அஜித்துக்கு ரொம்ப பிடித்த பாடல் இதுதானாம்! ஷாலினி கூட ரிங்டோனில் வச்சிருக்காங்களாம்! கவிஞர் விவேகா ஓபன்
சென்னை: கவிஞர் விவேகாவின் பாடல்கள் துள்ளல் இசை நிறைந்ததாகவும் இருக்கும், காதல் நிறைந்ததாகவும் இருக்கும். ஒரு சில பாடல்களை கேட்கும் போதே டான்ஸ் ஆட வைக்கும் அளவிற்கு இருக்கும். அதுபோல அவர் எழுதிய ஒரு பாடல் தான் அஜித்குமாருக்கு ரொம்பவும் பிடித்த பாடலாம். அதைத்தான் அஜித் குமாரின் மனைவி ஷாலினி கூட தன்னுடைய போன் ரிங்டோனாக வைத்திருப்பதாக அஜித் சொன்னார் என விவேகா நெகிழ்ச்சியோடு பேசியிருக்கிறார்.
சிங்கம் படத்தில் வந்த "காதல் வந்தாலே" என்ற பாடல் மூலம் பிரபலம் அடைந்த விவேகா அதற்குப் பிறகு அந்த நேரத்தில் அதிகமான பாடல்களை எழுதி இருந்தார். அதிலும் எம்பேரு மீனா குமாரி, ஒரு சின்ன தாமரை, மியா மியா பூனை, அமிளி துமிலி, கண்ணு ரெண்டும் ரங்கராட்டினம் உட்பட பல பாடல்களை எழுதி இருக்கிறார்.

விவேகா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது, அஜித் சார் நான் எழுதின பாடல்களை ரொம்ப ரசித்து இருக்கிறார். அவர் படத்துல நான் எழுதின நிறைய பாடல்களை பாராட்டி இருக்கிறார் என்று சந்தோஷமாக பேசியிருக்கிறார். இதை அஜித் ரசிகர்களும் விவேகாவின் ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள். மேலும் விவேகா பேசும்போது வீரம் படத்தில் நான் எழுதின "ரதகஜ துரக" பாடலுக்கு என்னை கட்டிப்பிடிச்சு பாராட்டினார்.
பிறகு என்னுடைய மனைவி ஷாலினியோட ரிங்டோன் இதுதான் சார் என்று சொன்னாரு. அந்த பாடல் அஜித் சாருக்கு ரொம்பவும் பிடிக்கும் என்று விவேகா மகிழ்ச்சியோடு சொல்லி இருந்தார். இந்த பாடல் பல ரசிகர்களின் செல்போனில் கூட இப்போதும் ரிங்டோனாக ஒலிப்பதை கேட்க முடிகிறது.
அஜித் குமார் தன்னோடு பணிபுரிபவர்களின் திறமையை மதிக்க கூடியவர் என்று அவருடன் வேலை பார்த்த பலரும் பேசி இருக்கிறார்கள். அதைத்தான் இப்போது விவேகாவும் சொல்லி இருக்கிறார். அஜித் மிகவும் எளிமையானவர் என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் இப்போது அவர் சினிமாவில் மட்டுமல்லாமல் தன்னுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். கார் ரேஸ், துப்பாக்கி சூடுதல் என்று அவர் பிசியாக இருந்தாலும் கிடைக்கிற கேப்பில் தன்னை சுற்றி இருப்பவர்களுடன் மிகவும் இயல்பாக இருக்கிறார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications