“இந்த விஷயத்தை சொல்லியே ஆகணும்” யாரும் தப்பா நினைக்காதீங்க.. நடந்தது இதுதான்! உருக்கமாக பேசிய செல்வராகவன்
சென்னை: இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அவர் மிகவும் உருக்கமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் பேசியுள்ளார்.
வீடியோ தொடக்கத்திலேயே செல்வராகவன், "இன்னைக்கு ஒரு விஷயத்தை உங்ககிட்ட பேசணும்னு நினைக்கிறேன். இது ஒரு சென்சிட்டிவான விஷயம் தான். இதை எப்படி ஆரம்பிக்கறதுனு தெரியல. எல்லாரும் இதை எப்படி புரிஞ்சுக்கப்போறாங்கனும் தெரியல. ஆனா இந்த சூழலில் நான் இதை சொல்லியே ஆகணும்னு நினைக்கிறேன்" என்று பேச தொடங்குகிறார்.

இயக்குனர் செல்வராகவன் வீடியோ
தொடர்ந்து வாழ்க்கை பற்றிய தனது எண்ணங்களை பகிரும் அவர், நமக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்தா, 'ஏன் எனக்கே இப்படியெல்லாம் நடக்குது?'னு நினைப்போம். அந்த நேரத்துல மனசுக்குள்ளே முழுக்க உடைந்து போயிடுவோம். ஆனா நம்ம வாழ்க்கையில யார் இருக்கணும், யார் இருக்கக் கூடாது, என்ன நடக்கணும் என்பதெல்லாம் எப்போவோ கடவுளால எழுதப்பட்டதுதான். இப்ப நமக்கு நடக்குறது எல்லாமே அதோட தொடர்ச்சி தான். இதை எல்லாரும் புரிஞ்சுக்கணும்
என்று கூறுகிறார்.
மேலும், "எனக்கு மூணு வருடத்துக்கு முன்னாடி ஒரு பெரிய பிரச்சனை நடந்தது. அந்த பிரச்சனையிலிருந்து நான் மீண்டு வரவே முடியாதுனு நினைச்சேன். மனசளவுல ரொம்பவே உடைந்து போயிட்டேன். அது எனக்கு ஒரு பெரிய கஷ்டத்தை கொடுத்தது" என்று அந்த காலகட்டத்தை நினைவு கூறுகிறார்.
அந்த நேரங்களில் கோவிலுக்குச் சென்று கடவுளிடம் கேட்ட கேள்வியை பற்றி வருத்தமாக பேசுகிறார், நான் உன்னை இவ்வளவு கும்பிடுறேன். ஆனா நீ என்னை இவ்வளவு சோதிக்கிறியேன்னு நானே கடவுள்கிட்ட பல தடவை கேட்டிருக்கேன்" என்று செல்வராகவன் அந்த வீடியோவில் சொல்கிறார்.
உருக்கமாக பேசிய செல்வராகவன்
ஆனால் காலப்போக்கில் புரிதல் மாறியதாகவும் அவர் கூறுகிறார். "ஒரு பிரச்சனை வரும்போது நாம எவ்வளவு அழுதாலும், ஆர்ப்பாட்டம் செய்தாலும், சில மாதங்கள் கழிச்சு திரும்பிப் பார்க்கும்போது, 'இந்த பிரச்சனை நடந்ததால்தான் நான் இதிலிருந்து வெளியே வந்திருக்கேன்'னு நமக்கே தோணும். அப்ப தான் அதோட அர்த்தம் புரியும்" என்று அவர் பேசுகிறார்.
மேலும், "வாழ்க்கையில என்ன நடந்தாலும், அதை புரிஞ்சுக்கணும். அதிலிருந்து எப்படி மீண்டு வரணும்னு தான் யோசிக்கணும்" என்றும் அவர் கூறுகிறார்.
அதே சமயம், மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த சம்பவத்தின் தாக்கம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்றும் செல்வராகவன் சொல்கிறார். அந்த சம்பவத்தால இன்னைக்கும் தன் ஒரு கண்ல இருந்து கண்ணீர் வந்துட்டே இருக்கு. அது இன்னைக்கும் என்னால சரி செய்ய முடியல. ஆனா எல்லாமே மாறும். நம்ம வாழ்க்கையில நடக்குற ஒவ்வொரு விஷயத்துக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும். அது ஒரு சூழ்நிலைக்காகத்தான் என்று உருக்கமாக பேசுகிறார்.
ரசிகர்கள் கேள்வி
இந்த வீடியோவை பார்த்த பலர், "செல்வராகவனுக்கு என்ன ஆச்சு?", "இவ்வளவு மனசு திறந்து பேசுறாரே, ஏதாவது பிரச்சனையா?" என்று கவலையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே அவரவருடைய இரண்டாவது மனைவியை பிரியப் போகிறார் என்ற செய்திகள் பரவி வந்ததே அதனால் தான் இப்படி செல்வராகவன் பேசுகிறாரா என்பதும் பலருடைய கமெண்ட்ஸாக இருக்கிறது.
அதே நேரத்தில், ஒரு சிலர், செல்வராகவன் இதற்கு முன்பும் இதுபோன்ற வாழ்க்கை, மனநிலை, தத்துவம் சார்ந்த வீடியோக்கள் மற்றும் பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தவர் என்பதை நினைவுபடுத்துகின்றனர். எனவே, இது அவரது வழக்கமான சிந்தனைகளின் தொடர்ச்சியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
செல்வராகவன் தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களை இயக்கி, தனித்துவமான இயக்குனராக அடையாளம் பெற்றவர். மனித மனதின் வலி, குழப்பம், உணர்ச்சிகளை ஆழமாக சித்தரிப்பது அவரது படங்களின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. சமீப காலங்களில் நடிகராகவும் தொடர்ந்து பல படங்களில் நடித்துவருகிறார்.
இந்த நிலையில், செல்வராகவன் வெளியிட்டுள்ள இந்த உருக்கமான வீடியோ, அவரது ரசிகர்களிடையே மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் பொதுவாகவும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications