Kombu Seevi Box Office: கொம்பு சீவி படத்தின் 4வது நாள் வசூல் எவ்வளவு? சண்முக பாண்டியனுக்கு திருப்புமுனை!
சென்னை: பொன்ராம் இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த கொம்பு சீவி படம் டிசம்பர் 19ஆம் தேதி திரைக்கு வந்தது. ரிலீஸ்க்கு முன்னாடியே "இது கிராமத்து படம், பொன்ராம் ஸ்டைல் காமெடி இருக்கும்"ன்னு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. படம் பார்த்துட்டு வெளியே வரும்போது, அந்த எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறியிருக்குன்னு தான் சொல்லணும். இந்த படத்தில் நான்கு நாள் வசூல் எவ்வளவு என்று பார்க்கலாம்.

கொம்பு சீவி பட கதை
படத்தில் சரத்குமார் ஊர்ல பெரிய மனுஷனா வர்றார். பேர் பெரிய மனுஷன் தான்... ஆனா உள்ளுக்குள்ள கஞ்சா, மீன் கடத்தல் மாதிரி வேலைகளும் பண்ணுறார். அதே சமயம், அவர் சம்பாதிக்குற பணம் ஊர் மக்களுக்காக போகுது. அதனால நல்லவரா கெட்டவரா அப்படின்னு ஒரே வார்த்தைல சொல்ல முடியாத கேரக்டர். இந்த கேரக்டர்ல சரத்குமார் ரொம்ப ஈசியா நடித்திருக்கார். 'டியூட்' படத்துல இருந்த ஜாலி இங்கேயும் இருக்கு.
சண்முக பாண்டியன் அவரைக் காப்பாத்துற சீன்ல இருந்து தான் படம் வேகமெடுக்குது. அப்புறம் இருவருக்கும் நடுவுல ஒரு பாசம் உருவாகுது. ஊர்ல வெள்ளம், வறுமை, மக்கள் கஷ்டம்... இதுக்கெல்லாம் தீர்வு கிடைக்கணும்னு நினைச்சு ஒரு ஐந்து கோடி டீல். அந்த டீல் நடக்குதா, போலீஸ்ல சிக்குறாங்களா, தப்பிக்குறாங்களா அப்படின்னு தான் மீதி கதை.
சண்முக பாண்டியன் சண்டை காட்சிகள்ல நல்லா மாஸ் காட்டுறார். அப்பாவோட ஸ்டைல் பல இடங்கள்ல ஞாபகம் வருது. ஆனா நடிப்புல இன்னும் கொஞ்சம் மெருகேத்த வேண்டிய அவசியம் இருக்கு. காமெடி காட்சிகள்ல சில இடங்கள் வேலை செய்கிறது, சில இடங்கள் ஓவரா போகுது. அதுவே படத்தோட பெரிய மைனஸ்.
படத்துல யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை நல்ல சப்போர்ட் கொடுக்குது. குறிப்பா சண்டை காட்சிகள்ல இசை இருந்தாலே சீன் இன்னும் பவர்ஃபுல்லா இருக்கு. தார்னிகா புதுமுகம் ஆனாலும் ஓகேவா செஞ்சிருக்கார்.
இப்போ வசூல் விஷயத்துக்கு வந்தா, படம் பெரிய ஓபனிங் எடுக்கலை. முதல் இரண்டு நாள்ல சுமார் 30 லட்சம் ரூபாய் மாதிரி வசூல். மூன்றாவது நாள்ல கொஞ்சம் வேகம் பிடிச்சு சுமார் 36 லட்சம் ரூபாய் வந்தது. நான்காவது நாள்லவும் ஓட்டம் தளராம சுமார் 25-30 லட்சம் ரூபாய் வரை வசூல் ஆனதா சொல்லப்படுது. நாலு நாள்ல சேர்த்து பார்த்தா படம் ஒரு கோடியை நெருங்குற அளவுக்கு வந்திருக்கு.
மொத்தமா சொல்லணும்னா, கொம்பு சீவி பெரிய ஹிட் படம் இல்ல. அதே சமயம் முழுக்க தோல்வி அப்படின்னும் சொல்ல முடியாது. கிராமத்து கதைகள் பிடிக்குறவங்களுக்கு, சரத்குமார் ரசிகர்களுக்கும், விஜயகாந்த் ரசிகர்களுக்கும் குடும்பத்தோட போய் பார்க்கக்கூடிய ஒரு ஜாலி படம் தான்.












Click it and Unblock the Notifications