பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் ஜனநாயகனை கிண்டல் செய்த ஸ்ரீ லீலா? உண்மை என்ன
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று சென்னையில் பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மணிரத்னம், வெற்றிமாறன் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு, படம் குறித்தும், சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியையும் வெகுவாக பாராட்டிப் பேசினர்.

சிவாவின் தெளிவான விளக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளே பராசக்தி ரிலீஸாகிறது. இதனால் இரு படங்களுக்கும் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
புறநானூறு முதல் பராசக்தி வரை
பராசக்தி சிவகார்த்திகேயனுக்கு 25-வது படமாகும். ஆரம்பத்தில் புறநானூறு என்ற பெயரில், சூர்யா நடிப்பில் உருவாகவிருந்த இந்தப் படம், பின்னர் பல காரணங்களால் மாற்றம் கண்டது. சூர்யா நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்திருப்பதால், அவர் எந்த அளவுக்கு வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
முதலில் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக இருந்த பராசக்தி, வியாபார ரீதியான காரணங்களால் ஜனவரி 10ஆம் தேதிக்கு முன் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலீலா பேச்சு
இசை வெளியீட்டு விழாவில் நடிகை ஸ்ரீலீலா பேசியதாக கூறப்படும் கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. "பராசக்தியில் என்னுடைய நடிப்பை அனைவரும் வந்து பாருங்கள். அது முடியாவிட்டால் பகவந்த் கேசரி படத்தில் என்னுடைய நடிப்பை பாருங்கள். நான் எப்போதும் ஒரிஜினலுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்" என அவர் கூறியதாக ரசிகர்கள் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த கருத்தைப் பார்த்த விஜய் ரசிகர்கள், ஜனநாயகன் படத்தை மறைமுகமாகத் தாக்கியதாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, ஜனநாயகன் படம் பகவந்த் கேசரியின் ரீமேக் என்பதை ட்ரெய்லர் உறுதி செய்த நிலையில், நெட்டிசன்களின் இந்த கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
உண்மை என்ன
இருப்பினும், ஸ்ரீலீலாவின் முழு பேச்சு யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 7.40 நிமிடங்கள் இருக்கும் அந்த பேச்சில் அவர் எந்தவொரு இடத்திலும் இதுபோன்ற கருத்துகளைக் கூறவில்லை. பராசக்தியை பொங்கலன்று பார்க்குமாறு கூறினாலும், பகவந்த் கேசரி குறித்தே ஒரிஜினலுக்கு முக்கியத்துவம் என்றோ எந்தவொரு இடத்திலும் பேசவில்லை.
பொங்கல் சினிமா யுத்தம்
ஒருபுறம், வினோத் மீது முழு நம்பிக்கையுடன் ஜனநாயகன் ஹிட் அடிக்கும் என விஜய் ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருக்க, மறுபுறம் சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணி புதிய உயரத்தை எட்டும் என பராசக்தி மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்த இரு படங்களின் மோதலில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications