ராட்சசி படத்தை விடவா.. கோமாளி சிறந்தது? தமிழக அரசு விருது இல்லாத விரக்தியில் இயக்குநர் ஆதங்கம்
சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள், 2014 முதல் 2022 வரையிலான சின்னத்திரை விருதுகள் மற்றும் 2015-16 முதல் 2021-22 வரையிலான கல்வியாண்டுகளுக்கான எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை சென்னை கலைவாணர் அரங்கில் பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.
தமிழ்நாடு அரசு திரைப்பட விருது
இந்த விருது பட்டியலில் நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய படங்கள் சிறந்த திரைப்படங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வெற்றியாளர்களின் நன்றி பதிவு
விருதுகள் அறிவிக்கப்பட்டதும் சினிமா உலகிலும் சமூக வலைதளங்களிலும் பரவலான விவாதம் தொடங்கியுள்ளது. விருதுக்கு தேர்வான நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் பலரும் தமிழ்நாடு அரசுக்கும் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டவர்களுக்கும் நன்றி தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அரசு வழங்கும் விருதுகள் என்பது தங்களின் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்றும், இது தங்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும் என்றும் பலர் கூறியுள்ளனர்.
ஆதங்கம்
அதே நேரத்தில், இந்த விருதுப் பட்டியலில் இடம்பெறாத சில திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களை குறித்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினரும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சில ஆண்டுகளில் வெளிவந்த விமர்சன ரீதியாகவும், கலை ரீதியாகவும் பாராட்டப்பட்ட படங்கள் மற்றும் நடிகர்களுக்கு விருது கிடைக்காதது சரியா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
சிலர், விருதுகள் வழங்கும் முறையில் முழுமையான வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், சில சிறந்த படைப்புகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் கௌதம் ராஜ் உருக்கம்
இந்த விவகாரத்தில் இயக்குநர் கௌதம் ராஜ் வெளியிட்டுள்ள கருத்தும் கவனம் பெற்றுள்ளது. அவர் தனது எக்ஸ் பதிவில், "ராட்சசி திரைப்படத்தை விட கோமாளியும், பொன்மகள் வந்தால் சிறந்த படமாக இருந்திருக்கிறது தமிழ்நாட்டுத் திரைப்பட விருதுகளுக்கு. வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டு, முதல்வர், துணை முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் ஆகியோரை டேக் செய்திருந்தார்.
அவரது இந்த பதிவு, விருதுகள் வழங்கப்பட்ட விதம் குறித்த அதிருப்தியையும், தேர்வில் உள்ள முன்னுரிமைகள் குறித்த கேள்விகளையும் எழுப்புவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிலர் இந்த கருத்தை ஆதரித்து, "ராட்சசி போன்ற சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட படங்கள் அரசின் விருதுகளில் போதிய அங்கீகாரம் பெறவில்லை" என்றும் விமர்சனம் செய்துள்ளனர். மறுபுறம், தேர்வு செய்யப்பட்ட படங்களும் நடிகர்களும் தங்களது துறையில் சிறப்பாக செயல்பட்டவர்கள் தான் என்றும், ஒவ்வொரு ஆண்டிலும் எல்லா சிறந்த படைப்புகளுக்கும் விருது கிடைப்பது இயலாத ஒன்று என்றும் சிலர் எதிர்வினை தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில், தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு, ஒருபுறம் தேர்வானவர்களுக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளித்தாலும், மறுபுறம் சில திறமையான கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காதது குறித்து விமர்சனத்தையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
ராட்சசி திரைப்படத்தை விட கோமாளியும், பொன்மகள் வந்தாலும் தான் சிறந்த படமாக இருந்திருக்கிறது தமிழ்நாட்டுத் திரைப்பட விருதுகளுக்கு.. வாழ்த்துக்கள் @CMOTamilnadu @Udhaystalin @Anbil_Mahesh
— Sy.Gowthamraj (@sy_gowthamraj) January 30, 2026
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்











Click it and Unblock the Notifications