மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் கார்த்திக்.. அவரே சொன்ன விஷயம்! அதுவும் இந்த இயக்குநர் படத்தில்.. அப்போ ஹிட் தான்!
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான குடும்ப இயக்குநர்களில் ஒருவரான விக்ரமன், சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தன்னுடைய சினிமா அனுபவங்கள், நடிகர்களுடன் ஏற்பட்ட நட்பு, போன்ற மறக்க முடியாத சம்பவங்களை அவ்வப்போது வீடியோவாக பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில், நேற்று அவர் வெளியிட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
அந்த வீடியோவில், நடிகர் கார்த்திக் தொடர்பான ஒரு நெகிழ்ச்சியான அனுபவத்தை விக்ரமன் பகிர்ந்து கொண்டார். "ஒரு நாள் வாட்ஸ்அப்பில் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. யார் என்று தெரியாமல் 'நீங்க யார்?' என்று கேட்டேன். அதற்கு 'நான் தான் உங்கள் கார்த்திக்' என்று பதில் வந்தது. உடனே அவருடைய கால் வந்தது. அது எனக்கு ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது.

நான் அவரை வைத்து 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' படத்தை இயக்கியிருக்கிறேன். ஆனால் அதற்கு முன்னாடியே நான் அவருடைய தீவிர ரசிகன். இது பலருக்கும் தெரியாத விஷயம்," என்று விக்ரமன் கூறினார்.
அவர் தொடர்ந்து, "கார்த்திக்கின் 'அலைகள் ஓய்வதில்லை', 'அக்னி நட்சத்திரம்' போன்ற படங்களை பார்த்து அவருடைய ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்போதே 'ஒருநாள் இவரை வைத்து படம் இயக்கணும்' என்று மனசுக்குள்ள ஆசை இருந்தது. அப்படி நினைத்த நபரே என்னை தொடர்பு கொண்டு, என்னைப் பற்றி சில வார்த்தைகள் பேசி, ஒரு வீடியோ அனுப்பினார். அதை சமூக வலைதளத்தில் கண்டிப்பா போஸ்ட் போடணும் என்று சொன்னார்.
முதலில் எனக்கு தயக்கம் இருந்தது. 'இது தற்பெருமை மாதிரி தோன்றும்' என்று நினைத்து போட வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவர் பிடிவாதமாக 'கண்டிப்பா போடணும்' என்றார். அதனால் தான் இந்த வீடியோவை பகிர்ந்தேன்," என்று விளக்கினார்.
மேலும், நடிகர் கார்த்திக்கின் உடல்நிலை குறித்து சில வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும், அது எல்லாம் பொய் எனவும் விக்ரமன் தெளிவுபடுத்தினார். கார்த்திக் நலமாக இருப்பதாக அவர் கூறி, ரசிகர்களின் கவலைக்கு பதில் அளித்தார்.
கார்த்திக் பேசிய உணர்வுபூர்வமான வார்த்தைகள்
விக்ரமன் பகிர்ந்த அந்த வீடியோவில் நடிகர் கார்த்திக், இயக்குநர் விக்ரமனை பற்றி மனம் திறந்து பேசியிருந்தார். "தமிழ் சினிமாவில் நான் பார்த்து வியந்த இயக்குநர்களில் விக்ரமனும் ஒருவர். அவருடைய படங்கள் ஒவ்வொன்றும் மனதை தொட்டவை. குடும்பம், உறவு, உணர்வு - இந்த மூன்றையும் அவர் அழகாகச் சொல்வார். அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு பெருமையும் சந்தோஷமும் அளித்தது," என்று கார்த்திக் கூறினார்.
மேலும் அவர், "விக்ரமனுடன் படம் நடிக்கப் போகிறேன் என்றபோது, பலர் என்னிடம் 'அவருடைய படத்தில் நடிக்க கஷ்டமா இருக்கும். நிறைய குறைகள் சொல்வார். கடுமையாக வேலை வாங்குவார்' என்று சொன்னார்கள். ஆனால் நான் அதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. உண்மையில் அவர் வேலையில் கடுமையாக இருப்பவர் தான். ஆனால் அதற்குப் பின்னால் ஒரு நேர்மையான அக்கறை இருக்கும்.
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் என்னை மிகவும் அழகாக காட்டினார். அவருடைய ஸ்டைல் வித்தியாசமானது. அவர் இன்னும் தமிழ் சினிமாவில் அதிகமான படங்கள் இயக்க வேண்டும், அதில் நானும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது," என்று தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.
ரசிகர்களை நெகிழ வைத்த நட்பு
ஒரு நடிகரின் தீவிர ரசிகனாக இருந்து, பின்னர் அதே நடிகரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது விக்ரமனுக்கு ஒரு கனவு நிறைவேறிய தருணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல், அந்த இயக்குநரை நடிகர் கார்த்திக் இவ்வளவு மனப்பூர்வமாக பாராட்டியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் உருவாகும் தொழில்முறை உறவுகளைத் தாண்டி, இப்படிப்பட்ட மனித உறவுகளும் நினைவுகளும் தான் இந்த கலை உலகத்தை மேலும் அழகாக மாற்றுகின்றன என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications