Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கொஞ்சம் இப்படி வாங்கம்மா".. நிலவுக்கு நெருப்பென்று பெயர் (8)

Subscribe to Oneindia Tamil

- சுதா அறிவழகன்

"ஆமா.. என் கடைசித் தம்பிதான்.. ஏன் என்னாச்சு".. முன்னாடி வந்து சொன்னார் ப்ரீத்தியின் அம்மா

"கொஞ்சம் இப்படி வாங்கம்மா" தனியாக அழைத்தார் போலீஸ்காரர்

ப்ரீத்தியும், அம்மாவுடன் எழுந்து வந்தாள்.

சுனிலுக்கு எதுவும் புரியவில்லை. இருந்தாலும் கூர்ந்து கவனித்தான்.

Nilavkukku Neruppendru Peyar Tamil series episode 8

ப்ரீத்தி, அவளது அம்மாவை அழைத்த போலீஸ்காரர் "அம்மா இந்த கருணாகரன் சொல்லித்தான் அந்த கத்திக்காரன் வந்திருக்கான்.. உங்களுக்கும், கருணாகரனுக்கும் ஏதாவது பிரச்சினையாம்மா"

"அயயயோ அப்படியா.. அடப்பாவி.. இப்படியா பண்ணுவான்" பதறிப் போனார் ப்ரீத்தியின் தாயார்.

"என்ன பிரச்சினைம்மா உங்களுக்குள்ள"

"அது.. இவளை கல்யாணம் பண்ணிக்க அவன் விரும்பினான்.. நிச்சயதார்த்தமும் கூட நடந்தது. ஆனால் கடைசியில் எதுவும் நடக்கலை.. அப்படியே நின்னு போச்சு.. அவனை என் மகளுக்கு பிடிக்கலை.. அதான் நிறுத்திட்டோம்"

டேபிள் மீது இருந்த பொருட்கள் சரிவது போல இருந்தது.. வேகமாக எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்.. வியர்க்க விறுவிறுக்க பேஸ்த் அடித்தாற் போல அமர்ந்திருந்தான் சுனில்.. டேபிளில் தடுமாறியது அவன்தான் என்று ப்ரீத்திக்கு உறைத்தது.. அவளுக்கும் முகம் நார்மலாக இல்லை.

ப்ரீத்தியின் அம்மாவிடம் திரும்பிய போலீஸ்காரர் "அப்படியாம்மா.. சரிம்மா.. நாங்க அவனை விசாரிச்சிட்டிருக்கோம்.. கொலை செய்யும் நோக்கில் வந்தது போல தெரியவில்லை.. ஆனால் நீங்க கொஞ்சம் கவனமா இருங்க" என்று சொல்லிவிட்டுப் போனார் போலீஸ்காரர்.

சுனிலுக்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.. ப்ரீத்திக்குள் இப்படி ஒரு பூகம்பமா என்ற அதிர்ச்சியிலிருந்து அவன் இன்னும் மீளவில்லை.

"என்னாச்சு சுனில்" இது ப்ரீத்தி.

"இல்லை.. ஒன்றும் இல்லை.. ஆமா எதுக்காக உங்க மாமா உங்களைக் கொல்ல ஆள் அனுப்பனும்"

"அது.. எனக்கும் தான் புரியலை.. அவர் முரட்டு ஆசாமி, குடிகாரர்.. நிறைய கெட்ட சகவாசங்கள் வேறு.. அதான் கல்யாணம் நடக்கலை.. நின்னு போச்சு.. பட்.. இப்படி அவர் செய்வார்னு நாங்க நினைக்கலை" .. பரபரப்புடன் கூறினாள் ப்ரீத்தி.

"சரி ப்ரீத்தி நீங்க இயல்பா இருங்க.. அம்மாவும் தனியா இருக்க வேண்டாம்.. அவங்களும் நம்ம கூடயே இருக்கட்டும்.. .நான் பாதுகாப்புக்கு இருக்கேன்.. தைரியமா இருங்க"

"ம் சரி.. ஸாரிங்க. உங்களுக்கு தேவையில்லாத டென்ஷனைக் கொடுத்திட்டோம்" ப்ரீத்தி வருத்தத்துடன் கூறினாள்.

"அட என்னங்க நீங்க.. இதெல்லாம் ஒரு கஷ்டமா.. உங்களுக்கு உதவியா இருக்கிறேன் என்பதுதான் எனக்கு முக்கியம்.. கவலைப்படாதீங்க.. ரிலாக்ஸ் ஆகுங்க.. அம்மா நீங்களும் இங்கேயே இருங்க.. நான் கொஞ்சம் போன் பேசிட்டு வந்துர்றேன்" சொன்னபடி வெளியே வந்தான் சுனில்.

---

விஸ்வநாதன் படு பிசியாக அமர்ந்திருந்தார்.. சுற்றிலும் ஃபைல்கள்.. எல்லாம் கடன் வாங்கி விட்டுத் தராமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தவர்களின் விவரம் அடங்கிய கோப்புகள்.. பின்னே.. வட்டிக்கு வட்டி மீட்டர் வட்டி என்று போனால் யாரால்தான் கட்டி மாள முடியும்.. அதையெல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்து இவர்களிடமிருந்து பணத்தைக் கறக்கலாம் என்ற பெரும்யோசனையில் விஸ்வநாதன்.. சுருக்கமாக சொல்வதானால்.. இவர் ஒரு வட்டிக்கு விடும் பணக்கார முதலை.

செல்போன் சிணுங்கியது.. டேபிளில் கிடந்த செல்லை எடுத்து காதில் ஒற்றினார் விஸ்வநாதன்.

"ஹலோ டாடி.. நான் மலர் பேசறேன்"

"சொல்லும்மா.. என்னாச்சும்மா. சாப்பிட்டியா"

"சாப்பிட்டேம்ப்பா.. அப்பா.. சுனிலைப் பார்த்தேன்"

"சுனிலா.. எங்கம்மா"

"இங்க என்னோட ஹாஸ்பிட்டல்லதான்"

"அங்க எதுக்கு வந்தான்"

"தெரியலை.. ஆனால் யாரோ பிரண்டுக்கு ஆக்சிடன்ட்டாம். அதான் வந்திருக்கான்"

"ஓஹோ.. அதுக்கு என்னம்மா நமக்கு.. அவன் எக்கேடோ கெட்டுப் போறான், விடும்மா"

"இல்லப்பா.. அந்த பிரண்ட்.. ஒரு பொண்ணு.. அழகா வேற இருக்கா"

"என்னது பொண்ணா.. யாரும்மா அவ.. விசாரிச்சியா"

"பேரு ப்ரீத்திப்பா. சேத்துப்பட்டுல இருக்கா. வண்டி இடிச்சு வந்து அட்மிட் ஆகியிருக்கா. சுனிலுக்கும் அவளுக்கும் என்ன மாதிரியான தொடர்புன்னு தெரியலைப்பா.. விசாரிக்கணும்.. மனசுக்கு கஷ்டமா இருக்குப்பா"

"நீ அதை விடு.. நான் பாத்துக்கறேன்.. ஆமா.. நீ ரிலாக்ஸா இரு.. அங்க இருக்காதே.. கிளம்பி வந்துடு.. நாளைக்கு டூட்டிக்குப் போ.. இல்லாட்டி அவங்க அங்க இருந்து போற வரைக்கும் லீவு போடு.."

"இல்லப்பா.. நான் இருக்கேன்.. என்ன மேட்டர்னு எனக்கும் தெரியணும்.. அதுக்கு இங்க இருந்தாதான் சரியா இருக்கும்"

"சரி.. ஆனா டென்ஷன் ஆகாத.. அந்த பயலையும், பொண்ணையும் நான் பாத்துக்கறேன்.. நிம்மதியா இருக்க விட மாட்டேங்குறானே இவன்"

"அப்பா.. தப்பா எதையும் பண்ணிடாதீங்க.. ஜஸ்ட் உங்க கிட்ட சொன்னேன்.. சரிப்பா.. நான் அப்பறம் பேசறேன்"

"ம்.. சரிம்மா.."

மனசெல்லாம் குமுறியது விஸ்வநாதனுக்கு.. இந்த சுனிலை என்ன செய்றது.. பெரிய டார்ச்சரா இருக்கே இவனோட.. என்று மனதுக்குள் கருவியபடி.. மீசையை தடவிக் கொண்டார்.. மீண்டும் செல்போன் சிணுங்கல்.

"விஸ்வநாதன் ஹியர்"

"சார்.. கருணாகரன் பேசறேன்"

(தொடரும்)

பகுதி [1, 2, 3, 4, 5, 6, 7, 8]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+