நடிகர் துருவ் விக்ரம், அனுபமா போஸ்ட்டால் சிக்கிட்டாங்களே! இதை கவனிச்சீங்களா? ரகசியம் வெளிப்பட்டது!
சென்னை: தமிழ் சினிமாவில் இளம் ஜோடிகளாக ரசிகர்கள் அதிகம் பேசிக்கொள்ளும் பெயர்களில் தற்போது முன்னிலையில் இருப்பவர்கள் நடிகர் துருவ் விக்ரமும் நடிகை அனுபமா பரமேஸ்வரனும். சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான ஒரு செல்ஃபி புகைப்படம், இவர்களைச் சுற்றியுள்ள கிசுகிசுக்களுக்கு மீண்டும் தீனி போட்டுள்ளது.
நடிகர் விக்ரமின் மகனாக சினிமாவுக்கு வந்த துருவ் விக்ரம், 'ஆதித்ய வர்மா' மூலம் அறிமுகமாகி, 'மகான்' படத்தில் தந்தையுடன் இணைந்து நடித்தார். ஆனால் அவருக்கு தனிப்பட்ட அடையாளத்தை கொடுத்த படம் பைசன். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். படத்தின் வெற்றி மட்டுமல்லாமல், இருவருக்கிடையேயான திரை கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் கவனம் பெற்றது.

ரீ போஸ்ட் வைரல்
சூட்டிங் டைமில் இருவரும் நெருக்கமாக பழகுகிறார்கள் என்ற பேச்சு சமூக வலைதளங்களில் கிளம்பியது. ஆனால் அதற்கு அவர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் துருவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த செல்ஃபியை அனுபமா ஹார்டின் எமோஜியுடன் ரீ போஸ்ட் செய்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. சாதாரண ரீ-போஸ்ட் என்றாலும், அதை ரசிகர்கள் வேறு கோணத்தில் பார்த்து பேசத் தொடங்கினர்.
விருது விழாவில் நடந்த சம்பவம்
இது மட்டும் அல்லாமல், பல பொதுவிழாக்களில் இருவரும் ஒன்றாகக் காணப்பட்ட சம்பவங்களும் மீண்டும் வைரலாகின்றன. மும்பையில் நடைபெற்ற 'தி ஹாலிவுட் ரிப்போர்டர் இந்தியா' விருது விழாவில் 'பைசன்' படக்குழுவுடன் கலந்து கொண்ட அவர்கள், சென்னையில் நடந்த JFW விழாவில் மேடையிலேயே ஒருவருக்கொருவர் கொடுத்த ரியாக்ஷன்களாலும் கவனம் பெற்றனர்.

ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்து
குறிப்பாக, அனுபமாவுக்கு துருவ் மேடையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததும், "நள்ளிரவு 2 மணிக்கு யாருக்கு கால் செய்வீர்கள்?" என்ற கேள்விக்கு தயக்கமின்றி "துருவ்" என்று அனுபமா பதிலளித்ததும் ரசிகர்களிடையே இன்னும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சமூக வலைதளங்களில் "இவர்கள் நண்பர்களைத் தாண்டி ஒரு அழகான ஜோடி" என்ற கருத்துகள் அதிகமாகக் காணப்பட்டாலும், காதல் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை இருவரும் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒன்றாக வருவது, இருவருக்குள் இருக்கும் புரிதல், இப்போது வைரலான செல்ஃபி என் இவை அனைத்தும் சேர்ந்து ரசிகர்களை தொடர்ந்து யோசிக்க வைக்கின்றன.
நண்பர்களா? காதலர்களா? இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கும் துருவ் - அனுபமா ஜோடி, ரசிகர்களின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications