நியாயம் டா.., நேர்மை டா.. மதுரையில் ஆக்ரோஷமான நடிகர் விஜயகுமார்.. துணை குடியரசு தலைவருக்கு புகழாரம்
மதுரை: மதுரை மாநகரில் நேற்று வ.உ.சிதம்பரனாரை போற்றும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜயகுமார் தான் நடித்த நாட்டாமை பட வசனத்தை பேசி குடியரசுத் துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை புகழ்ந்து இருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜயகுமார் பேட்டி
அதில் நடிகர் சிவகுமார் பேசும்போது, "நான் இந்த கலைத் துறைக்கு வந்து கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு இப்போது 80 வயதாகிறது. தமிழ், மலையாளம், ஹிந்தி என அத்தனை மொழிகளிலும் நான் 800 மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். இந்த வயதிலும் என்னுடைய கலைத் துறையை பாராட்டி, அருமை சகோதரர் மதிப்புக்குரிய ஏசி சண்முகம் தன்னுடைய எம்ஜிஆர் யுனிவர்சிட்டியில் எனக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து பெருமைப்படுத்துகிறார், என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
கல்வியாளர் A. C. Shanmugam தலைமையிலான Dr. M.G.R. Educational and Research Institute வழங்கிய அந்த கௌரவத்தை அவர் தனது வாழ்க்கையின் முக்கியமான அங்கீகாரமாக குறிப்பிட்டார்.
நடிகர் விஜயகுமார் ஆதங்கம்
அதன் பின்னர் அவர் மிகவும் தாக்கம் ஏற்படுத்திய ஒரு வரியை கூறினார்: "மனிதன் வாழ்வது எத்தனை காலம் என்பது முக்கியமல்ல. அவன் வாழ்ந்த காலத்தில் என்னென்ன செய்தான் என்பதுதான் முக்கியம்." தேசியப் போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளை V. O. Chidambaram Pillai பற்றி பேசும்போது, "வ.உ.சி நாட்டு மக்களுக்கும் செய்த தியாகம் நிச்சயமாக ஒரு பெருமை. அவர் செய்தது சாதாரண விஷயம் அல்ல. அந்த தியாகத்தை நாம மறக்கக் கூடாது," என்றார்.
மதுரையின் சிறப்பு
அவர் தொடர்ந்து, "குஜராத்தில் நரேந்திர மோடி (Narendra Modi), வல்லபாய் பட்டேல் (Vallabhbhai Patel) க்கு சிலை வைத்தார்களோ, அதேபோல மதுரை மாநகரத்தில் வ.உ.சிக்கு சிலை வைத்திருக்கிறார் ஏசி சண்முகம். மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவில் (Meenakshi Amman Temple), (கள்ளழகர்) Kallazhagar என்பதே பெருமை. இதற்கு பிறகு இந்த வ.உ.சி சிலையும் மதுரைக்கு ஒரு புதிய பெருமையை வாங்கித் தரும். இது பலருக்கும் உண்மையாகிவிட்டது," என்று உறுதியாகக் கூறினார்.
நாட்டாமை பட வசனம்
தான் நடித்த திரைப்படங்களை நினைவுகூர்ந்த அவர், "நான் எத்தனையோ படங்களில் நடித்தேன். அதில் நாட்டாமை (Nattamai) என்ற ஒரு படத்தில் நான் பேசும் ஒரு வசனம் உங்களுக்கு எல்லாம் தெரியும். அண்ணனாக இருந்தாலும், தம்பியாக இருந்தாலும், மகனாக இருந்தாலும், மாமனாராக இருந்தாலும், மச்சானாக இருந்தாலும் - 'நியாயம் டா... நீதி டா... நியாயம் டா... நேர்மை டா...' அது நமது துணைகுடியரசு தலைவர் சி பி ராதாகிருஷ்ணனுக்கு பொருந்தும் என்று பாராட்டி இருந்தார்.
பிரதமருக்கு பாராட்டு
அவர் தனது பேச்சின் கடைசியில் துணைகுடியரசுத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் "உண்மையும் உழைப்பும் உள்ளவர். எந்த துறையில் இருந்தாலும் அதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். கொங்கு மண்டலத்தில் பிறந்து, பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, பல பதவிகளை வகித்து, படிப்படியாக முன்னேறி, ஒரு மாநிலத்தின் ஆளுநராகி, இன்று இந்திய குடியரசின் உயர்ந்த பதவியில் இருக்கிறார் என்றால் அதற்கு ஒரே காரணம் நரேந்திர மோடி ஜி தான். அவருக்கு எங்கு எப்படிப்பட்டவரை வைக்க வேண்டும் என்பது சரியாக தெரியும். அதனால் நரேந்திர மோடி சரியாக செய்யக்கூடிய ஒரே தலைவர்," என்று அவர் பாராட்டினார்.
நடிகர் விஜயகுமார் 80 வயதிலும் குறையை அதை எனர்ஜியுடன் மேடையில் ஆக்ரோஷமாக பேசியது வீடியோவில் வைரலாகி வருகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications