45 Movie Review: சிவராஜ்குமாரின் "45” படம் எப்படி இருக்கு? இதுதான் கதை! வாங்க பார்க்கலாம்!
சென்னை: கன்னட சினிமாவில் சமீப காலமாக வித்தியாசமான கதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது கவனம் ஈர்த்திருக்கும் படம் தான் '45'. சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி.ஷெட்டி என மூன்று வலுவான நடிகர்களை ஒரே படத்தில் இணைத்திருப்பது மட்டுமல்லாமல், வாழ்க்கை, பாவம், புண்ணியம், விதி ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதையை தேர்வு செய்திருப்பது இந்த படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது.
கதையின் ஓட்டம்
வினய் (ராஜ் பி.ஷெட்டி) தனது அம்மா மற்றும் காதலி மேகனாவுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஒரு நாள், வேலைக்கு அவசரமாக செல்லும் போது, போன் பேசிக்கொண்டே சாலை கடக்கும் போது ஒரு நாயை மோதிவிட்டு செல்கிறார். அதனைத் தொடர்ந்து வினய்க்கு ஒரு கனவு வருகிறது; அந்த கனவில் நாயும், வினயும் உயிரிழக்கிறார்கள்.

அது கனவு என நினைத்து மீண்டும் வாழ்க்கையை தொடரும் வினய், அடுத்த நாள் போன் பேசாமல் சென்றாலும், அதே சம்பவம் நிஜமாக நடக்கிறது. இந்த விபத்து வினய்யின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. அந்த நாயின் உரிமையாளர் ராயப்பா (உபேந்திரா) எனும் பயங்கரமான டான், வினய்யை கடத்தி, "45 நாட்களில் உன்னை நான் கொல்வேன்" என்று எச்சரித்து விடுகிறார்.
அதன்பின் ஒவ்வொரு நாளும் வினய்யின் வாழ்க்கை பயத்தில் உறைகிறது. தன்னை காப்பாற்றிக்கொள்ள பெரிய பெரிய டான்களை நாடும் வினய், அவர்களை எல்லாம் ராயப்பா கொன்று விடுவது இன்னும் பெரிய அதிர்ச்சியை தருகிறது.
இனி தன் உயிரைக் காப்பாற்றுவது கடவுளின் கையில்தான் என வினய் முற்றிலும் உடைந்து போகும் தருணத்தில், சிவண்ணா (சிவ ராஜ்குமார்) அவரது வாழ்க்கையில் நுழைகிறார். அவர் யார்? வினயை ஏன் காப்பாற்ற வேண்டும்? ராயப்பாவின் கோபத்திற்குப் பின்னால் என்ன காரணம்? 45 நாட்கள் என்பதன் அர்த்தம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
இந்த படத்தில் ஷிவா ராஜ்குமார், உபேந்திரா ஆகியோர் இருந்தாலும், உண்மையான கதையின் மையம் ராஜ் பி.ஷெட்டிதான். ஒரு சாதாரண மனிதன் செய்த ஒரு தவறு, அவனது முழு வாழ்க்கையையும் எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதையே இயக்குநர் மிக அழுத்தமாக சொல்கிறார். கருட புராணத்தை அடிப்படையாகக் கொண்டு, பாவம் - புண்ணியம் - தண்டனை என்ற கருத்தை கமர்ஷியல் சினிமாவின் வடிவில் சொல்ல முயற்சித்திருக்கிறார்.
முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், அது கதையின் ஆழத்தை புரிய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இரண்டாம் பாதியில் சிவா ராஜ்குமாரின் வருகைக்குப் பிறகு, படம் வேகம் எடுக்கிறது. உபேந்திரா, ராயப்பா கேரக்டர் வழக்கமான வில்லன் அல்லாமல், ஒரு கொள்கை கொண்ட, கொடூரமான மனிதராகவே பயமுறுத்துகிறார்.
தொழில்நுட்ப அம்சங்கள்
ஒளிப்பதிவு இருண்ட காட்சிகளுடன் கதையின் மனநிலையை நன்றாக பிரதிபலிக்கிறது. பின்னணி இசை பல இடங்களில் பதற்றத்தை கூட்டுகிறது. சண்டைக் காட்சிகள் அளவோடு இருந்தாலும், மனநிலையால் தாக்கும் காட்சிகள் அதிகம்.
வசூல் நிலவரம்
'45' திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் கன்னட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக சிவ ராஜ்குமார் மற்றும் உபேந்திராவின் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்துள்ளனர். ஆரம்ப நாட்களில் நகர்ப்புற திரையரங்குகளில் நல்ல ஹவுஸ்-ஃபுல் காட்சிகள் பதிவாகியுள்ளன. சரியான வசூல் கணக்குகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம், முதலீட்டை மீட்டெடுக்கும் பாதையில் செல்வதாகவே கன்னட சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'45' என்பது வழக்கமான மாஸ் ஆக்ஷன் படம் அல்ல. இது வாழ்க்கையைப் பற்றி கேள்வி எழுப்பும் படம். பொறுப்பு, பாவம், விதி ஆகியவற்றை சினிமா மொழியில் சொல்ல முயன்றிருக்கும் ஒரு முயற்சி. மெதுவான திரைக்கதை பிடிக்காதவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால் வித்தியாசமான கதைகளையும், ஆழமான கருத்துகளையும் விரும்புபவர்களுக்கு '45' நிச்சயம் ஒரு கவனிக்க வேண்டிய திரைப்படம்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications