Exclusive: ஆபாசமான மெசேஜ், அந்த நபரை தெருவில் போட்டு அடித்த காரணம் இதுதான்! நடிகை அஸ்வினி ஆதங்கம்
சென்னை: சோசியல் மீடியாவில் வைரலான ஒருவரை அடித்த வீடியோ குறித்து நடிகையும் ஷார்ட் பிலிம் இயக்குனருமான அஸ்வினி மணிவண்ணன் நம்மிடம் மனம் திறந்து பேசினார். அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் கோபம் இல்லை... வலி தான் இருந்தது.
சில நாட்களுக்கு முன்பு, தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நடிகை அஸ்வினி மணிவண்ணன், தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபரின் ஸ்கிரீன்ஷாட்களை வெளியிட்டு, அந்த நபர் மீது சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த பதிவு இணையத்தில் வேகமாக வைரலானது.
இந்த நிலையில், நேற்று அந்த ஆபாச மெசேஜ் அனுப்பிய நபரை நேரில் கண்டுபிடித்து, அவரை அடி வெளுத்து வாங்கி இருக்கிறார், அந்த நபரை அடித்ததை லைவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அஸ்வினி நம்மிடம் பேசும் போது, "இந்த நபர் எனக்கு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆபாசமான மெசேஜ்கள் அனுப்பினார். ஆரம்பத்தில் நான் அதை பொருட்படுத்தவில்லை. ஆனால் அந்த வார்த்தைகள் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போனது. அதனால் தான் அந்த மெசேஜ்களை என் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, இப்படி மெசேஜ் அனுப்பும் நபர்களை என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டு ஒரு வீடியோ போட்டேன்" என்றார் அஸ்வினி.
அந்த வீடியோவுக்குப் பிறகு தான் உண்மை இன்னும் பயங்கரமாகத் தெரிய வந்ததாம்.
"பல பெண்கள், சில பெண்களின் கணவர்கள் கூட எனக்கு தனிப்பட்ட மெசேஜ் அனுப்பினார்கள். எங்களுக்கும் இதே நபர் இப்படிதான் மெசேஜ் அனுப்பியிருக்கிறார்... நாங்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்... குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியே சொல்ல முடியவில்லை என்று சொன்னார்கள்.
ஒரு ஆண் வந்து, என் மனைவி இன்னும் அந்த நபர் அனுப்பிய மோசமான மெசேஜால் ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து வெளியே வரவில்லை என்று சொன்ன போது எனக்கு மிகவும் வலித்தது" என்கிறார்.
இதற்குப் பிறகு தான், கடந்த ஜனவரி 24, 2026 அன்று சென்னை CBCID Cyber Cell-ல் ஆன்லைன் புகார் கொடுத்ததாக அஸ்வினி தெரிவித்தார்.
"புகார் கொடுத்த பிறகும் அந்த நபர் திருந்தவில்லை. கம்ப்ளைன்ட் காபி அனுப்பியும், அவன் தொடர்ந்து ஆபாசமாக மெசேஜ் அனுப்பினான். அப்போ தான் இவன் யார்? எங்க இருக்கான்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தேன்" என்றார். அதன் தொடர்ச்சியாக, அந்த நபர் வேலை பார்த்த கடையை தேடி சென்றபோது, அவர் அங்கிருந்து விலகி விட்டதாக சொல்லப்பட்டதாம்.
அந்த நாளில், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஹாஸ்பிட்டலுக்கு சென்று திரும்பும் போது, டி நகரில் ஒரு ஹோட்டலில் அந்த நபரை பார்த்ததாக அஸ்வினி கூறினார்.
"என்னுடன் வந்த என் தம்பி தான், அக்கா... இவன் தான் அந்த நபர் போல இருக்கு என்று சொன்னாராம். நாங்கள் சென்று விசாரித்தோம். அவன் தொடர்ந்து பொய் சொல்லிக் கொண்டே இருந்தான். போன் இல்ல, ரிப்பேருக்கு கொடுத்துட்டேன் என்றான். பக்கத்தில் இருந்தவரே இப்பதானே போன் கையில இருந்தது என்று சொன்னார்.
அவ்வளவு வலியைக் கொடுத்தவன், நேரில் பிடித்த பிறகும் பொய் சொல்லி அலட்சியம் செய்த போது... அந்த கோபம் தான் வெளிப்பட்டது" என்று கண்களில் நீருடன் சொன்னார்.
"நான் அடித்தது விளம்பரத்துக்காக இல்லை. என்னை மட்டும் அல்ல... பல பெண்களை மன ரீதியாக காயப்படுத்திய ஒருவனுக்கு எதிரான வெடிப்பு அது.
100-க்கு கால் செய்தோம். போலீஸ் வந்து விசாரித்தார்கள். இப்போது எங்களை ஸ்டேஷனுக்கு வர சொல்லி இருக்கிறார்கள். சட்டப்படி நான் எதிர்கொள்ள தயார்" என்று உறுதியாக பேசினார். இந்த சம்பவத்துக்குப் பிறகு, சோசியல் மீடியாவில் அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் இரண்டுமே வந்துள்ளன.
"பல பெண்களும், சில ஆண்களும் நீங்கள் செய்தது சரி என்று சொல்கிறார்கள். ஆனால் சிலர் நான் விளம்பரம் தேடுகிறேன், நடத்தை சரியில்லாதவள் என்று கூட பேசுகிறார்கள்.
நான் விளம்பரம் தேட இதைவிட வேறு வழிகள் இருக்கின்றன. ஒரு பெண் வாழ வேண்டும் என்று போராடினால் அவளை இழிவாக பேசும் இந்த சமூகம்... அவள் இறந்து போனால் மட்டும் #RIP போட்டு கொண்டாடும்.
நான் இறக்க விரும்பவில்லை
இந்த இழுக்கை நான் சுமப்பது, என்னை நம்பி பேச முடியாமல் பயந்த பெண்களுக்காக. என் இன்பாக்ஸில் அவன் வாந்தி எடுத்த அசிங்கத்தை, கறை படிய விடாமல் துடைப்பது என் கடமை" என்று ஆவேசத்துடன் கூறினார் அஸ்வினி.
இறுதியாக, அவரை விமர்சிப்பவர்களுக்கு அவர் சொன்ன வார்த்தைகள் இதுதான்:
"இந்த வார்த்தைகள் உங்கள் வீட்டுப் பெண்களிடம் பேசப்பட்டால்... உங்கள் கைகள் அமைதியாக இருக்குமா? அமைதியாக இருந்தால், என் கைகள் அடங்காதது தவறு தான்... ஆனால் நான் என் பாதையில் நடப்பேன். என்னை தடுத்தாலும், என் இலக்கை நான் அடைந்தே தீருவேன்." என்று உறுதியுடன் பேசி இருக்கிறார்
இந்த சம்பவம், சோசியல் மீடியாவில் பெண்கள் எதிர்கொள்ளும் மறைமுக வன்முறையின் ஒரு குரல். அதை கேட்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.
-
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
நடிகர் தியாகராஜனுக்கு கார் ஷோரூமில் நடந்த அவமானம்! இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்கலையே! நெகிழ வைத்த தருணம் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications