விஜய் திரிஷா உறவு இதுதான்.. அதில் என்ன தப்பு இருக்கு..? நடிகை ஷகிலா ஆதங்கம்
சென்னை: தமிழ் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் நடிகர் விஜய்யைச் சுற்றி தொடர்ந்து எழும் விமர்சனங்கள் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளன. குறிப்பாக, நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இடையிலான நட்பு குறித்து சமூக வலைதளங்களில் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து நடிகை ஷகிலா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

நடிகை ஷகிலா பேட்டி
ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய ஷகிலா, விஜய் ஏன் தான் அரசியலுக்கு வந்தார்ன்னே தெரியல.. அவர் அரசியலுக்கு வந்த பிறகு அவரை பற்றி என்ன என்னலாமோ பேசுறாங்க. அதுவும் நடிகை திரிஷா கூட அவர் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தது பற்றி தப்பு தப்பா பேசுறதை பாக்கும்போதே கடுப்பா இருக்கு, ஒரு ஆண், ஒரு பெண் நல்ல நண்பர்களாக இருக்கக் கூடாதா? ஏன் ஒரு சாதாரண நட்பை கூட சந்தேகத்துடன் பார்க்க வேண்டும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், பொது நிகழ்வுகளில் ஒன்றாக வருவது, ஒரே மாதிரியான உடை அணிவது போன்ற விஷயங்களை வைத்து தேவையற்ற கதைகளை உருவாக்குவது சரியல்ல, இந்த விமர்சனங்கள் தனிப்பட்ட எல்லைகளை மீறி நடிகர்களின் தனியுரிமை பாதிக்கப்படுகிறது. ஒரு நடிகரின் குடும்ப வாழ்க்கை, அவரது சொந்த விஷயம். அதை வைத்து அவரின் பொது வாழ்க்கையையும், சமூகப் பணிகளையும் மதிப்பிடுவது தவறு" என்று ஷகிலா கருத்து தெரிவித்துள்ளார்.
ஷகிலா கேள்வி
விஜய் அரசியலுக்கு வந்ததால் எல்லோரும் அவரை விமர்சிக்கிறார்கள். ஆனால் அவருடைய அரசியலை மட்டும் தானே விமர்சிக்க வேண்டும்? அதை விட்டுட்டு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி எல்லாம் பேசுறாங்க.. அவரை பற்றி பேசுறவங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.. அவங்களோட வாழ்க்கை மட்டும் ரொம்ப ஒழுங்கா இருக்கா? அவங்க எப்படி எல்லாம் வாழ்ந்துட்டு இருக்காங்கனு அவங்களுக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும். ஆனா அடுத்தவங்கள பற்றி மட்டும் குறை சொல்ல வந்துடுறாங்க, என்று ஷகிலா பதிலடி கொடுத்திருக்கிறார்.
மேலும், விஜய்யின் அரசியல் பயணம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். முன்னணி நடிகராக இருக்கும் நிலையில், தனது நிலையை விட்டு மக்களுக்காக அரசியலுக்கு வருவது சுலபமான முடிவு அல்ல என்றும், அதற்காக அவரை விமர்சிப்பது நியாயமல்ல என்றும் கூறினார்.
விமர்சனங்கள்
இதேபோன்று, அரசியலுக்கு வரும் பல பிரபலங்களும் ஆரம்பத்தில் விமர்சனங்களை சந்தித்துள்ளனர். குறிப்பாக, கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தபோதும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை மையமாக வைத்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், விஜய்யைச் சுற்றி சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவும் விமர்சனங்களில் ஒரு பகுதி அவரது அரசியல் நடவடிக்கைகளை குறித்ததாகவும், மற்றொரு பகுதி அவரது தனிப்பட்ட வாழ்க்கையை குறித்ததாகவும் காணப்படுகிறது. தேர்தல் காலங்களில் அவரது ரசிகர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது முதல், அவரது தனிப்பட்ட உறவுகள் வரை பல்வேறு கோணங்களில் விவாதங்கள் உருவாகி வருகின்றன.
மொத்தத்தில், விஜய்-திரிஷா நட்பு குறித்து எழுந்த சர்ச்சை, பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரிதாக விமர்சனங்களை சந்தித்த நிலையில் அது குறித்து ஷகிலா இப்போது விஜய்க்கு ஆதரவாக பேசியதை விஜயின் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications