இவங்க என்ன சாப்பிடுறாங்க? இவங்களுக்கு குடும்பம் இல்லையா? விஜய் ரசிகர்களுக்கு டோஸ் விட்ட போஸ் வெங்கட்
சென்னை: நடிகர், இயக்குநர், அரசியல் பிரமுகர் என பல முகங்களை கொண்ட போஸ் வெங்கட் சமீபத்தில் அளித்த பேச்சு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அந்த பேச்சில், நடிகர் விஜயின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மேற்கொள்ளும் விமர்சனங்களை நேரடியாக சுட்டிக்காட்டி, கடுமையான வார்த்தைகளில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
போஸ் வெங்கட் அந்த பேச்சில், "விஜயை எதிர்த்து யாராவது பேசினால், அவங்க குடும்பத்தையே கிழிச்சு பேசுறாங்க. அப்போ இவங்களுக்கு எல்லாம் குடும்பம் இல்லையா? அம்மா இல்லையா? அக்கா இல்லையா? தங்கச்சி இல்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "இது என்ன மாதிரி மனநிலை? இந்த மனநிலையை இவங்களுக்கு ஊட்டியது யார்? நீ எல்லாம் என்ன படிச்சிருக்க? என்ன சாப்பிடுற? எதாவது மாத்தி மாத்தி சாப்பிடுறியா? எவனாவது இப்படி எல்லாம் எழுதுவானா?" என்று, சமூக வலைதளங்களில் விஜய்க்கு எதிராக பேசுபவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கும் ரசிகர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
விஜயை விமர்சிப்பவர்களை விமர்சிக்கும் பெயரில், அவர்களின் குடும்பத்தை இழிவுபடுத்தும் வகையில் பதிவுகள் போடப்படுவது தவறு என்றும், இப்படிப்பட்ட மனநிலையிலிருந்து விஜய் ரசிகர்கள் திருந்த வேண்டும் என்றும் அவர் ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார். இந்த வீடியோ மற்றும் பேச்சு இணையத்தில் வேகமாக பரவி, பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் - நடிகரிலிருந்து அரசியல் பயணத்துக்கு
நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நிலையில், சமீப காலங்களில் அவரது அரசியல் நகர்வுகள் பெரும் கவனத்தை பெற்றுள்ளன. "தமிழக வெற்றிக் கழகம்" என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், நேரடியாக அரசியலில் இறங்குவதாக அறிவித்த பிறகு, அவரது ரசிகர்கள் அரசியல் ஆதரவாளர்களாகவும் மாறி வருகின்றனர்.
இந்த சூழலில், விஜயை ஆதரிக்கும் சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் காட்டும் அதீத எதிர்வினைகள், விமர்சனங்களை ஏற்க மறுக்கும் போக்கு ஆகியவை தொடர்ந்து பேசுபொருளாகி வருகின்றன. அரசியலுக்கு வந்த பிறகு, விமர்சனங்களும் எதிர்ப்புகளும் இயல்பானவை என்றும், அவற்றுக்கு நாகரிகமான முறையில் பதிலளிக்க வேண்டும் என்பதும் பல தரப்பினரின் கருத்தாக உள்ளது.
போஸ் வெங்கட்
போஸ் வெங்கட் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி, இயக்குந ராகவும் தன்னை நிலைநிறுத்தியவர். சமூக அக்கறை கொண்ட கதாபாத்திரங்கள், அரசியல் சார்ந்த கருத்துகள் கொண்ட படங்கள் மற்றும் பேச்சுகள் மூலம் தனித்த அடையாளம் பெற்றவர். அதே நேரத்தில், அரசியல் ரீதியாகவும் வெளிப்படையாக கருத்து கூறுபவர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
சமூக ஊடகங்களில் ஏற்படும் வன்முறை மனநிலைக்கு எதிராகவும், அரசியல் மற்றும் சினிமா சார்ந்த விமர்சனங்கள் எல்லை மீறக்கூடாது என்பதையும் தொடர்ந்து பேசிவரும் போஸ் வெங்கட், இந்த முறை விஜய் ரசிகர்களின் செயல்பாடுகளை நேரடியாக விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
விவாதம்
போஸ் வெங்கட்டின் இந்த பேச்சை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் இரு தரப்பு கருத்துகள் வெளியாகி வருகின்றன. ஒருபுறம், "அவர் சொல்வது உண்மை தான், விமர்சனம் வேறு, குடும்பத்தை இழிவுபடுத்துவது வேறு" என்று ஆதரவு குரல்கள் எழுகின்றன. மற்றொரு புறம், "எல்லா ரசிகர்களையும் ஒரே மாதிரி சொல்லுவது சரியா?" என்று கேள்வி எழுப்புவோரும் உள்ளனர்.
எப்படியிருந்தாலும், விஜய் அரசியலுக்கு வந்துள்ள தற்போதைய சூழலில், அவரது ரசிகர்களின் செயல்பாடுகள் அவரின் அரசியல் முகத்தையும் பாதிக்கும் என்ற கருத்தும், அதனால் நாகரிகமான அரசியல் விவாதம் அவசியம் என்பதும் இந்த விவகாரம் மூலம் மீண்டும் பேசப்பட்டு வருகிறது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்?












Click it and Unblock the Notifications