500 கோடி டீலை உதறிய சமந்தா! டோலிவுட்டை வியக்க வைத்த சென்னை பொண்ணு.. முதல் திருமணத்தில் தரமான பதிலடி
சென்னை: நடிகை சமந்தாவுக்கு இன்று 2வது திருமணம் நடந்துள்ளது.. ஆனால் முதல் திருமணத்தில் சமந்தாவுக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது? எதனால் அந்த திருமணத்தை செய்தார்? என்று யூகத்தின் அடிப்படையில் பல்வேறு தகவல்கள் அன்று சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய செய்திகளாக வந்து பரபரப்பு கிளப்பியிருந்ததை ரசிகர்களால் மறுக்க முடியாது.
கடந்த சில வருடங்களாகவே சோஷியல் மீடியாவில் அதிகமாக டிரோல் செய்யப்பட்ட பிரபலங்களில் ஒருவர்தான் நடிகை சமந்தா.

சாதாரண குடும்ப பின்னணி கொண்ட சென்னை பெண்ணான சமந்தா, மாடலிங்கில் நுழைந்து, பிறகு நடிகையானவர்.. தமிழில் சில படங்களில் மட்டுமே தலைகாட்டினாலும் பெரிய அளவுக்கு புகழ் பெறவில்லை.. பிறகு தெலுங்குப் பட உலகில் நட்சத்திரமாக உருமாறினார்..
அதிலும், நாகார்ஜுனா வீட்டுக்கு மருமகளாக சமந்தா நுழைந்ததுமே மொத்த திரையுலகமும் வியந்து பார்த்தனர். கடந்த 2017-ல் நாக சைதன்யாவும், சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. இந்து, கிறிஸ்தவ முறைப்படி இவர்களின் கல்யாணம் நடந்தது..
முதல் திருமணம் - விவாகரத்து
பிறகு 4 வருடம் கழித்து திடீரென விவாகரத்து அறிவிப்பு வெளியானது.. சமந்தா சினிமாவில் தொடர்ந்து நடித்ததுதான் தம்பதியின் மனமுறிவுக்கு காரணம் என்று பலரும் சொன்னார்கள்.. ஆனால், சமந்தாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே, நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா நெருக்கமாக பழகியதுதான் சமந்தாவின் மணமுறிவுக்கு காரணம் என்று சிலர் சொன்னார்கள்.
சமந்தாவுக்கு வந்த மையோசிடிஸ் நோய்தான் காரணம் என்று மற்றொரு தரப்பினர் சொன்னார்கள்... இந்நேரத்தில் 'மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் கணவன் அவரை விட்டு பிரிந்துவிடுவார்" என்று இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியாகியிருந்தது..
உதறிய ஜீவனாம்சம்
இந்த வீடியோவை, சமந்தா லைக் செய்திருந்தார்.. உடனே இணையவாசிகள், "அப்படின்னா மயோசிடிஸ் நோய் வந்ததால் தான் சமந்தாவை நாக சைதன்யா பிரிந்துவிட்டாரோ" என்று கேள்வி எழுப்பினார்கள்.
இப்படி மாறி மாறி காரணங்கள் சொல்லப்பட்டாலும், உண்மையிலேயே இந்த விவகாரத்துக்கு என்ன காரணம் என்பதை நாக சைதன்யா, சமந்தா இருவருமே வெளிப்படையாக சொல்லவில்லை..
ஆனால் டைவர்ஸை முதலில் கேட்டதே சமந்தா தான் என்று தெலுங்கு மீடியாக்கள் கொளுத்தி போட்டன.. காரணம், நாகார்ஜூனாவுக்கு 4000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதால், ஜீவனாம்சம் கேட்பதற்காகவே திருமணத்தை செய்தும், டைவர்ஸும் செய்கிறார் என்று தெலுங்கு மீடியாக்கள் பரபரப்பை கிளப்பின.
ரூ500 கோடி டீல்
சமந்தாவுக்கு நாகார்ஜூனா குடும்பத்தினர் ரூ.500 கோடி ஜீவனாம்சத்தை தர முன்வந்த நிலையில், எப்படியும் அந்த பணத்தை சமந்தா வாங்காமல் விடமாட்டார் என்றும் வாய்க்கு வந்ததையெல்லாம் வெளியிட்டன.
எனினும், இந்த விமர்சனங்கள் எதற்குமே சமந்தா வாய் திறக்கவில்லை. அமைதியாகவே இருந்தார். நாக சைதன்யா தரப்பில், எவ்வளவு ஜீவனாம்சம் வேண்டும்? என்று கேட்டதற்கு, "உன் காசு 10 பைசா எனக்கு வேண்டாம்" என்று துணிந்து சொன்னார் சமந்தா.
மலைத்த தெலுங்கு மீடியா
இப்படியொரு வார்த்தையை கேட்டதுமே, தெலுங்கு மீடியாக்கள் வியந்து போயின.. அந்த நிமிடத்தில் இருந்து சமந்தாவை உச்சத்தில் தூக்கி வைத்து கொண்டாட துவங்கிவிட்டது.. கூடுதலான கிரேஸ் சமந்தாவுக்கு டோலிவுட்டில் எகிறியது..
தன்மீதான எத்தனையோ விமர்சனங்களை கடந்து, தன்னுடைய அரிய நோய்க்கு சிகிச்சையையும் எடுத்துக் கொண்டு, சினிமாவிலும் தன்னுடைய இடத்தை தக்க வைத்து கொண்டு, இன்று 2வது திருமணம் செய்து, நம்பிக்கையுடன் புதிய வாழ்க்கையை துவங்கியிருக்கிறார் நம்ம சென்னை பெண் சமந்தா...!!












Click it and Unblock the Notifications