ஜனநாயகன் படத்தில் ஏதோ தப்பா இருக்கு! சென்சார் போர்டு இப்படி நடந்துக்க காரணம் இதுதான்! சரத்குமார் ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படும் 'ஜனநாயகன்' திரைப்படம், பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்த நிலையில், திடீரென சென்சார் தொடர்பான பிரச்சனையில் சிக்கி ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், தமிழ் சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், அரசியல் மற்றும் சமூக கருத்துகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் தணிக்கை குழு படத்தை கவனமாக ஆய்வு செய்து, சில காட்சிகள் மற்றும் வசனங்களில் மாற்றம் கோரி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதை தாண்டி "தணிக்கைத் துறை அரசியல் அழுத்தத்தின் காரணமாக படத்தை முடக்குகிறது" என்ற குற்றச்சாட்டுகளும் வலுப்பெற்று வருகிறது.

Jana nayagan Vijay Sarathkumar

விஜய் சந்திக்கும் தொடர்ச்சியான சவால்

இது விஜய்க்கு புதிதான அனுபவம் அல்ல. இதற்கு முன்பும், அவரது சில படங்கள் வெளியீட்டு நேரத்தில் தணிக்கை அல்லது நிர்வாக சிக்கல்களை சந்தித்துள்ளன. சிலர் இது வழக்கமான சென்சார் குழுவின் பணிதான் என்று சொல்லி வருகின்றனர். குறிப்பாக, 'ஜனநாயகன்' விஜயின் கடைசி திரைப்படம் என்ற பேச்சு அதிகரித்து வரும் சூழலில், இந்த சிக்கல் உணர்ச்சி ரீதியாகவும் ரசிகர்களை பாதித்துள்ளது.

சரத்குமார் கருத்து

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சரத்குமார் அளித்துள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது. சென்சார் போட்டு அவங்க வேலைய பாத்துட்டு இருக்காங்க, விஜய்க்கு மட்டும் இதுபோல பிரச்சனை வரல. இதுக்கு முன்னாடி எவ்வளவோ படங்களை நிறுத்தி இருக்காங்க.. தக் லைஃப் படத்துக்கு அது நடந்திருக்கு.

ஜெயலலிதா அம்மா பீரியடிலும் விஜய்க்கு அது மாதிரி நடந்திருக்கு. அதனால இது மாதிரியெல்லாம் நடக்கிறது அரசியல் கிடையாது. எல்லாமே அரசியல் தான் நடக்கிறது என்கிறது எண்ணத்தை முதல்ல மாத்தணும். அந்த படத்துல ஏதோ ஒரு விஷயம் சரியா இல்லன்னு தான் சென்சார் போடு கட் கொடுத்து இருக்காங்க. மக்களை முன்நிறுத்தி தான் சென்சார் போர்டு படத்தை பார்க்கிறார்கள்.

அங்கு அரசியல்வாதிகள் யாரும் கிடையாது. அதுபோல ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகணும் என்கிற ஆசை எல்லாருக்கும் இருக்கும், பொதுவா ஒரு படம் எடுக்கிறது ரொம்ப கஷ்டம். அது ரிலீஸ் ஆகணும் ஆனா அது சட்டத்துக்கு உட்பட்டு தான் இருக்கணும். எதிர்க் கட்சிகளுக்கு வேற வேலை இல்ல, எதை அரசியல் படுத்தனும் எதை மக்களுக்கு கொண்டு போகணும்னு தெரியல.

நம்ம நாடு ஜனநாயக நாடு, அதை விட்டுட்டு ஜனநாயகன் சினிமாவை பற்றி பேசுவது தான் உங்களுக்கு முக்கியமா தெரியுதா? என்று அந்த பேட்டியில் பேசி சரத்குமார் இருக்கிறார்.

எப்போது ரிலீஸ்

தற்போதைய தகவல்களின் படி, தயாரிப்பு தரப்பு தணிக்கை குழு குறிப்பிட்ட மாற்றங்களை செய்து மீண்டும் சான்றிதழ் பெற முயற்சித்து வருகிறது. அனைத்து நடைமுறைகளும் முடிந்தவுடன், பொங்கலுக்குப் பிறகு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாததால், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+