பராசக்தி வெற்றிக்காக துணைக்கு வரும் ரஜினி, கமல்.. சிவகார்த்திகேயனுக்கு அதிகரிக்கும் சப்போர்ட்! செம பிளான்
சென்னை: சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ரவி மோகன், அதர்வா உட்பட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் பராசக்தி படம் அடுத்த மாதம் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் பற்றிய பேச்சு சோசியல் மீடியாவில் அதிகமாக இருக்கும் நிலையில், இப்போது இந்த படத்தை வெற்றி அடைய வைப்பதற்காக நடிகர் ரஜினி, கமல் உட்பட பலரும் துணைக்கு வருகிறார்களாம்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரையில் அடி எடுத்து வைத்த சிவகார்த்திகேயன் ஒவ்வொரு திரைப்படத்திலும் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். அதிலும் அவருடைய வாழ்க்கையில் அமரன் திரைப்படம் புகழின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில், சாய் பல்லவி உடன் அமரன் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெயர் வாங்கியது. உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அமரன் படம் மூலம் கிடைத்த வெற்றிக்கு பிறகு அந்த வெற்றியை தக்க வைக்க சிவகார்த்திகேயன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார். அமரன் படத்திற்கு பிறகு மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த படம் ஓரளவிற்கு டீசண்டான வெற்றி பெற்றிருந்தது.
அதைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிக்க, அதர்வா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். நடிகை ஸ்ரீ லீலா இந்த படம் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். முதலில் இந்த படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ் என்று சொல்லப்பட்டது.
அதே நாளில் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகுவதால் பிறகு 14ஆம் தேதிக்கு பராசக்தி தள்ளி போயிருந்தது. ஆனால் இப்போது ஜனநாயகனுக்கு போட்டியாக ஜனவரி பத்தாம் தேதியே திரையரங்குக்கு வர இருக்கிறது. இதனால் சோசியல் மீடியாவில் விஜய் vs சிவகார்த்திகேயன், பராசக்தி vs ஜனநாயகன் என்ற ஹாஷ்டேக் உடன் விவாதம் நடந்து வருகிறது. விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை திட்டி தீர்த்து வருகின்றனர்.
தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு சிவகார்த்திகேயன் அமைதியாக இருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இதைப் பற்றி சிவகார்த்திகேயன் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதன்படி பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஜனவரி 3ஆம் தேதி நடக்க இருக்கிறது என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
அதோடு இன்னொரு முக்கியமான விஷயமும் வெளியாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினி vs விஜய் என்ற ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட ரஜினியின் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை. இந்த நிலையில் விஜய்க்கு எதிராக இருக்கும் சிவகார்த்திகேயன் படத்தை வெற்றி பெற வைப்பதற்காக ரஜினி, கமல் இணைந்து விட்டார்களா? என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.
-
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications