தலைவர் 173 படத்தில் இருந்து சுந்தர் சி விலகியதை அறிவித்த அடுத்த நொடி! குஷ்பு செய்த செயல்! சம்பவம் இருக்கு போல
சென்னை: கடந்த சில நாட்களாகவே சுந்தர் சி பற்றிய செய்திதான் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வந்தது. அதற்கு காரணம் சுந்தர் சி தமிழ் சினிமாவில் பெரிய லெஜெண்டான கமல் மற்றும் ரஜினி இருவரையும் இணைத்து ஒரு படம் பண்ண போகிறார் என்பதுதான். கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்க அந்த படத்தை சுந்தர் சி இயக்குகிறார் என்பதால் இது பற்றி அதிகமான எதிர்பார்ப்பும் மக்கள் மனதில் இருந்தது. ஆனால் இன்று அதற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தான் சுந்தர் சி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். தான் இந்த படத்தில் இருந்து விலகுகிறேன் என்று அவர் கூறியதை தொடர்ந்து குஷ்பூ செய்த சம்பவமும் இணையத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

எதிர்பார்க்காத கூட்டணி
ரஜினி மற்றும் கமல் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தில் இயக்குனர் யாராக இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. முதலில் இவர்கள் இருவருமே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒன்று சேர்வார்கள் என்று எதிர்பார்க்க பட்ட நிலையில் கடைசியில் சுந்தர் சி இந்த கூட்டணியில் இணைந்தது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் தான். இது சம்பந்தமாக தலைவர் 173 படத்திற்கான பூஜையும் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்தது.
சுந்தர் சி அறிக்கை
தற்போது ரஜினி ஜெய்லர் 2 படத்தை முடித்து இருக்கும் நிலையில் தலைவர் 173-வது படத்தில் சுந்தர்சியுடன் இணைய போகிறார் என்று கூறப்பட்டது ஆனால் அந்த படத்தில் கமல்ஹாசன் கெஸ்ட் ஆக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கமல்ஹாசன் தயாரிப்பில் தான் இந்த படம் உருவாகிறது என்றும் கூறப்பட்ட நிலையில் சுந்தர் சியின் பெயரில் இன்று வெளியான அறிக்கையில், வாழ்க்கையில் நமக்காக வகுக்கப்பட்ட பாதை நம் கனவுகளிலிருந்து வேறுபட்டாலும் அதை பின்பற்ற வேண்டிய தருணங்கள் உள்ளன.
இந்த இரண்டு ஜாம்பவான்களுடன் உள்ளான எனது தொடர்பு நீண்ட காலம் பழமையானது. நான் எப்போதும் அவர்களை மிக உயர்ந்த மதிப்பில் வைத்திருப்பேன். கடந்த சில நாட்களாக நாங்கள் பகிர்ந்து கொண்ட சிறப்பு தருணங்கள் எனக்கு என்றென்றும் போற்றப்படக்கூடிய தருணங்களாகவே இருந்திருக்கின்றன. அவர்கள் எனக்கு மதிப்பு மிக்க பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளனர்.

பதிவை நீக்கிய குஷ்பூ
மேலும் நான் முன்னேறும்போது அவர்களின் உத்வேகத்தையும் ஞானத்தையும் தொடர்ந்து தேடுவேன். இருந்தாலும் இந்த படத்தில் இருந்து விலகுகிறேன் என்றாலும் தொடர்ந்து நான் எண்டர்டெயின்மென்ட் பண்ணிக்கொண்டே தான் இருப்பேன் எனக் கூறியிருக்கிறார்.
இந்த அறிவிப்பை குஷ்பூ தான் தன்னுடைய instagram பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர வைரல் ஆகியது. உடனே குஷ்பூ தன்னுடைய சோசியல் மீடியாவில் இருந்து இந்த பதிவை நீக்கி இருக்கிறார். ஆனால் தலைவர் 173 வது படத்தின் பூஜைக்கான வீடியோக்கள் அவருடைய சோசியல் மீடியா பக்கத்தில் தான் இருக்கிறது. அதை அவர் நீக்கவில்லை. சுந்தர் சி யின் அறிக்கை என்று இவர் போஸ்ட் போட்டது மற்றும் அதையே அவரே நீக்கியது போன்ற சம்பவத்திற்கான விலக்கத்தை அவர் கொடுக்கவில்லை என்பதால் என்ன நடந்திருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாகவும் கேள்வியாகவும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications