Rekai Review: ஜீ5-ல் வந்திருக்கும் ரேகை சீரிஸ் எப்படி இருக்கு? பிக்பாஸ் பவித்ராவின் நடிப்பு மிரட்டல்! ரிவ்யூ இதோ
சென்னை: ஜீ5 ஓடிடி தளத்தில் புதுசா ஸ்ட்ரீம் ஆகியிருக்கும் வெப் சீரிஸ் தான் ரேகை. இதில் பிக் பாஸ் புகழ் பவித்ரா ஜனனி போலீஸ் ஆக நடிச்சிருக்காங்க. குற்ற கதைகளுக்கு பெயர் போன எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதின ஒரு நாவலோட கருத்தை வச்சுதான் இயக்குநர் தினகரன் இந்த ஏழு எபிசோடு த்ரில்லர் சீரிஸை உருவாக்கியிருக்கார். சரி, 'ரேகை' எப்படி இருந்துச்சுன்னு பார்க்கலாம்.

ரேகை வெப் சீரிஸ் கதை
சப் இன்ஸ்பெக்டர் பாலஹாசனும், அவருடன் இருக்கிற கான்ஸ்டபிள் பவித்ரா ஜனனியும் ஒரு சாதாரணப் பழக்கமான மரண விசாரணைக்காக போறாங்க. ஆனா, முதல்ல அது ஒரு சாதாரண விபத்துன்னு நினைச்சாலும், அதுக்குள்ள மறைஞ்சிருக்கிற சந்தேகங்கள் அவங்களை ஒரு ஆழமான புதிர் உலகத்துக்கே இழுத்துட்டு போகுது. ஒரே ஒரு மரணத்தோட நிற்காம அடுத்து அடுத்து தொடர் கொலைகள் நடக்கிறதை பார்க்கிறாங்க. இந்த வழக்குல அஞ்சு பேருக்குள்ள என்ன தொடர்பு? ஏன் அவங்க குறி வச்சு தாக்கப்பட்டாங்க? உண்மையில் கொலைகாரன் யாரு? இதுக்கு விடைதான் இந்த ரேகை வெப் சீரிஸ்.
கேரக்டர்களின் நடிப்பு
போலீஸ் அதிகாரியாக பாலஹாசன் நிறையவே செட் ஆகியிருக்கார். விசாரணை, சண்டை, இளம் அதிகாரிக்கே உரிய கோபம்னு எல்லாமே அவருடைய நடிப்புல இயல்பா தெரியுது.
பிக் பாஸ்க்கு பிறகு அவருக்கு வந்திருக்கிற முக்கியமான சீரிஸ் இது. கான்ஸ்டபிளா நடிச்சிருக்கிற இவரோட நடிப்பு பல இடத்துல கைதட்ட வைக்குது.
வினோதினி வைத்தியநாதன்
இதுவரைக்கும் பார்த்திராத ஒரு புது வேடத்துல வந்து ஆச்சர்ய படுத்துறாங்க. அவரோடு அஞ்சலி ராவ் ரொம்பவே முக்கியமான நெகட்டிவ் கேரக்டர்ல வந்து கவனம் ஈர்த்திருக்காங்க. இசையமைப்பாளர் ராஜ் பிரதாப், இந்தத் த்ரில்லருக்கு தேவையான டென்ஷனை உயர்த்துற மாதிரி பின்னணி இசையை அமைச்சிருக்கார். ஒளிப்பதிவாளர் மகேந்திரா ஹென்றி, தென்காசியோட சின்னச் சின்ன தெருக்கள், மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன்னு எல்லாச் சூழலையும் இயல்பான உண்மையோட கொண்டு வந்திருக்கார்.
படத்தொகுப்பு செய்த துரை, எந்த இடத்துலயும் தேவையில்லாம நீட்டிப் போகாம ஏழு எபிசோடையும் சீராக கொண்டு போயிருக்கார்.
சீரிஸ் எப்படி இருக்கு
ராஜேஷ்குமார் எழுதின க்ரைம் ஸ்டோரில இருந்து ஒரு கருத்தை மட்டும் எடுத்துக்கிட்டு, அதை முழுசா தனது ஸ்டைல்ல வெப் சீரிஸா வடிவமைச்ச இயக்குநர் தினகரனோட முயற்சி பாராட்டப்படுறதுக்குரியது. இந்தத் சீரிஸ்ல த்ரில்லர் மட்டும் இல்லாம, சாதாரண மனுஷங்க எப்படி பெரிய அதிகார விளையாட்டுகள்ல பலியாகிறாங்கங்கிற ஒரு சமூக விழிப்புணர்வும் இருக்கு. ஒவ்வொரு எபிசோட் முடிவிலேயும் அடுத்தது என்னன்னு ஆவலை அதிகரிச்சுக்கிட்டே போற மாதிரி வெகுவா அமைஞ்சிருக்கு.
'ரேகை' ங்கிற இந்த சீரிஸ், குடும்பத்தோட உட்கார்ந்து பார்த்து ரசிக்க தகுந்த ஒரு நல்ல கிரைம் த்ரில்லர் தான்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications