ஹாய் பிரண்ட்ஸ் இதுதான் தேவா.. யூடியுப் பிரபலங்களை மிரள வைத்த பிரபுதேவா.. அனிருத்தை தொடர்ந்து அடுத்த சம்பவம்
சென்னை: இந்திய திரையுலகில் நடிகர், நடன இயக்குநர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளால் தனித்துவமான இடத்தை பிடித்திருப்பவர் பிரபுதேவா. தலைமுறைகளை கடந்தும் ரசிகர்களை கவர்ந்த அவரது நடன அசைவுகள் இன்று வரை இளம் கலைஞர்களுக்கே ஒரு பாடமாக இருந்து வருகிறது.
திரைப்படங்களில் ஹீரோவாக மின்னும் முன்பே, பின்னணியில் வியர்வை சிந்திய கலைஞராக தனது பயணத்தை தொடங்கியவர். மணிரத்தினம் இயக்கிய அக்னி நட்சத்திரம் படத்தின் பாடலில் பேக்ரவுண்டில் டான்ஸ் ஆடும் நடனக் கலைஞராகத் தோன்றிய அந்த சிறிய வாய்ப்பே, பின்னர் இந்திய அளவில் "இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்" என்ற பட்டத்தை ரசிகர்கள் வழங்கும் அளவுக்கு உயர்ந்த நடன பேரரசை உருவாக்கியது.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்
ஜென்டில்மேன் படத்தில் வந்த "சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே" பாடல் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது என்பது திரை ரசிகர்கள் அறிந்த விஷயம். நடனத்தில் உச்சத்தை தொட்ட அவர், பின்னர் ஹீரோவாகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வெற்றிகளை குவித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி என மொழிகளைத் தாண்டி பணியாற்றிய அவரது பயணம் தனியே ஒரு வரலாறு.
பிரபு தேவாவின் வளர்ச்சி
தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல கட்டங்களை கடந்து வந்த அவர், இன்று முழு கவனத்தையும் மீண்டும் சினிமாவிற்கே திருப்பியுள்ளார். இந்நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபுதேவா பகிர்ந்துள்ள ஒரு வீடியோ பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. நடனத்தை நேசிக்கும் சிறுவர்கள் குழுவுடன் இணைந்து அவர் செய்துள்ள ரீல்ஸ், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபுதேவா சந்தித்த இந்த சிறுவர்கள் யார் என்ற ஆர்வமும் சமூக வலைத்தளங்களில் அதிகரித்துள்ளது. டான்ஸ் மற்றும் பாட்டு பாடி ரீல்ஸ் செய்து பிரபலமான இவர்கள், ஏற்கனவே பல லட்சம் வியூஸ் பெற்ற வீடியோக்கள் மூலம் கவனம் ஈர்த்தவர்கள்.
யூடியூபர் தேவா
ஹாய் பிரண்ட்ஸ் நான் உங்கள் தேவா.. இது என்னுடைய தம்பி.. இப்ப உங்களுக்காக ஒரு பாட்டு பாடுவான் என்று அந்த சிறுவர்கள் மழலை மொழியில் பேசுவது பலருக்கும் பிடிக்கும். சமீபத்தில் கூட என் தம்பிக்கும் அனிருத்துக்கும் தான் போட்டியே என்று ஒரு வீடியோவை தேவா வெளியிட்டு இருந்தார். அதேபோல இப்போது பிரபு தேவாவை பற்றி இவர்கள் வெளியிட்ட வீடியோவும் அந்த வீடியோவில் பிரபுதேவாவும் அவர்களோடு குழந்தையாக மாறிய தருணம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர் -
நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா திடீர் இறப்பு.. இவ்வளவு பெரிய சோகங்களை கடந்து வந்தவரா அவர்! நெகிழ வைத்த கதை -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications