Thalaivar 173: ரஜினியின் தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர் சி விலக காரணம் இதுதானா? பின்னணியில் நடந்த சம்பவம்!
சென்னை: தமிழ் சினிமாவின் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிக்கும் தலைவர் 173 திரைப்படத்திலிருந்து, இயக்குநர் சுந்தர். சி திடீர்னு விலகிவிட்டார். (நவம்பர் 13)இன்று அவர் வெளியிட்ட ஓர் உருக்கமான கடிதத்தில் இந்த முடிவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருக்கிறார். அவர் திடீரென விலகியதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

சுந்தர். சியின் அறிக்கை
சுந்தர். சி வெளியிட்ட அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இவை: "திடீரென ஏற்பட்ட தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால்" இந்த முக்கியமான படத்திலிருந்து விலக வேண்டிய கடினமான முடிவை எடுத்துள்ளதாகக் கூறியிருக்கிறார். "இது எனது கனவுப் படங்களில் ஒன்று," என்றும், "ஆனால் வாழ்க்கையில் சில நேரங்களில் நம்மால் "கனவுகளை விட நியதியை பின்பற்ற வேண்டிய தருணங்கள் வரும்" என்றும் உருக்கமாத் தெரிவித்திருக்கிறார்.
மதிப்பும் மரியாதையும்
"ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரு சிறந்த நாயகர்களுடன் இணைந்த அனுபவங்கள், எடுத்துக்கொண்ட சில நாட்களில் கற்று கொண்ட பாடங்கள் எனக்கு மிகவும் விலைமதிப்பற்றவை" என்றும், "அவர்களின் அறிவுரையும், ஊக்கமும் எனக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் மன்னிப்புக் கோரியிருந்த அவர், "இந்தச் செய்தி உங்களைக் கவலையடையச் செய்திருந்தால் மனமாறி மன்னிக்கவும்" என்றும், "விரைவில் உங்களை மகிழ்விக்க புதிய முயற்சிகளில் ஈடுபடுவேன்" என்றும் உறுதி அளித்திருக்கிறார்.

சுந்தர் சி யின் அறிக்கையை குஷ்பூ தான் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த செய்தி வைரலானதை தொடர்ந்து அவர் உடனே அதை டெலிட் செய்து விட்டார். இதனால் சுந்தர் சி முடிவை மாற்றிக் கொண்டாரா? அதனால் தான் டெலிட் செய்யப்பட்டு விட்டதா? என்று கேள்விகளும் எழுகிறது. அதோடு இந்த படத்தில் சுந்தர் சி இணைகிறார் என்றதுமே ஆரம்பத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
காரணம் அதற்கு முன்பு கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க போகிறார் என்று கூறப்பட்டது ஆனால் திடீரென இயக்குனர் மாற்றப்பட்டதோ லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தை சோசியல் மீடியாவில் அன்பாலோ செய்துவிட்டார் என்றும் செய்திகள் பரவியது. இதனால் லோகேஷ் கனகராஜ்க்காக சுந்தர் சி இந்த படத்தில் இருந்து மாற்றப்பட்டு இருக்கிறாரா? என்ற கேள்விகளோ எழுந்து வருகிறது.
இந்த விலகல், ரஜினி ரசிகர்களுக்கும், சுந்தர். சியின் ரசிகர்களுக்கும் ஒரு அதிர்ச்சிச் செய்தியாக வந்திருக்கிறது. இந்த படத்தைப் பற்றிய அடுத்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று திரையுலகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications