Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல்லாயிரம் கோடி சொத்துக்காரர் அரவிந்த்சாமி.. அரசு பஸ்ஸில் பயணம்.. எளிய நடிகரின் சீக்ரெட் சக்ஸஸ் இது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரவிந்த்சாமி பல்லாயிரம் கோடி சொத்துக்கு அதிபதியாக இருந்தாலும், எளிமையும், பண்பும் நிறைந்தவர்.. அனைவருக்குமே மரியாதை தரக்கூடியவர்" என்று புகழ்ந்து பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.. மேலும், அரவிந்த்சாமி குறித்த பல்வேறு தகவல்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "தளபதி படத்தில் கலெக்டர் ரோலில் நடிக்க மிகப்பெரிய ஆடிஷனை நடத்தினார் மணிரத்னம்.. பார்ப்பதற்கு கலெக்டர் தோரணையில், ராயல் லுக்குடன் இருக்க வேண்டும் என்பதால் அந்த கேரக்டருக்கு நடிகரை தேர்ந்தெடுக்க நிறையவே சிரமப்பட்டார்.. நூற்றுக்கணக்கான நபர்கள் இந்த கேரக்டரில் நடிக்க குவிந்தனர்.

Cinema Arvind Swami Government Bus

ஆனால் ஒருநாள் டிவி பார்த்தபோது, அதில் காபி விளம்பரத்தில் நடித்தவரை பார்த்துவிட்டு, மிகவும் இம்ப்ரஸ் ஆகிவிட்டார்.. அவர் யார் என்பதை விசாரித்து நேரில் பேச வர சொல்லி உள்ளார்.. மணிரத்னம் என்ற பெரிய டைரக்டருடன் நடிக்க போகிறோமே என்ற பயமே இல்லாமல் அரவிந்த்சாமியும் கேஷூவலாக வந்தாராம்.

அரவிந்த்சாமி எளிமை

படத்தின் கதையை பற்றி மணிரத்னம் சொல்லி கொண்டிருந்தபோதே, சார் நான் ஒரு ஸ்மோக் பண்ணிட்டு வந்துடட்டுமா என்று கேட்டாராம் 20 வயது அரவிந்த்சாமி.. ஆச்சரியத்துடன் பார்த்த மணிரத்னம், சரி போயிட்டு வா என்றாராம்..

பிறகு சிகரெட் பிடித்துவிட்டு வந்து, இந்த படத்தில் என் கேரக்டர் என்ன? என்று கேட்டாராம் அரவிந்த்சாமி.. பிறகு அரைமனதுடன் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.. இப்படித்தான் தளபதி படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார் அரவிந்த்சாமி..

பல்லாயிரம் கோடி சொத்துக்கள்

பிரபல டிவி சீரியல் நடிகர் டெல்லி குமாரின் சொந்த மகன்தான் அரவிந்த்சாமி.. டெல்லி குமாரின் சகோதரிக்கு குழந்தை இல்லாததால், அரவிந்த் சாமியை குழந்தையிலேயே தத்தெடுத்து தந்துவிட்டாராம் டெல்லி குமார். சகோதரியின் கணவர் மிகப்பெரிய கோடீஸ்வரர், அந்த காலத்திலேயே மிகப்பெரிய செல்வந்தர்.. அவரது வாரிசாகவே, அந்த பங்களாவில்தான் அரவிந்த்சாமி வளர்ந்தார்.

மிகப்பெரிய பணக்கார குடும்பத்தில் அரவிந்த்சாமி வளர்ந்தபோதும், அவரது வளர்ப்பு தந்தை அவருக்கு வாழ்க்கையின் மதிப்பை கற்றுக்கொடுத்தார்.

"உன்னுடைய வாழ்க்கையை நீதான் வாழணும், பணத்தின் அருமை தெரியணும்" என்று சொல்லி தந்து வளர்த்தாராம்.. எனவே, ஸ்கூலுக்கு செல்ல பஸ் பாஸ் எடுத்து பஸ்ஸில் செல்லவும், பிறகு சைக்கிள் பயன்படுத்தவும் அரவிந்த்சாமியை பழக்கப்படுத்தி உள்ளார்.

தினமும் பாக்கெட் மணி ரூ.10

அரவிந்த்சாமிக்கு தினமும் பாக்கெட் மணியாக ரூ.10 மட்டுமே கொடுத்தாராம்.. ஆனால் அந்த பணம் அரவிந்த்சாமிக்கு போதவில்லை. சுயமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உந்துதல் இதன்மூலம்தான் அரவிந்தசாமிக்கு அன்று ஏற்பட்டதாம்.. இதற்கு பிறகே அரவிந்த்சாமி மாடலிங்கில் நுழைந்துள்ளார்.. வளர்ப்பு தந்தை தன் மகனை பக்குவப்படுத்தி வளர்த்ததுதான் இதற்கெல்லாம் காரணம்.

அரவிந்த்சாமிக்கு 'தனி ஒருவன்' போன்ற மார்டன் அல்லது ஸ்பெஷல் கேரக்டர்களே பொருந்துமே தவிர, கிராமத்து இளைஞன் வேடத்தில் அவரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.. அப்படித்தான் லுங்கி கட்டி தாலாட்டு என்ற படத்தில் நடித்திருந்ததார்.. இந்தப் படம் சுத்தமாக ஓடவில்லை. இது போன்ற கேரக்டர்களை தேர்வு செய்தது, அவரது கேரியரில் பின்னடைவை தந்துவிட்டது.

படுத்த படுக்கையில் அரவிந்த்சாமி

நடிகர் அரவிந்த் சாமியை, "அரவிந்த்சாமி மாதிரி ஒரு மாப்பிள்ளை வேணும்" என்று பெண்கள் கொண்டாடிய காலத்திலேயே, நேர்மாறாக ஒரு விஷயம் அரவிந்த்சாமிக்கு நடந்தது. அதற்கு பிறகுதான் கடினமான சூழலை தன் வாழ்நாளில் எதிர்கொண்டார்.. அரவிந்த் சாமிக்கு திருமணம் நடந்து, அது மணமுறிவையும் தந்துவிட்டது.. 3 மற்றும் 7 வயது பெண் குழந்தைகள் இருவரையுமே அரவிந்த்சாமியிடம் விட்டுவிட்டு சென்றுவிட்டார் முதல் மனைவி..

தன்னுடைய அம்மா, அப்பாவும் காலமாகிவிட்ட நிலையில், அந்த குழந்தைகளை தானே வளர்க்க ஆரம்பித்தார் அரவிந்த்சாமி..

இந்த நேரத்தில் ஒரு விபத்தையும் சந்தித்தார் அரவிந்த்சாமி.. முதுகுதண்டில் அடிபட்டு அவரால் எழுந்து நடக்க முடியவில்லை.. 2, 3 வருடங்களுக்கு படுக்கையிலேயே கை, கால் செயலற்று படுத்திருந்தார்.. பலவிதமான சிகிச்சைகளை மேற்கொண்டு, அதற்கு பிறகுதான் அவைகளை முறியடித்து குணமாகிவந்தார்..

தலைமுடி, உடல் எடை

எனினும், சிகிச்சையின்போது மாத்திரைகள் அதிக அளவு சாப்பிட்டது, அவரது உடல் எடை அதிகமாக்கிவிட்டது.. தலைமுடியும் கொட்டிவிட்டது.. எனவே, அழகு என்பது நிரந்தரமில்லை.. அழகு என்பது மனம்தான்.. அப்படித்தான், அரவிந்த்சாமி, மீண்டு வந்து, 2வது ரவுண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பல்லாயிரம் கோடி சொத்துக்கு அதிபதியாக இருந்தாலும், எளிமையும், பண்பும் நிறைந்தவர் அரவிந்த்சாமி.. அனைவருக்குமே மரியாதை தரக்கூடியவர்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+