தங்கத் தட்டில் சாப்பிட்ட சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்! மஞ்சள் பத்திரிகையால் வீழ்ந்த சாம்ராஜ்ஜியம்
சென்னை: உயிருக்கு ஆபத்தான நிலையில், கை ரிக்ஷாவில் வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற லட்சுமி காந்தன், கிருஷ்ணன் நாயர் என்ற இன்ஸ்பெக்டரிடம் வாக்குமூலம் தந்தார்.. பிறகு மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார். கடைசி நேரத்தில் தந்திருந்த வாக்குமூலம் கோர்ட்டில் முக்கிய சாட்சியங்களாக பேசப்பட்டன" என்று லட்சுமி காந்தன் கொலை வழக்கு குறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "அந்த காலகட்டத்தில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட வழக்காகும்.. 1944-ல் இந்த கொலை நடந்தது.. கொலை வழக்கு 1947வரை இந்த கொலை வழக்கு நடந்தது..

தமிழ் சினிமாவில் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்.. அளவுக்கு அதிகமாக சிகப்பாக இருப்பார்.. மாம்பழம் கலரில், ஹிப்பி தலையுடன், நல்ல உயரத்துடன் இருப்பார்.. பட்டு ஜிப்பா, பட்டு சட்டையைதான் எப்போதும் அணிவார்..
திருச்சியில் ஏக்கர் கணக்கில் உள்ள தன்னுடைய மாட மாளிகை வீட்டில் வாழ்ந்தவர் தியாகராஜ பாகவதர்.. ரயில்வே ஸ்டேஷனில் பாகவதர் இறங்கினாலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இவரை பார்க்க கூடிவிடுவார்கள்.
ஹிட் நடிகர்கள்
சொந்த குரலில் இவர் பாட்டு பாடி நடிப்பதை போலவே, என்எஸ் கிருஷ்ணனும் பாட்டு பாடி நடிப்பார்.. அதேபோல ஸ்ரீராமுலு நாயுடு என்பவர் பச்சிராஜா ஸ்டுடியோஸ் வைத்து, மலைக்கள்ளன் போன்ற ஹிட் படங்களை தயாரித்தவர்..
தியாகராஜ பாகவதர், என்எஸ் கிருஷ்ணன், ஸ்ரீராமுலு நாயுடு இவர்கள் அனைவரும் நண்பர்களாக இருந்துள்ளார்கள்..
சினிமா தூது
அந்த காலத்தில் லட்சுமி காந்தன் என்ற பத்திரிகையாளர் இருந்தார்.. இவர்மீது ஏற்கனவே கிரிமினல் வழக்குகள் இருந்தன.. குறுக்கு வழியில் ஈடுபட்டு பணம் சம்பாதித்தையே முழுநேரமாக வைத்திருந்தார். இதனால் பலமுறை கைது செய்யப்பட்டும், சிறையிலிருந்து தப்பிவிடுவார்.. எனவே லட்சுமி காந்தன் அந்தமான் ஜெயிலிலும் அடைக்கப்பட்டார்.
பிறகு விடுதலையாகி, சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வாய்ப்பு தேடினார்.. அப்போதுதான் நடிகர்களின் அந்தரங்கம் குறித்த நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டார்.. இதற்கான ஆதாரத்துடன், தன்னுடைய கற்பனை வளத்தையும் சேர்த்து தன்னுடைய பத்திரிகையில் எழுதினார்..
சினிமா தூது என்ற மஞ்சள் பத்திரிகையில் மோசமாக எழுதினார். அந்தவகையில், தியாகராஜ பாகவதர், என்எஸ் கிருஷ்ணன், ஸ்ரீராமுலு நாயுடு இவர்களை பற்றியும் தரக்குறைவாக எழுதினார் லட்சுமி காந்தன்.
இந்த கிசுகிசு செய்திகள் மக்களிடம் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் சில நடிகர்கள் பயந்துகொண்டு, லட்சுமி காந்தனுக்கு பணம் தந்து, தங்களை பற்றி எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். இதனால் பணம் தராத நடிகர்களை பற்றி இன்னும் மோசமாக எழுதினார்.. லட்சுமி காந்தனுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று தியாகராஜ பாகவதர், என்எஸ் கிருஷ்ணன், ஸ்ரீராமுலு நாயுடு 3 பேரும் முடிவெடுக்கிறார்கள்.
மஞ்சள் பத்திரிகை
கவர்னர் ஆப் மெட்ராஸிடம், சென்று இந்த 3 பேரும் முறையிட்டனர்.. சினிமா தூது பத்திரிகைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினர்.
இதையடுத்து அந்த பத்திரிகைகளில் எழுதப்படுவது எல்லாம் உண்மையா? என்ற விசாரணை நடக்கிறது.. அப்போதுதான் சினிமா தூது பத்திரிகையில் எழுதும் செய்திகள் உண்மை என்று தெரியவந்தது. எனினும் சினிமாவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கோரிக்கை விடுத்ததால், அந்த பத்திரிகை தடை செய்யப்பட்டுவிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி காந்தன், இந்து நேஷன் என்ற பிரபல பத்திரிகையை விலைக்கு வாங்கி, இன்னும் மோசமாக நடிகர்களை பற்றி எழுத ஆரம்பித்தார்.. மேலும் தன் பத்திரிகையை தடை செய்த 3 பேர் மீதும் தரக்குறைவாக, கேவலமாக எழுதினார்..
எனவே லட்சுமி காந்தனுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று தியாகராஜ பாகவதர், என்எஸ் கிருஷ்ணன், ஸ்ரீராமுலு நாயுடு என 3 பேருக்குமே மன உளைச்சலை தந்தது.. எனவே, யாரையாவது வைத்து லட்சுமி காந்தனுக்கு உயிர் காயங்களை ஏற்படுத்த முடிவு செய்தனர்..
ஆதாரங்கள் - ஆவணங்கள்
சம்பவத்தன்று, தன்னுடைய வழக்கறிஞர் நற்குணத்தை சந்தித்துவிட்டு வெளியே வந்த லட்சுமி காந்தனை, மர்ம நபர் ஒருவர் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டார்.. இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி காந்தன், அருகிலிருந்த வழக்கறிஞர் நற்குணம் வீட்டிற்கு சென்று முறையிட்டார்.
பிறகு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாலும், தன்னை கத்தியால் குத்தியது 3 பேரும்தான் என்பதை அறிந்து, அதற்கான ஆதாரங்களை லட்சுமி காந்தன் வழக்கறிஞர் நற்குணம் மூலம் திரட்டினார். இதனால் இன்னும் மோசமாக எழுதினார்.. லட்சுமி காந்தனுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று தியாகராஜ பாகவதர், என்எஸ் கிருஷ்ணன், ஸ்ரீராமுலு நாயுடு மூவரும் அதிர்ந்தனர்.
பரபர வாக்குமூலம்
இதனால் ஒரேயடியாக லட்சுமி காந்தனை கொல்ல முடிவெடுத்தனர்.. 19.10.1944-ல் கத்தி குத்து சம்பவம் நடந்த நிலையில், 6 பேர் சேர்ந்த கூலிப்படை மூலம் 8.11.1944 அன்று, காலையில் லட்சுமி காந்தன் கொலை செய்யப்பட்டார். இதற்காக 6 பேருக்கும் 25000 கூலி தரப்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில், கை ரிக்ஷாவில் வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற லட்சுமி காந்தன் கிருஷ்ணன் நாயர் என்ற இன்ஸ்பெக்டரிடம் வாக்குமூலம் தந்தார்.. பிறகு மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார். கடைசி நேரத்தில் தந்திருந்த வாக்குமூலம் கோர்ட்டில் முக்கிய சாட்சியங்களாக பேசப்பட்டன.
தங்கத் தட்டில் சாப்பாடு
கத்தியால் குத்திய 6 பேரும் கைதானார்கள்.. இவர்களில் ஒருவர் அப்ரூவர் ஆனதால், அவர் சொன்ன வாக்குமூலத்தை வைத்து, 3 பிரபலங்களுக்கும் ஆயுள் தண்டனை கிடைத்தது. எனினும் அப்பீலுக்கு லண்டன் கோர்ட்டுக்கு சென்றதையடுத்து 3 பேரும் விடுதலையானார்கள்.
தங்க தட்டில் சாப்பிட்டு, வெள்ளி கிண்ணத்தில் தண்ணீர் குடித்த தியாகராஜ பாகவதர், இந்த வழக்கை எதிர்கொள்ள தாம் சம்பாதித்ததை எல்லாம் விற்றார்.. மனதளவில் பாதிக்கப்பட்டார். அதற்கு பிறகு தியாகராஜ பாகவதர் நடிக்க வந்தாலும், அது எடுபடவில்லை.. இறுதியில் குடிக்கு அடிமையாகி, வறுமையில் சிக்கி, கண் பார்வையும் பாதிக்கப்பட்டு இறந்தார் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications