Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sarathkumar: தேவயானி போன் பண்ணி அப்படி கேட்டாங்க! அந்த நடிகர் காலடியில் உட்கார்ந்து அழுதேன்.. சரத்குமார் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சரத்குமார், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் உடன் கொம்பு சீவி படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ப்ரோமோஷனில் பல விஷயங்களை பேசி இருந்தார். அப்போது டியூட் படத்தில் நடித்த போது நடந்த சம்பவத்தை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது.

நடிகர் சரத்குமார் 80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமானாலும் இப்போதும் கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் மிரட்டிக் கொண்டிருக்கிறார். அதிலும் கடைசியாக அவர் நடித்த டியூட் படம் இப்போதைய இளம் தலைமுறையினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சரத்குமார் இப்போதும் அவருடைய மாஸ் குறையாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரை பார்க்கும்போது இவருக்கு மட்டும் வயசே ஆகாதா என்ற கேள்விதான் எல்லோருக்குமே வருகிறது.

Sarathkumar Shanmuga Pandian Pradeep Ranganathan

அந்த அளவிற்கு தன்னுடைய உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்பவர். உணவிலும் சரி மனநிலையிலும் சரி ஆரோக்கியமாக இருந்தால்தான் நம்முடைய வாழ்க்கையில் நம்மால் அடுத்த கட்டத்திற்கு போக முடியும் என்று பல இடத்தில் அட்வைஸ் கொடுத்திருக்கிறார். அவர் இப்போது விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள கொம்பு சீவி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

கொம்பு சீவி படத்தில் சரத்குமார் மட்டுமல்லாமல் பல புது முகங்களும் முன்னணி நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். ஸ்டார் சினிமா தயாரித்திருக்கிறார்கள்‌ இந்த படம் கிறிஸ்மஸ்க்கு வர இருக்கிறது. இதற்கான பிரமோஷனில் கலந்து கொண்டு சண்முக பாண்டியன் மற்றும் சரத்குமார் இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது டியூட் படத்தை பற்றி கேட்கப்பட்டது. படத்தில் அரசியல் வாதியாகவும் ஜாதி பெருமை பேசும் நபராகவும் சரத்குமார் நடித்திருப்பார். கடைசியில் அவர் மனம் திருந்தி இருப்பார். அது பற்றி அவர் பேசும்போது இந்த படத்தை பார்த்துவிட்டு பலரும் என்னை பாராட்டினாங்க. இது வரைக்கும் நான் நடித்ததை விடவும் இந்த படத்தில் வித்தியாசமான கதையாக கேரக்டரில் நடித்திருந்தேன். இது எல்லோருக்கும் பிடித்திருந்தது.

Sarathkumar:
நடிகை தேவயானி எனக்கு போன் செய்து பாராட்டினாங்க. படத்தை நாங்க பார்த்தோம். உங்க நடிப்பு சூப்பரா இருந்துச்சு சார்னு சொல்லிட்டு எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான், நீங்க ஒரு இடத்தில் பிரதீப் காலடியில் உட்கார்ந்து அழுதுட்டு இருப்பீங்க அது எப்படி சார் நடிச்சீங்கன்னு கேட்டாங்க. எனக்கு அது ஒன்னும் தப்பா தெரியலையேன்னு சொன்னேன். ஏன்னா நான் பிரதீப் காலடியில் உட்கார்ந்து அழவில்லை.

படத்தில் அவர் என்னுடைய தங்கச்சி மகன். அவனுடைய காலடியில் அமர்ந்து அழுதேன். அது ஒரு கேரக்டர் அவ்வளவுதான். பிரதீப் ரங்கநாதன் இப்போதுதான் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார் அவர் காலடியில் நான் அழுவதா? அதுபோன்ற காட்சிகளில் நான் நடிப்பதா? என்று சொல்வது தவறு. ஒரு பெரிய செல்வாக்கு உள்ள மனிதன் தவறு செய்து அதை உணர்கிறான், பிறகு எப்படி உறவுகளிடம் முகத்தை காட்ட போகிறோம் என கூனிக்குறுகி இருக்கும் ஒரு காட்சியில் பிரதீப்பின் காலடியில் அமர்ந்து அழுவதில் என்ன தப்பு என்று தெரியவில்லை என சரத்குமார் பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+