சிவகார்த்திகேயன் பேச பேச தலையில் அடித்து கொண்ட நடிகர் சிங்கம்புலி – ‘தாய் கிழவி’ விழாவில் நடந்த சம்பவம்
சென்னை: தாய் கிழவி திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படம் ஏற்கனவே போஸ்டர், கிளிம்ப்ஸ் மூலமாகவே கவனம் பெற்றிருந்தது. நேற்று வெளியான ட்ரெய்லர் அந்த எதிர்பார்ப்பை இன்னும் உயர்த்தியது.

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு
சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வருகிறார். அவர் தயாரித்த கனா மற்றும் சர்வதேச அளவில் கவனம் பெற்ற கொட்டுகாளி போன்ற படங்களுக்குப் பிறகு இந்தப் படம் உருவாகியுள்ளது. ராதிகாவுடன் அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி, ஜார்ஜ் மரியான், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தாய் கிழவி ட்ரெய்லர் விழா
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சரத்குமார் தனது பேச்சில் தாய் கிழவி மற்றும் தாம் நடித்த ஆழி படம் ஒரே தேதியில் வெளியாகும் சூழலை பற்றி நகைச்சுவையாக பேசினார். "அந்தப் படத்தின் ப்ரோமோஷன் பார்த்ததும் நாம ஒதுங்கிடலாம் நினைச்சேன். ஆனா விதி விட்டு வைக்கல. இது மோதல் இல்லை சாதனை. தாய் கிழவி நூறு நாட்கள் ஓடணும். என் மனைவி ஜெயிச்சா நான் ஜெயிச்ச மாதிரி" என்ற அவர் பேச்சு அரங்கையே சிரிப்பில் மூழ்கடித்தது.
நடிகர் சிங்கம் புலி ரியாக்ஷன்
ஆனால் விழாவின் ஹைலைட் என்ன என்றால் சிவகார்த்திகேயன் - சிங்கம்புலி கலகலப்பான தருணம் தான்.
பேச்சை தொடங்கிய சிவகார்த்திகேயன், "அண்ணே சிங்கம்புலி அண்ணே இருக்கீங்களா... என்ன அண்ணே தூங்கிட்டீங்களா?" என்று சிங்கம்புலியை நோக்கி கேட்டவுடன், எதிர்பாராத அந்த கேள்விக்கு சிங்கம்புலி முகத்தை மூடி 'சும்மா இருங்க' என்பதுபோல் சைகை காட்டினார். அந்த ஒரு நொடியில் அரங்கமே சிரிப்பில் குலுங்கியது.
சிவகார்த்திகேயன் பேச்சு
அதற்குப் பிறகு சிங்கம்புலி பற்றி அவர் பேசும்போது, "அண்ணே ரொம்ப திறமையானவர்... வயசுக்கு ஏற்ற அனுபவம் இருக்கிறது... எங்களுக்கு நிறைய அட்வைஸ் கொடுத்திருக்கார்... இந்தப் படத்தில் 'உப்பிலி' கேரக்டரில், கமல்ஹாசன் ரசிகராக அருமையாக நடித்திருக்கிறார்... படத்துக்கு என்ன தேவையோ அதை சரியாக கொடுத்திருக்கார்... அவரோட நடிப்பு எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல்" என்று மனமாரப் பாராட்டினார்.
சிவகார்த்திகேயன் இப்படி பாராட்டிப் பேசும் ஒவ்வொரு முறையும் சிங்கம்புலி தலையில் அடித்துக் கொண்டபடி, 'போதும் போதும்' என்று சைகை காட்டிய காட்சியை பார்த்த ரசிகர்கள் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அந்த நேரடி ரியாக்ஷனே நிகழ்ச்சியை இன்னும் லைவாக மாற்றியது.
மொத்தத்தில் ட்ரெய்லர் எதிர்பார்ப்பை உயர்த்தியது, சரத்குமார் பேச்சு கலகலப்பை கூட்டியது, சிவகார்த்திகேயன் - சிங்கம்புலி தருணம் விழாவின் ஹைலைட்டாக மாறியது. படம் வெளியாகும் முன்பே இந்த நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications