எங்க தாத்தா யாரு தெரியுமா? அவங்களால்தான் அப்பாவும் தேசப்பற்றோடு.. கையில் கூட அப்படி! அர்ஜுன் மகள் உருக்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் "ஆக்ஷன் கிங்" என்ற பெயரால் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் அர்ஜுன். சண்டைக்காட்சிகள், போலீஸ் வேடங்கள், நாட்டுக்காக போராடும் கதாபாத்திரங்கள் என பல்வேறு ரூபங்களில் அவர் நடித்திருந்தாலும், அவரை தனித்துவமாக காட்டுவது - அவரது படங்களில் வெளிப்படும் தேசப்பற்று உணர்வும் சமூக பொறுப்பும் தான்.
திரையில் மட்டுமல்ல, அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் இந்த தேசப்பற்று ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்பதை, சமீபத்தில் அவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

சுதந்திர போராட்ட வீரர்
அந்த பேட்டியில், தனது தாத்தா சுதந்திர போராட்ட வீரர் என்பதையும், அந்த மரபு தான் தன் அப்பாவான அர்ஜுனிடம் இயல்பாகவே வந்துள்ளதாகவும் ஐஸ்வர்யா மனம்திறந்து பேசியுள்ளார். "அப்பா கைல போட்டிருக்கிற தேசிய கொடி டாட்டூ கூட வெளிநாட்டில் போட்டது. அதை முதலில் பார்த்தபோது எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு. தேசப்பற்று என்பது தனி ஒரு விஷயம் கிடையாது, ஒவ்வொரு இந்தியனுக்குள்ளயும் இருக்க வேண்டிய அடிப்படை உணர்வு"ன்னு அப்பா அடிக்கடி சொல்லுவார்" என அவர் பகிர்ந்த கருத்துகள், சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரையும் உணர்ச்சி வசப்படுத்தியுள்ளது.
ஐஸ்வர்யா அர்ஜுன் பேட்டி
ஒரு நடிகரின் குடும்பத்தில் கூட, தேசப்பற்று தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது என்பதே பலருக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது. திரைப்படங்களில் அர்ஜுன் நடித்த பல கதாபாத்திரங்களும் தேசப்பற்றை மையமாக கொண்டவை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 'ஜெய்ஹிந்த்', 'குருதிப்புனல்', 'ஜென்டில்மேன்' போன்ற படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள், சமூக அநீதிக்கு எதிராக போராடும், நாட்டின் நலனுக்காக குரல் கொடுக்கும் நாயகர்களாக அமைந்தன.
குறிப்பாக 'ஜெய்ஹிந்த்' படத்தில், நாட்டுக்காக குரல் கொடுக்கும் இளைஞராக அவர் நடித்த கேரக்டர் இன்றளவும் ரசிகர்களிடையே பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த படம் வெளியான காலத்தில், "தேசப்பற்று பேசும் ஹீரோ" என்ற ஒரு அடையாளத்தை அர்ஜுனுக்குக் கொடுத்தது.
ஆக்ஷன் ஹீரோ அர்ஜுன்
அர்ஜுன் வெறும் ஆக்ஷன் ஹீரோ மட்டும் அல்ல; பல படங்களில் போலீஸ் அதிகாரி, ராணுவ அதிகாரி போன்ற வேடங்களில் நடித்ததன் மூலம், சட்டம், நீதி, தேசம் என்ற மூன்றையும் இணைக்கும் கேரக்டரை உருவாக்கியவர். அந்த கதாபாத்திரங்கள் திரையில் மட்டுமே நிற்காமல், இளைஞர்களிடையே ஒரு வகையான விழிப்புணர்வையும் உருவாக்கியதாக பலரும் கூறுகிறார்கள்.
Durandhar Sara Arjun: விக்ரம் மகள்.. துரந்தர் படத்தில் ஹீரோயினியாக கலக்கும் சாரா அர்ஜுன் யார் தெரியுமா?
"நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும்" என்ற உணர்வை சில படங்கள் விதைத்திருக்கிறது என்றால், அதில் அர்ஜுன் நடித்த படங்களுக்கும் ஒரு பங்கு உண்டு என்பதே ரசிகர்களின் கருத்து. சினிமாவைத் தாண்டி, சமூக பொறுப்பும் அர்ஜுனின் வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக நலன் தொடர்பான நிகழ்ச்சிகளில் அவர் அவ்வப்போது கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
நாட்டுப்பற்று
இளைஞர்களிடம் ஒழுக்கம், நாட்டுப்பற்று, சமூக அக்கறை ஆகியவை வளர வேண்டும் என்ற கருத்துகளை அவர் பல மேடைகளில் பேசியிருக்கிறார். இதனால் தான், அவர் நடித்த கதாபாத்திரங்கள் நிஜ வாழ்க்கையிலேயே அவருடைய சிந்தனைகளுடன் ஒத்துப்போகும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications