உதயநிதி ஸ்டாலின் பேச்சு கெத்தாக இருந்தது.. எம்ஜிஆர் பாட்டு பாடி பாராட்டிய சத்யராஜ்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக முதல் உரையை நிகழ்த்திய உதயநிதி ஸ்டாலின் பேச்சு, அரசியல் வட்டாரங்களில் மட்டுமல்லாமல் சினிமா உலகத்திலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக "சனாதனம் ஒழிய வேண்டும்" என்ற அவரது கருத்து, பல்வேறு தரப்பினரிடையே எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவரை பாராட்டி நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

சட்டப்பேரவையில் உதயநிதி பேச்சு
எதிர்க்கட்சித் தலைவராக தனது முதல் உரையை நிகழ்த்திய உதயநிதி ஸ்டாலின், ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை கண்காணித்து, குறைகளை சுட்டிக்காட்டும் பொறுப்பை ஏற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அதோடு, தமிழக வளர்ச்சிக்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தார். ஆனால், இறுதியில் கூறிய "மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிய வேண்டும்" என்ற வாசகம், அரசியல் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முதல்வர் விஜய்யின் ரியாக்ஷன்
அந்த நேரத்தில் முதல்வராக இருந்த விஜய், எந்தவித பதிலும் அளிக்காமல் கையெடுத்து கும்பிட்டது, பல்வேறு விளக்கங்களுக்கு வழிவகுத்தது. அவரது இந்த செயல், ஆதரவு எனவா அல்லது மரியாதை எனவா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியது.
சத்தியராஜ் வாழ்த்து
இந்த சூழலில் நடிகர் சத்தியராஜ் வெளியிட்டுள்ள வீடியோ, இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதில், உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் நிகழ்த்திய முதல் உரையை மிகவும் பாராட்டியுள்ளார். அந்த உரை ஒரு அரசியல்வாதி கடைப்பிடிக்க வேண்டிய கடமை, கண்ணியம் மற்றும் கட்டுப்பாடு ஆகிய மூன்றையும் முழுமையாக வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சட்டமன்றத்தில் இவ்வளவு தெளிவான மற்றும் நேரடியான பேச்சு கேட்கப்பட்டது மகிழ்ச்சியை அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிலும் முக்கியமாக, "மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிய வேண்டும்" என்ற உதயநிதியின் கருத்தை சத்தியராஜ் தனியாக எடுத்துக் கூறியுள்ளார். அந்த வார்த்தை ஒரு சாதாரண அரசியல் வாசகமல்ல, ஒரு சமூக நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் துணிச்சலான கருத்து என அவர் பாராட்டியுள்ளார்.
மேலும் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் பேசியதை பார்க்கும்போது அவ்வளவு கெத்தாக இருந்தது. அதை பார்க்கும் போது எனக்கு தலைவரின் பாடல் தான் ஞாபகம் வருகிறது. நான் எம்.ஜி.ஆர் ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடைய " ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை" என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. "உதய்... Hats off you!" என்று ஆங்கிலத்தில் பாராட்டியிருக்கிறார்.
அரசியல் எதிர்ப்பு
உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் இப்படிப்பட்ட கருத்துகள் கூறப்படக்கூடாது" என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால், இந்த விவகாரம் அரசியல் வாதம் மட்டுமின்றி மத மற்றும் சமூக விவாதமாகவும் மாறியுள்ளது.
பழைய சர்ச்சை
2023ஆம் ஆண்டு நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில், உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்தும் இதேபோல் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது தொடங்கிய விவாதம், தற்போது மீண்டும் புதிய வடிவில் எழுந்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications