பராசக்தி படத்தை நாங்க புறக்கணிப்போம்.. போஸ்டரை பார்த்தாலும் கிழிப்போம்.. பிரபலம் ஆதங்கம்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்திற்கு எதிராக, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரசிகர்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜி சமூக நல பேரவை தலைவர் கே. சந்திரசேகரன், ஒன்இந்தியா தமிழ் YouTube சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், பராசக்தி படத்துக்கு எதிரான தனது ஆவேசமான நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
போஸ்டரை பார்த்தாலே கிழிப்போம்
அந்த பேட்டியில் பேசிய சந்திரசேகரன், "பராசக்தி படத்தை நாங்க பார்க்கவே மாட்டோம். அந்த படத்தின் போஸ்டரை பார்த்தா கூட நாங்க கிழிப்போம்" என்று கூறியுள்ளார். மேலும், "சிவாஜியின் புகைப்படங்கள் வைத்த போஸ்டரை பராசக்தி படத்துக்காக பயன்படுத்தி இருந்தால், அந்த போஸ்டரையும் நாங்கள் கிழிப்போம்" என கடுமையாக தெரிவித்துள்ளார்.

பழைய சிவாஜி ஸ்டைல்
பராசக்தி படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பாண்டு (Title Card) குறித்தும் சந்திரசேகரன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்."பராசக்தி படத்திற்கு வைத்த பாண்டு பார்த்தீர்களா? அதுகூட பழைய சிவாஜி படங்களில் பயன்படுத்திய பழைய பாண்டு தான். அப்படியே வைத்திருக்கிறார்கள். இப்படி எல்லாம் இவங்களால எப்படி பண்ண முடியுதுன்னு தெரியல"
என்று விமர்சித்துள்ளார்.
கிரியேஷன் இல்லையா
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தை சுட்டிக்காட்டிய சந்திரசேகரன், "இப்ப எல்லாம் எவ்வளவோ டிஜிட்டல் முன்னேற்றம் இருக்கிறது. அதில் கதைகளாகட்டும், டைட்டிலாகட்டும் புதுசா உருவாக்கியிருக்கலாமே. மலையாள படங்களில் எல்லாம் எத்தனையோ புதுப்புது டைட்டில் வைத்து படங்கள் எடுக்குறாங்க. அதே மாதிரி உங்களால் ஒரு கதை எடுக்க முடியலையா? ஒரு டைட்டில் உருவாக்க முடியலையா?"
என்று கேள்வி எழுப்பினார்.
பராசக்தி மீது அதிருப்தி
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் இந்த படத்தை முற்றிலும் புறக்கணிப்போம் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். "சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை பார்க்க வேண்டும் என்ற தேவையே எங்களுக்கு இல்லை. கண்டிப்பாக நாங்க அந்த படத்தை புறக்கணிப்போம். நாங்க மட்டும் இல்ல, எல்லா மக்களும் அந்த படத்தை புறக்கணிப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதை மீறி அந்த படம் ஓடுச்சுன்னா அது நம்ம கையில் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

தொகுப்பாளர் கேள்வி
இந்த பேட்டியின் போது, எங்கள் தொகுப்பாளர், "சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். அவருக்கு ஜனநாயகன் படத்தோடு இவருடைய படம் ரிலீஸ் ஆகுவதால் விஜய் ரசிகர்களும் ஏற்கனவே சிவகார்த்திகேயன் மீது கோபத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் நீங்களும் புறக்கணிப்பது சரியா?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சந்திரசேகரன், "நாங்க இந்த படத்தை அறிவித்ததிலிருந்தே எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவங்க இதை கொஞ்சம் கூட கண்டுக்கவே இல்லை. இப்படி கண்டுகொள்ளாமல் போறவங்களை நாங்க புறக்கணிக்காமல் வேற என்ன செய்வது?" என்று ஆவேசமாக பதிலளித்தார்.
சிவாஜி புகழை சிதைக்க முயற்சி
மேலும் அவர்,"நான் ஒருத்தன் மட்டும் இந்த மனநிலையில் இல்லை. தமிழ் பேசும் திரை உலகத்தை ரசிக்கிற எல்லாருக்குமே சிவாஜி ஐயாவை பிடிக்கும். அப்படிப்பட்ட ஒரு மனிதனின் புகழை சிதைப்பதற்காக இவங்க முயற்சி செய்றாங்கன்னா, அதை யாரால ஏற்றுக்கொள்ள முடியும்?"
என்று கேள்வி எழுப்பினார்.
பராசக்தி படத்தை சுற்றியுள்ள சர்ச்சைகள்
சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி (1952) திரைப்படம், தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான ஒரு சமூக அரசியல் படமாக கருதப்படுகிறது. அந்த படத்தின் பெயரை, இன்றைய காலகட்டத்தில் வேறு கதைக்கும், வேறு நடிகருக்கும் பயன்படுத்துவது சரியா என்ற கேள்வி, பட அறிவிப்பின் நாளிலிருந்தே எழுந்து வருகிறது. குறிப்பாக, படத்தின் டைட்டில், போஸ்டர் வடிவமைப்பு, பழைய சிவாஜி பிம்பங்களை நினைவூட்டும் வகையில் இருப்பது, ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரித்துள்ளன.
சினிமா சட்டப்படி டைட்டில் பயன்படுத்த அனுமதி இருந்தாலும், "ஒரு லெஜெண்ட் நடிகரின் அடையாளமாக மாறிய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவது நெறியிலா?" என்ற விவாதம் தற்போது தீவிரமாகியுள்ளது. இதுவே பராசக்தி படத்திற்கு எதிரான எதிர்ப்பின் மையமாக உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications