விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம்
சென்னை: தமிழ் சினிமா மற்றும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பரபரப்பை கிளப்பி வரும் விஷயம் நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து பரவி வரும் வதந்திகள்தான். இந்த விவகாரத்தில் தற்போது நடிகர் கூல் சுரேஷ் நேரடியாக கருத்து தெரிவித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சையின் தொடக்கம்
சமீபத்தில், விஜய் மும்பைக்கு சென்றது குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின. குறிப்பாக இயக்குனர் அட்லீயின் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக விஜய் சென்றதாக கூறப்பட்டது. இதே நிகழ்ச்சியில் திரிஷாவும் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால், இதை சிலர் வேறு கோணத்தில் எடுத்துக் கொண்டு, விஜய் - திரிஷா இருவரையும் இணைத்து பல்வேறு வதந்திகளை பரப்ப ஆரம்பித்தனர். அவர்கள் இருவரும் ஒன்றாக வந்தார்களா, ஒன்றாகவே நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்களா என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறின.
கூல் சுரேஷின் பதில்
இந்த நிலையில், கூல் சுரேஷ் இந்த விவகாரம் குறித்து கடுமையாக பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது: "விஜய் சார் மும்பைக்கு சென்றது அட்லீ மனைவியின் வளைகாப்புக்காகத்தான். அதை வேறு விதமாக மாற்றி பேசுவது தவறு. ஒரு விஷயத்தை உங்களுடைய கொள்கைக்கு சாதகமாக மாற்றி பேசுவது சரியில்லை. அந்த இடத்திற்கு திரிஷாவும் சென்றிருக்கலாம். அது சினிமா வட்டாரம் என்பதால் இயல்பான விஷயமே.
ஆனால் அவர்கள் இருவரும் ஒன்றாக வந்தார்களா, அவர்கள் இருவரும் சேர்ந்து எந்த சடங்கிலும் கலந்து கொண்டார்களா என்பதை யாரும் பார்க்கவில்லை. அப்படியிருக்க, ஏன் இப்படி வதந்திகள் பரப்பப்படுகின்றன?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், "விஜயை வாழ விடுங்கள். அவருக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. தேவையில்லாமல் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை இழுத்து பேசாதீர்கள்" என்றும் அவர் தெரிவித்தார். அவர் அரசியலுக்கு வந்த பிறகு அவர் செய்யும் செயல்களை எல்லாம் எல்லோரும் விமர்சிக்கிறார்கள். விஜய்க்கு ஒரு குடும்பம் இருக்கிறது அதை எல்லாம் பார்க்கும்போது அவர்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள் அதனால் இதை நிறுத்தி விடுங்கள் என்று கூல் சுரேஷ் வர்ணிக் கொடுத்து இருக்கிறார்.
விவாகரத்து வதந்திகள் - உண்மை என்ன?
இந்த சர்ச்சையுடன் இணைந்து, விஜயின் குடும்ப வாழ்க்கை குறித்தும் பல வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக, அவரது மனைவி சங்கீதா விஜய் விவாகரத்து மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. அந்த மனுவில் விஜய் ஒரு நடிகையுடன் நெருங்கி பழகி வருகிறார், அந்த நடிகையுடன் எங்களுடைய எதிர்ப்பையும் மீறி வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்களை அந்த நடிகை சோஷியல் மீடியாவில் பதிவிடுகிறார். இது எங்களுடைய குடும்பத்திற்கு அவமானமாக இருக்கிறது என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
இதேபோல், விஜய் - திரிஷா இணைந்து ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், அதிலிருந்து பல்வேறு ஊகங்கள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில் எப்போது திரிஷா என்னுடைய தங்கச்சி அவங்கள நிம்மதியா வாழ விடுங்க அவங்க மீது வீண்பழி போடாதீங்க என்று கூல் சுரேஷ் பேசி இருக்கிறார்.
திரிஷா மீது வரும் விமர்சனங்கள்
இந்த விவகாரத்தில், திரிஷா மீது சிலர் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, சமூக வலைதளங்களில் அவரை குறிவைத்து சிலர் கருத்துக்கள் பதிவிட்டு வருவது சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கு பதிலளித்த கூல் சுரேஷ், "திரிஷா மீது ஏன் இவ்வளவு வெறுப்பு? அவரும் ஒரு கலைஞர் தான். தேவையில்லாமல் அவரை இழுத்து பேசுவது தவறு" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மொத்தத்தில், ஒரு சாதாரண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடிப்படையாக வைத்து உருவான இந்த சர்ச்சை, தற்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது. இதில் கூல் சுரேஷ் தெரிவித்த கருத்துகள், வதந்திகளை எதிர்க்கும் வகையில் இருப்பதால், பலரும் அதை வரவேற்று வருகின்றனர்.
விஜய் மற்றும் திரிஷா குறித்து பரவி வரும் தகவல்கள் பெரும்பாலும் உறுதியற்றவையாக இருக்கின்றன என்பது தெளிவாக இருக்கும் நிலையில், பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நாம கருத்து சொல்ல வேண்டாம் என்றும் சிலர் கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
