Parasakthi Box Office: பராசக்தியின் வசூல் நிலவரம்! சிவகார்த்திகேயனுக்கு சிக்கல்.. தியேட்டர் நிலவரம் இதுதான்!
சென்னை: பொங்கல் வெளியீடாக பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான 'பராசக்தி' திரைப்படம், ஆரம்பத்தில் வேகமாக பாய்ந்தாலும் தற்போது பாக்ஸ் ஆபீஸில் தடுமாறும் நிலைக்கு வந்துள்ளது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பல நட்சத்திரங்கள் இணைந்ததால், இந்த படம் வெளியீட்டுக்கு முன்பே "பெரும் வசூல் வேட்டை" நடத்தும் என்ற நம்பிக்கை இருந்தது.
ஆனால், வெளியீட்டுக்குப் பிறகான நிலவரம் தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கலவையான உணர்வுகளை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் நிலவரம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

1960-களின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாக கொண்டு உருவான இப்படம், மாணவர்களின் அரசியல் விழிப்புணர்ச்சி மற்றும் போராட்ட உணர்வை பேசுவதாக விளம்பரப்படுத்தப்பட்டது. முதல் நாள் முதல் இரண்டு நாட்கள் வரை அதற்கான ஆதரவும் தெளிவாகவே தெரிந்தது. படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, முதல் நாளில் சுமார் 27 கோடி ரூபாயையும், இரண்டாம் நாளில் மொத்தமாக 51 கோடி ரூபாயையும் படம் வசூலித்தது. இதனால், "சிவகார்த்திகேயன் கேரியரில் புதிய மைல்கல்" என ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
ஆனால், உண்மையான சோதனை வாரத்தின் நடுப்பகுதியில் ஆரம்பமானது. திங்கட்கிழமை முதல் தியேட்டர்களில் கூட்டம் கணிசமாக குறைய தொடங்கியது. செவ்வாய்க்கிழமைக்கு வந்தபோது, பல இடங்களில் டிக்கெட் புக்கிங் மந்தமாக இருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில், மாலை மற்றும் இரவு காட்சிகளில் பாதி அரங்குகள் மட்டுமே நிரம்பியுள்ளன என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையே, படத்தைச் சுற்றி அரசியல் சர்ச்சைகளும் கிளம்பின. திமுக - காங்கிரஸ் அரசியல் சமன்பாடுகள், ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் வெளியீடு, சென்சார் போர்டின் கட் விவகாரம் என பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. சுமார் 25 இடங்களில் சென்சார் கட் செய்யப்பட்டதால், படத்தின் தீவிர அரசியல் உணர்வு மங்கிவிட்டதாகவும், அது காதல்-ஆக்ஷன்-பழிவாங்கல் டிராமாவாக மட்டுமே மாறிவிட்டதாகவும் சில விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Parasakthi box office: சாதனை படைத்த சிவகார்த்திகேயன்.. இதுதான் பராசக்தியின் 2 நாள் வசூல்.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
இதனால் பராசக்தி நிலைத்து நிற்குமா என்பதே இப்போது பெரிய கேள்வியாக உள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'அமரன்' படம் போல வலுவான உணர்ச்சி தாக்கத்தை பராசக்தி உருவாக்கவில்லை என்பதே, தற்போதைய வசூல் சரிவுக்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
பொங்கல் விடுமுறை நாட்களில் ஒரு பெரிய புஷ் கிடைத்தால் மட்டுமே, 100 கோடி வசூல் என்ற எல்லையை பராசக்தி தொட்டுவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லையெனில், ஆரம்பத்தில் வேகமாக ஓடி பின்னர் டல் அடித்த ஒரு பொங்கல் ரிலீஸாகவே இந்த படம் நினைவில் நிற்கும் அபாயம் இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கணிக்கின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications