக்கு ஆட்டோவில் செல்வதற்கு ஓலா, உபர் வழியாகவும் ஆட்டோவை புக் செய்ய முடியும். இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னையில் இனிமேல் ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டும் என்றால் பல முறை யோசிக்க வேண்டும் என்ற அளவிற்கு முக்கியமான ரூல்ஸ் ஒன்று போடப்பட்டு உள்ளது.
இந்த விதி நேற்றில் இருந்துதான் அமலுக்கு வந்தது. சென்னையில் கார், பைக் ஓட்டும் நபர்களுக்கு முக்கியமான அறிவுரை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பாக வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டினால் வழக்கு பாயும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் பகலில் 40 கி.மீ. வேகத்திற்கு மேல் ஓட்ட கூடாது. அதேபோல் இரவில் 50 கி.மீ. வேகத்தை கடந்து வாகனம் ஓட்ட கூடாது.
மீறி ஓட்டினால் அதிவேக பயணம் என வழக்கு பதியப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பில் மக்கள் பலரும் கவனிக்க தவறிய விஷயம் ஆட்டோவிற்கான விதிகள் ஆகும். சென்னையில் ஆட்டோவில் , பகலில் 25 கி.மீ. வேகத்திற்கு மேல் ஓட்ட கூடாது. அதேபோல் இரவில் 35 கி.மீ. வேகத்தை கடந்து வாகனம் ஓட்ட கூடாது.
எனவே இனிமேல் சென்னையில் அவசரமாக எங்காவது செல்ல வேண்டும் என்றால் ஆட்டோவில் செல்வது சரியாக இருக்காது. ஆட்டோவிற்கு ஸ்பீட் லிமிட் 25 கிமீ என்று உள்ளதால் ஆட்டோவில் வேகமாக வேறு இடங்களுக்கு பயணம் செய்வது மிகவும் கடினம் ஆகும். இந்த புதிய விதி முறை மக்கள் இடையே விமர்சனங்களை சந்தித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு மெதுவாக சென்றால் கடுமையாக டிராபிக் ஜாம் ஏற்படும் என்று மக்கள் கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.
விதிகள்: ஏற்கனவே தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆம்புலன்சுக்கு வழிவிடுவது மிகப்பெரிய குற்றம். இது எந்த வாகனமாக இருந்தாலும் அந்த அபராதம் பொருந்தும்.
தீயணைப்பு வண்டி, அவசர வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றாலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தேவையின்றி ஹார்ன் அடித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆபத்தான முறையில் வண்டி ஓட்டினால் 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு வாகனங்களும் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே சரக்கை ஏற்றிச்செல்ல வேண்டும்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications