மூன்று நடிகையை கடத்தினாங்களா? அதுவிடுங்க, அரசியலில் நடிகர் கார்த்திக்கின் புரட்சி சாதனை: பிரபலம் நச்
சென்னை: எந்த தயாரிப்பாளர் என்றாலும் 5 லட்சம் ரூபாய் முதலில் அட்வான்ஸ் வாங்கிவிடுவார் கார்த்திக்.. ஒருகாலத்தில் கொடி கட்டி பறந்த நடிகர்.. பல படங்கள் கார்த்திக்குக்கு வெற்றிகளை தேடி தந்தன.. தொடர் வெற்றிகளின்போது, சிறிது காலம் மிகவும் சின்சியராக உழைத்தார்.. எனினும் எதிர்காலத்தை பற்றி அப்போது கவலைப்படாமலேயே விட்டுவிட்டார் கார்த்திக் என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Prime 9 Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், ஒரு படத்தில் கார்த்திக் நடித்தபோது, ஊட்டியில் ஷூட்டிங் நடந்தது, அப்போது டீ எஸ்டேட் மகள் குமாரி என்பவர்தான் அந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார். இருவருக்கும் அந்த படத்தில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது.

படத்தின் ஷூட்டிங் முடிந்து கார்த்திக்கும் சென்னை திரும்பிவிட்டார். அப்போதுதான் குமாரி, 4 மாத கர்ப்பம் என்பது அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. உடனே குமாரியின் சகோதரர்கள் 2 பேரும் சென்னைக்கு வந்து கார்த்திக்கிடம் திருமணத்துக்கு பேச்சு நடத்துகிறார்கள்.
ஊட்டியில் திருமணம்
ஆனால் கார்த்திக்கோ குமாரியை திருமணம் செய்ய மறுக்கிறார். இதனால் உக்கிரமாகிவிட்ட சகோதரர்கள், கார்த்திக்கை ஊட்டிக்கே கடத்தி கொண்டு போய், குமாரியின் கழுத்தில் தாலி கட்ட வைத்தார்கள்.. பிறகு குமாரியின் தங்கையையும் திருமணம் செய்துகொண்டார். கார்த்திகை காதலித்த நடிகை ஒருவர், மருந்து குடித்து தற்கொலை வரை சென்ற கதையும் உண்டு.
கார்த்திக் எங்கே அவுட் டோர் ஷூட்டிங் என்றாலும் 2 நாள் ஓட்டல் ரூமிலேயே தூங்கிவிடுவார். இதுதான் அவரிடம் உள்ள கெட்ட பழக்கம். இதனாலேயே பல ஷூட்டிங்குகள் பாதிக்கப்பட்டன.
நொந்துபோன தயாரிப்பாளர்கள்
என்னுடைய நண்பர் கார்த்திக்கை வைத்து தீ இவன் என்று ஒரு படம் எடுத்தார்.. ஆனால் அந்த படத்துக்கும் சரியாக கார்த்திக் ஒத்துழைப்பு கொடுக்காமல், டூப் வைத்து படத்தை முடிக்கும் நிலைமை வந்தது.
எந்த தயாரிப்பாளர் என்றாலும் 5 லட்சம் ரூபாய் முதலில் அட்வான்ஸ் வாங்கிவிடுவார் கார்த்திக்.. அந்தவகையில் மாதம் 2 படத்துக்கு அட்வான்ஸ் வாங்கிவிடுவார். பிறகு அரசியலுக்கு வந்தார்.. தேர்தல் சமயத்தில் 2 கோடி தந்ததுமே பிரச்சாரம் மேற்கொள்வார். ஆனால் எப்போது தூங்கி எழுகிறாரோ அப்போதுதான் பிரச்சாரம் செய்வார்.
ஆனால் ஒருகாலத்தில் கொடி கட்டி பறந்த நடிகர்.. பல படங்கள் கார்த்திக்குக்கு வெற்றிகளை தேடி தந்தன.. தொடர் வெற்றிகளின்போது, சிறிது காலம் மிகவும் சின்சியராக உழைத்தார்.. எனினும் எதிர்காலத்தை பற்றி அப்போது கவலைப்படாமலேயே விட்டுவிட்டார் கார்த்திக்.
3 ஹீரோயின்கள்
குறிப்பிட்ட நேரத்துக்கு ஷூட்டிங் வராததாலும், சில சமயம் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமலும், கார்த்திக்கை வைத்து வேலை வாங்க முடியாது என்பதாலும், தங்களுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டமாகிவிடும் என்பதாலும் பல தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடிவிட்டார்கள்.
சினிமாவில் தாதாக்களின் தலையீடுகள் அதிகம். அந்தவகையில் கார்த்திக்குக்கும் அதில் சிக்கியிருக்கிறார்.. ஒரு படத்தில் 3 நடிகைகள் சேர்ந்து நடித்தார்கள். அந்த படத்தில் பைனான்ஸ் பிரச்சனை வெடிக்கவும், 3 ஹீரோயின்களையுமே கடலுக்கு கடத்தி கொண்டுபோன சம்பவமும் நடந்துள்ளது.. இப்படி கடத்தல் என்பது சர்வசாதாரணம்.
புரட்சி சாதனை செய்த கார்த்தி
பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு பிரபலமான தலைவர் தேவைப்பட்டது.. முக்குலத்தோர் சமுதாயமாகவும் இருக்க வேண்டும்.. ஓட்டு கேட்டு சென்றால் மக்கள் கூட வேண்டும்.. இதையெல்லாம் கணக்கில் வைத்துதான் கார்த்திக்கை தேர்வு செய்தார்கள். ஆனால், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை எல்லாம் நிறுத்தி கார்த்திக் ஓட்டு வாங்கியது, உண்மையிலேயே அது மிகப்பெரிய புரட்சிதான்.
அதேபோல இவரது கட்சியை சார்ந்த அத்தனை பேருக்கும் சீட்டு கிடைத்தது.. இதனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முக்குலத்தோர் ஓட்டு போட்டார்கள். இதெல்லாம் உண்மையிலேயே கார்த்திக் செய்த பாராட்டத்தக்க புரட்சிதான்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications