நடிகர் பிரசாந்த் படத்தில் கதாநாயகியாகும் தேவயானி மகள்.. நெகிழ வைத்த அம்மா பாசம்! கனவு நிறைவேறியது
சென்னை: தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு கம்பேக் முயற்சியில் இருக்கும் பிரஷாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் தான் 'ரஞ்சன்'. இந்த படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்களிடம் ஒரு தனி எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகை தேவயானியின் இரண்டாவது மகளும் இணைந்து இருக்கிறார் இது இந்த படத்தை பற்றி அதிகமாக பேச வைத்திருக்கிறது.
ரஞ்சன் படத்தை இயக்குவது வேற யாரும் இல்ல... அவருடைய தந்தை, அனுபவமிக்க இயக்குநர் தியாகராஜன் தான். அப்பா-மகன் கூட்டணி என்பதால், இந்த படம் குடும்ப சென்டிமென்ட் மட்டுமில்லாமல், கேரியர் ரீலாஞ்ச் படமாகவும் பார்க்கப்படுகிறது.

பிறந்தநாளில் ரஞ்சன் டைட்டில்
ஏப்ரல் 6 - பிரஷாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'ரஞ்சன்' படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். சாக்லேட் பாயாக வளம் வந்த பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் படம் பெரிய அளவில் அவருக்கு ஒரு பூஸ்ட்டாக இருந்தது. அதற்கு பிறகு தொடர்ந்து அவர் படம் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில வருடங்கள் கேப் இருந்தது. ஆனால் இப்போது அவர் மீண்டும் நடிக்க வருவதால் ரசிகர்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர்.
புதிய முகங்கள்
இந்த படத்தில் ப்ரியங்கா ராஜகுமாரன் - நாயகியாக அறிமுகம் ஆகிறார். அதுபோல தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரி - நடிகராக அறிமுகம் ஆகிறார். திரைப்படத்தின் தயாரிப்பாளரின் மகன் அற்ற இடம் கதாநாயகனாக நடித்த அதே போல இந்த படத்தின் தயாரிப்பாளரின் மகன் கதாநாயகனாக வருகிறார். அதனால் இந்த படமும் ஹிட் ஆனால் பிரசாந்துக்கு பெரிய பிளஸ் ஆக இருக்கும். இப்படி பல புதிய முகங்கள் இணைந்துள்ளதால், படம் ஒரு புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
கோர்ட் ரீமேக்
'ரஞ்சன்' படம் தெலுங்கில் வெற்றி பெற்ற Court படத்தின் தமிழ் ரீமேக் என கூறப்படுகிறது. அதனால், கதைக்களம் மீது ரசிகர்களுக்கு முன்பே நம்பிக்கை வந்துவிட்டது.
பிரஷாந்த் - தேவயானி ஹிட் கூட்டணி
இங்கே தான் இன்னொரு சுவாரஸ்யம். ஒரு காலத்தில் பிரஷாந்த் - தேவயானி கூட்டணி தமிழ் சினிமாவில் ரொம்ப பெரிய ஹிட். இருவரும் சேர்ந்து நடித்த சில படங்கள் ரசிகர்களிடம் இன்னும் பேசப்படும் அளவுக்கு ஹிட் ஆனவை. அந்த நேரத்தில் இந்த ஜோடி மிகவும் நேசிக்கப்பட்ட ஜோடியாக இருந்தது. அந்த பழைய நினைவுகள் இப்போது மீண்டும் பேசப்பட காரணம், பிரஷாந்த் படத்தில் தேவயானியின் மகள் ஹீரோயினியாக நடிப்பது தான்.

தேவயானி குடும்பம்
தேவயானி தற்போது சினிமாவை விட குடும்ப வாழ்க்கைக்கும், சில தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அவரது கணவர் இயக்குநர் ராஜகுமாரனுடன் அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறார். அத பெரிதாக இந்த படங்களை இயக்கவில்லை என்றாலும் சமீப காலமாக சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ராஜகுமாரன் தம்பதிக்கு இனிய மற்றும் பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் மூத்த மகள் இனியாவும் ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு பாடகியாக பலருக்கும் ஆகிவிட்டார் இப்போது இரண்டாவது மகள் கதாநாயகியாக மாறுகிறார்.
மீண்டும் கம்பேக் பிரஷாந்த்
ஒரு காலத்தில் "சாக்லேட் பாய்" ஹீரோவாக ரசிகர்களை கவர்ந்த பிரஷாந்த், தற்போது சரியான கதையை தேர்வு செய்து மீண்டும் தன்னுடைய இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார். 'ரஞ்சன்' அந்த மாற்றத்துக்கு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வேடன் விவகாரம்... அமைச்சர் சந்திப்பால் மீண்டும் வெடித்த சர்ச்சை! சின்மயி கேள்விக்கு ரசிகர்கள் சொல்வது என்ன? -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
ரகுவரனின் I Know I Know மேனரிசத்துக்கு பின்னால் உள்ள நிஜ மனிதர் யார்? வெளிவரும் அதிர்ச்சி பின்னணி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications