நடுராத்திரி டாப் நடிகையுடன் ஒன்றாக பைக்கில் சுற்றிய ரஜினிகாந்த்.. சுற்றி வளைத்த மைத்துனர்! நடிகை ஓபன்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து நடிகர்கள், நடிகைகள் பலரும் தங்களது அனுபவங்களை பேட்டிகளில் பகிர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில், நடிகை ராதிகா சரத்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில், ரஜினியுடன் இணைந்து நடித்த காலத்தில் ஏற்பட்ட சில மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
ராதிகா அந்த பேட்டியில், "பலரும் ரஜினிகாந்தை 'ரஜினி சார்' என்று அழைப்பார்கள். ஆனால் நான் அவரை எப்போதும் 'ரஜினி' என்றுதான் கூப்பிடுவேன். அது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அந்த அளவுக்கு நாங்கள் நட்புடன் பழகியிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

பைக்கில் சென்னையை சுற்றிய நினைவு
தொடர்ந்து பேசிய ராதிகா, ரஜினியுடன் இணைந்து நடித்த ஆரம்ப காலங்களில் நடந்த ஒரு சம்பவத்தை கூறி இருக்கிறார். ராதிகாவும் ரஜினியும் அடிக்கடி சுற்றி இருக்கிறார்களாம் ஒருமுறை, இரவு நேரத்தில் ஷூட்டிங் முடிந்த பிறகு, ரஜினியின் பைக்கில் அவருடன் சேர்ந்து சென்னை நகரத்தை சுற்றிக்கொண்டிருந்தார்களாம்.
அப்போது ரஜினி, "இந்த இடத்தில் நான் ஒருகாலத்தில் படுத்து தூங்கியிருக்கிறேன். இந்த இடத்தில் தங்கி இருந்தேன். இங்கே தான் சாப்பிட்டேன்" என தன் ஆரம்ப கால வாழ்க்கை பற்றிய பல நினைவுகளை பகிர்ந்ததாக ராதிகா தெரிவித்தார்.
"ரஜினி இன்று இருக்கும் இடத்திற்கு வருவதற்கு முன் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது எனக்கு அந்த நேரத்தில் தான் நன்றாக புரிந்தது. பலரின் வாழ்க்கை போராட்டங்களை கேட்டிருப்போம். ஆனால் ரஜினி அதை நேரடியாக அனுபவித்தவர்" என்றும் அவர் கூறினார்.
காரில் வந்த லதாவின் சகோதரர்
அந்த இரவு பைக்கில் இருவரும் சென்னையை சுற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு கார் வேகமாக வந்து அவர்கள் முன்னால் நின்றதாகவும், அதை பார்த்ததும் தான் மிகவும் பதறியதாகவும் ராதிகா கூறினார்.
பின்னர் அருகில் வந்தவர் யார் என்று பார்த்தபோது, அது ரஜினியின் மனைவி லதாவின் சகோதரர் என்பதும், அவர் தான் இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை என்பதும் தெரிய வந்ததாக கூறினார்.
"நடுராத்திரியில் ரஜினி ஒரு பெண்ணுடன் பைக்கில் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தில் அவர் காரை வேகமாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ஆனால் நாங்கள் இருவரும் சேர்ந்து வருவது லதாவுக்கு முன்பே தெரியும் என்று ரஜினி விளக்கிய பிறகே அவருக்கு நிம்மதி ஏற்பட்டது" என்று ராதிகா அந்த சம்பவத்தை நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார்.
ரஜினிகாந்தின் இரண்டு முகங்கள் - ராதிகா
அதே பேட்டியில், ரஜினியின் கேரக்டர் குறித்து பேசிய ராதிகா, "ஒரே மனிதருக்குள் இரண்டு விதமான முகங்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு பக்கம் மிக எளிமையான மனிதர். இன்னொரு பக்கம் தன் தொழிலில் மிகவும் ஒழுங்காகவும், பொறுப்புடன் இருப்பவர். அந்த இரண்டுமே ரஜினியிடம் மிகத் தெளிவாக தெரியும்" என்று கூறினார்.
ராதிகா மேலும் ரஜினி பற்றி பேசும் போது, படப்பிடிப்பில் சரியாக சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துவிடுவார் என்றும், புதிய நடிகர்களிடம் கூட மரியாதையுடன் நடந்து கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களிடம் வைரலாகும் பேட்டி
ராதிகா பகிர்ந்த இந்த நினைவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்தின் எளிமையான வாழ்க்கை, ஆரம்ப கால போராட்டம் மற்றும் சக நடிகைகளுடன் கொண்ட நட்பு ஆகியவை மீண்டும் ரசிகர்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதன் மூலம், சூப்பர் ஸ்டார் என்ற உயர்ந்த நிலையை அடைந்த பிறகும், ரஜினிகாந்த் தனது பழைய நாட்களை மறக்காமல் நினைவுகூரும் மனிதராக இருப்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications