சரோஜாதேவியை வீழ்த்திய ஜெயலலிதாவின் பிரம்மாண்ட கவர்ச்சி அலை; ஒரே இரவில் சாய்ந்த நடிகையின் கேரியர்
சென்னை: தமிழ் சினிமாவின் பொற்காலத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆருடன் ஜோடியாக அசைக்க முடியாத இடத்தில் இருந்த நடிகை சரோஜாதேவியின் அஸ்தமனத்திற்குக் காரணம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வருகையே என்றும், ஜெயலலிதாவின் பிரம்மாண்டமான கவர்ச்சி அலை, சரோஜாதேவி என்ற மூத்த நடிகையின் திரைவாழ்வில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திவிட்டது என்றும் மூத்த விமர்சகர் டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Thiraukural என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ், "எம்ஜிஆர், சரோஜாதேவி இணைந்து நடித்த படங்களும், அதன் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் பரவியது..

எம்ஜிஆர் - ஜெயலலிதா ஜோடி
எம்ஜிஆருடன் சரோஜாதேவி நடித்த 'பணத்தோட்டம்', 'பாசம்', 'கொடுத்து வைத்தவள்', 'பெரிய இடத்துப் பெண்' போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன..
பெரும்பாலும் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் சரோஜாதேவி நடித்தாலும், பெரிய நடிப்பு என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஆனால் பாலும் பழமும் படத்தில் சிவாஜி கணேசனுக்கு இணையான நடிப்பை வழங்கியிருந்தார்..
இதற்குபிறகு, எம்ஜிஆர் படங்களில் ஜெயலலிதா அதிகமாக நடிக்க ஆரம்பித்தார்.. தேவிகாவும் சிவாஜி கணேசன் படங்களில் அதிகமாக நடிக்க துவங்கிவிட்டார். ஜெமினி கணேசனுடன் சாவித்ரியே அதிகமாக நடித்து வந்தார்.. இதனால் சரோஜாதேவிக்கு மெல்ல வாய்ப்புகள் குறைந்தன.
மார்க்கெட் குறைந்த சரோஜாதேவி
அதாவது, கேஆர் விஜயா திரைத்துறையில் நுழைந்த நிலையில், எம்ஜிஆருடன் ஜெயலலிதா இணைந்து நடிக்க துவங்கிய நிலையில், சரோஜாதேவியின் மார்க்கெட் சரிய துவங்கி விட்டது.
அதுமட்டுமல்ல, பறக்கும் பாவை படத்தில் ஜெயலலிதா நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டதும், திரைத்துறையில் சரோஜாதேவியின் இடத்தை பலவீனப்படுத்தியது.. அதேபோல எம்ஜிஆரின் சொந்த தயாரிப்பான 'நான் ஆணையிட்டால்' படத்தில், சரோஜாதேவிக்கு எதிர்பார்த்த பெரிய கேரக்டர் கிடைக்காததிலிருந்து அந்த மாற்றம் அதிகமாகிவிட்டது.
கவர்ச்சி நடிகைகள்
ஜெயலலிதாவை பொறுத்தவரை, எங்கிருந்தோ வந்தாள் படத்தில் ஓரளவு நடித்திருப்பார் ஜெயலலிதா,. ஆனால் முத்துச்சிப்பி படத்தில் பிரம்மாதமாக நடித்திருந்தார் ஜெயலலிதா..
குமரிப்பெண் படத்தில் ஜின்ஜினாக்கடி என்று ரயிலில் ஒரு பாட்டு வரும்.. இந்த பாட்டுக்காகவே அந்த படம் ஓடியது.. சொன்னால் என்ன வந்தால் என்ன? என்ற பாட்டில் ஜீன்ஸ் அணிந்து ஜெயலலிதா ஆடியதும் ரடிசிகர்களை ஈர்த்தது. இந்த 2 பாட்டுக்கு பிறகு கவர்ச்சி நடிகையாகவே மாறிப்போனார் ஜெயலலிதா.
பத்மினி, வைஜெயந்தி மாலா
இதற்கு பிறகு மஞ்சுளா, லதா என எல்லோரும் இதே பாணியில் நடித்னர். இதனால் கவர்சசி நடிகைகள் என்று தனியாக தேவைப்படவில்லை. இதன் மூலம், கவர்ச்சிக் காட்சிகளில் முன்னணி நடிகைகள் நடித்தால் ரசிகர்கள் ஏற்பார்கள் என்பதை இவர்கள் எல்லாம் நிரூபித்தனர்.
ஆரம்பத்தில் நடிகை பத்மினி போன்றோர் எம்ஜிஆருடன் நடித்தனர்.. ஆனால், எம்ஜிஆரின் உயரம் குறைவான காரணத்தாலேயே அவருடன் அதிகம் ஜோடி சேர முடியாமல் போய்விட்டது.. அதேபோல வைஜெயந்தி மாலாவுடன் பாக்தாத் திருடன் படத்தில் எம்ஜிஆர் நடித்திருந்தார். ஆனால், அதிலும் வைஜெயந்தி மாலா உயரம் காரணமாக, உட்கார்ந்தே காதல் காட்சிகள் எடுக்கப்பட்டன" என்றெல்லாம் அதில் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications