சூட்டிங்ல சரத்குமார் சொன்ன வார்த்தை! அழுதுட்டேன், அவர் கூட நடிக்க கூடாதுன்னு முடிவு எடுத்தேன்! ரோஜா ஓபன்
சென்னை: நடிகை ரோஜா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது, நடிகர் சரத்குமார் உடன் அரசு படத்தில் நடித்த சம்பவம் குறித்து பேசி இருந்தார். அந்த சூட்டிங் ஸ்பாட்டில் நடிகை ரோஜாவிடம், சரத்குமார் சொன்ன வார்த்தையால் அழுதுவிட்டதாகவும், அதற்குப் பிறகு சரத்குமார் உடன் நடிக்க முடியாது என்று முடிவு எடுத்ததற்கு என்ன காரணம் என்பது பற்றியும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
நடிகை ரோஜாவிற்கு அறிமுகமே தேவை இல்லை. 80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி 90's காலகட்டத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்று இருக்கும் ரோஜா ஆரம்பகாலகட்டத்தில் கதாநாயகியாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். அதற்குப் பிறகு வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் ஒரு ரவுண்டு வந்தார்.

சமீப காலமாக அவர் அம்மா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல இயக்குனர் ஆர்கே செல்வமணியை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாலும் நடிகை ரோஜா சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
அப்போது நடிகர் சரத்குமாருடன் அரசு படத்தில் நடித்த சம்பவம் பற்றி பேசியிருந்தார். அதில் அவர் பேசும்போது, அரசு படத்தில் தான் நடித்துக் கொண்டிருந்தபோது தனக்கு முதல் குழந்தை வயிற்றிலிருந்ததாம். அந்த நேரத்தில்தான் ராதிகாவிற்கும் சரத்குமாருக்கும் கல்யாணம் முடிந்ததாம். ராதிகா ரோஜாவின் நெருங்கிய தோழி என்பதால் இந்த படத்தில் நடிக்க கூப்பிட்டார்களாம்.
முதலில் ராதிகா நடிக்க இருந்ததாம். ஆனால் இப்பதானே கல்யாணம் முடிந்து இருக்கிறது உடனே நடித்தால் நல்லா இருக்காது என்று ரோஜாவை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவரும் சரி என்று ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு போய்விட்டாராம். முதல் நாள் ஷூட்டிங்கில் தான் மறக்க முடியாத ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது அந்த படத்தில் சரத்குமார் டபுள் ஆக்ஷனில் நடித்திருப்பார். அதில் அப்பா சரத்குமாருக்கு ஜோடியாக தான் ரோஜா நடித்திருப்பார்.
அதில் மகன் சரத்குமார் அம்மா ரோஜாவிடம் ஆபீஸ்க்கு போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி போவார். அந்த காட்சிதான் சூட் செய்தார்களாம். அப்போது சரத்குமார் ரோஜாவை, அம்மா ஆபீஸ்க்கு போயிட்டு வரேன் என்று சொன்னதும் ரோஜாவிற்கு அழுகை வந்துவிட்டதாம். அவர் என்னோட எத்தனை வயசு பெரியவர்? சூரியன் படத்தில் நடிக்கும் போது அவருக்கு என்னோட ரொம்ப வயசு அதிகம். அப்போதுதான் நான் சினிமாவில் அறிமுகமான சமயம். எனக்கு 17 வயது தான்.
அதற்குப் பிறகு இருவரும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால் அப்போ எல்லாம் இவர் என்னை குழந்தை மாதிரி பாத்துகிட்டாரு. இப்போ அவர் என்னை அம்மான்னு சொல்லுறாரே என்று அழுதுட்டு, நான் இந்த படத்துல இவர் கூட நடிக்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டேன் என்று சிரித்தபடியே ரோஜா இப்போது பேசி இருக்கிறார்.
Sarathkumar: தேவயானி போன் பண்ணி அப்படி கேட்டாங்க! அந்த நடிகர் காலடியில் உட்கார்ந்து அழுதேன்.. சரத்குமார் ஓபன்
அந்த படத்தில் நடித்ததற்கு முக்கிய காரணமே ராதிகா தான். அவங்களுக்காக தான் அப்படி ஒரு கேரக்டரில் நடித்தேன். ஆனால் அந்த சூட்டிங் ஸ்பாட்டில் அழுதுவிட்டேன், அதை இப்போது மறக்க முடியாது என்று ரோஜா சிரித்தபடியே சொல்லி இருக்கிறார். இதைப் பார்க்கும் ரசிகர்கள் இதுவாவது பரவாயில்லை, கொஞ்சம் பாலையா, ரஜினி படத்தை பாருங்க அப்போ நீங்க நடிச்சதெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை என்ற தோணுமே என்று நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications