Karuppu movie: கருப்பு படத்தின் ஆரம்பத்தில் விஜய்க்கு “special thanks”.. தியேட்டரே அதிருது! காரணம் இதுதானா?
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள "கருப்பு" திரைப்படம் பல மாதங்களாக நீண்டுவந்த பிரச்சனைகளை கடந்து இறுதியாக இன்று வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. ரிலீஸுக்கு முன் ஏற்பட்ட குழப்பங்கள், கடைசி நேர ரத்து, ரசிகர்களின் ஏமாற்றம் என பல திருப்பங்களுக்குப் பிறகு படம் வெளியாகியுள்ள நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முதல்வர் விஜய்க்கு Special Thanks
திரைப்படத்தின் ஆரம்பத்தில் "Special Thanks" பகுதியில் விஜய்க்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பாக, "Chief Minister Vijay" என குறிப்பிடப்பட்டு, ரசிகர்கள் அமைப்பின் சார்பில் வாழ்த்து செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளியாகியதும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அரசியலிலும், சினிமாவிலும் பேசப்பட்டு வரும் விஜய்க்கு இப்படம் நன்றி தெரிவித்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏன் இந்த நன்றி?
திரைப்பட தயாரிப்பு மற்றும் வெளியீட்டு கட்டத்தில் ஏற்பட்ட பல தடைகள் குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்த சூழ்நிலையில், சில முக்கிய உதவிகள் கிடைத்ததாகவும், அதற்கான நன்றியாக இந்த குறிப்பை சேர்த்திருக்கலாம் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால் இதுகுறித்து படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
சூர்யா - திரிஷா பதிவுகள் வைரல்
இதே நேரத்தில், படம் இன்று வெளியாகிறது என சூர்யா மற்றும் திரிஷா இருவரும் தனித்தனியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு தகவல் பகிர்ந்துள்ளனர். "இத்தனை நாள் காத்திருந்தோம்... இன்று திரையரங்குகளில் சந்திப்போம்" என்ற சூர்யாவின் பதிவு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரிஷாவும் இதேபோல் படம் வெளியாகியதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளதால், ரசிகர்கள் இந்த இரு பதிவுகளையும் வைரலாக்கி வருகின்றனர்.

தடைகளை கடந்து வந்த கருப்பு
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படத்தில், நட்டி, யோகிபாபு, ஸ்வாசிகா, ஷிவதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், பைனான்ஸ் மற்றும் விநியோக பிரச்சனைகளால் பலமுறை தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.
கடைசி நேரத்தில் கூட முதல் நாள் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்திருந்தனர். ஆனால் தற்போது அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு படம் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு திரண்டுள்ளனர்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
"கருப்பு" படம் திரில்லர் கதைக்களம், சூர்யாவின் வித்தியாசமான கேரக்டர், ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கம் ஆகிய காரணங்களால் முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போது படம் வெளியானதுடன், "இந்த அளவுக்கு காத்திருந்தோம்... இப்போது தான் ரியல் ரிலீஸ்" என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், படம் தொடக்கத்திலேயே முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவிக்கப்பட்டது தற்போது புதிய விவாதத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications