Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டி.ராஜேந்தர் போட்டுடைத்த சினிமா சீக்ரெட்.. திண்ணம்மா, வண்ணம்மா களத்தூர் கண்ணம்மா! 3 எழுத்து அதிசயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: களத்தூர் கண்ணம்மா படம் என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது, அந்த காவியப் படைப்பின் குழந்தை நட்சத்திர நாயகனும், பின்னாளில் அனைவராலும் போற்றப்படும் உலகநாயகன்தான்.. அந்தப் படத்தின் துவக்கம் எவ்வளவு பெரிய சவாலை அப்போது கொண்டிருந்தது என்பது பலரும் அறியாத செய்தி.. கடைசி நேரத்தில் அப்படத்தின் டைரக்டர் மாற்றம் செய்யப்பட்டது குறித்தும், ஏவிஎம் மேற்கொண்ட முயற்சி குறித்தும் பிரபல டைரக்டர் டி.ராஜேந்தர் விரிவாக பேசியிருக்கிறார்.

TR Talkies என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் டி.ராஜேந்தர், "பெரிய நிறுவனமான ஏவிஎம் தயாரித்து பெரிய வெற்றி பெற்ற படமான களத்தூர் கண்ணம்மா சம்பவத்தை பற்றி ஒரு விஷயம் சொல்றேன். உயிர் மூன்றெழுத்து, தமிழ் மூன்றெழுத்து, பாசம் மூன்றெழுத்து, சினிமா மூன்றெழுத்து, ஏவிஎம் மூன்றெழுத்து

Cinema TR Kalathur Kannamma

இந்தப் படத்தில் நடித்த நாயகன் பெயரை சுருக்கினால் அதுவும் மூன்றெழுத்து.. இதில் உருவான குழந்தை நட்சத்திரத்தின் பெயரை சுருக்கினாலும் அதுவும் மூன்றெழுத்து...

மூன்றெழுத்து - விதி விளையாடியது

இந்த மூன்றெழுத்தை வைத்துக்கொண்டு, இந்த படத்திலே விளையாடியது தலையெழுத்து. அதை கண்டுபிடித்தார் மறைந்துவிட்ட ஏவிஎம் செட்டியார் படம் எடுத்து. அந்த படத்தின்மூலம் பெரிய இயக்குனராக நின்றுவிட்டார் பீம்சிங் தலையெடுத்து.

ஆரம்பத்தில் களத்தூர் கண்ணம்மா படத்துக்கு பூஜை போடப்பட்டது.. இந்த படம் ஆரம்பிக்கப்பட்டபோது ஏ பீம்சிங் இயக்கவில்லை.. இந்த படத்தை ஏவிஎம் தயாரிக்கிற இந்த படத்தை இயக்குனர் யாரென்றால், டி பிரகாஷ்ராவ்.. இவர் சாதாரண இயக்குனர் அல்ல. உத்தம புத்திரன் என்ற படத்தை எடுத்து கலக்கியவர்.

செட்டியாருக்கு சினிமா தவம்

மறைந்துவிட்ட மக்கள் தலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த படகோட்டி படத்தை இயக்கியவர் பிரகாஷ்ராவ்.. இவர்தான் களத்தூர் கண்ணம்மா படத்தை இயக்கிட்டு இருந்தார்.. சினிமா என்றால் அது வியாபாரம் மட்டுமல்ல, செட்டியாருக்கு அது ஒரு தவம் போல.

அதனால்தான், எப்போதுமே தன்னுடைய படம் எதுவானாலும், ஓரளவு எடுத்ததுமே அதனை போட்டு பார்ப்பாராம் செட்டியார்.. அப்படி போட்டுப் பார்த்துவிட்டு, "அவர் ஒரு தயாரிப்பாளரா இருந்தாலும்கூட, யார் இயக்குனராக இருந்தாலும்சரி, தன்னுடைய கருத்துக்களையும், படத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களையும் சொல்லுவார்.

இயக்குனரை மாற்றிய ஏவிஎம்

அப்படித்தான் களத்தூர் கண்ணம்மாவில் எடுக்கப்பட்ட சீன்களை "இந்த படத்துல எனக்கு சில விஷயங்கள்ல மாற்றம் பண்ணனும். சில ஷாட்ஸ் கொஞ்சம் மாத்தி எடுக்கணும். சில சீன்களை மாத்தி எடுக்கணும்ன்னு பிரகாஷ்ராவ் கிட்ட சொன்னாராம்.

பெரிய டைரக்டரான அவருக்கும் ஒரு ஈகோ இருக்கும்தானே? அதனால் டைரக்டரிடம், "அதை மாத்தணும் இதை மாத்தணும்னு சொல்றதைவிட, பேசாமல் என்னை மாத்திருங்க. நான் இந்த படத்தை இயக்கல. வேற யாராவது இயக்குனரை போட்டுருங்க"ன்னு சொல்லிட்டாரு.

அதுக்காக ஏவிஎம் செட்டியார் மனம் உடையல.. மனம் தளரவே இல்ல... அவர் சற்றும் மனம் தளராமல் எடுத்த முடிவுதான், இந்த திரையுலக வரலாற்றையே திருப்ப போட்ருச்சு

திண்ணம்மா, வண்ணம்மா, களத்தூர் கண்ணம்மா

ஆம், அந்த பெரிய இயக்குனரை மாத்திவிட்டு இன்னொரு பெரிய இயக்குனரை அந்த படத்தில் ஒப்பந்தம் செய்து படம் எடுக்கிறார். அந்த இயக்குனர் தான் பீம் சிங்.. செட்டியார் படத்தை இப்போது மறுபடியும் பார்க்கிறார், இயக்குகிறார்.. இறுதியில் களத்தூர் கண்ணம்மா படம் மாபெரும் வெற்றியை பெறுகிறது.

இந்த வரலாற்றை பார்க்கும்போது என்ன தெரியுது? டி.பிரகாஷ் ராவ் என்ற இயக்குனரை மாத்த வேண்டும் என்பது ஏவிஎம் செட்டியாருடைய எண்ணமா? இல்லை! அது விதி செய்த கோலம். விதி விளையாடியது பாருங்கள் என்னம்மா! உருவாக்கியது பாருங்கள் புயல் சின்னம்மா! மாற்ற வேண்டியதை மாற்றி காட்டியது பாருங்கள் திண்ணம்மா!

படம் வெளியாகி ஓடியது அரியதொரு வண்ணம்மா! மனம் வீசும் சந்தன கிண்ணம்மா! அசைந்து வரும் அன்னம்மா! பொலிவுடன் ஒளிவீசும் பொன்னம்மா! புது வரலாறு படைத்தது அந்த படம்தான் களத்தூர் கண்ணம்மா!" என்றெல்லாம் டிஆர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+