Suriya : நேற்று விழாவில் நடந்த சம்பவம்.. ஏ ஆர் ரகுமான் விருது சூர்யா கையில்.. என்ன இப்படி ஆகிடுச்சு!
சென்னை: 2016 முதல் 2022 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் விழா பிப்ரவரி 13, 2026 அன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அரசு சார்பில் ஒரே நேரத்தில் ஏழு ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டதால், இந்த விழா தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது.
இந்த விழாவில் நடிகர் சூர்யா தனது 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றார். அதேபோல், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பெற்றார். இருவரும் வெவ்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றிருந்தாலும், விழாவில் நடந்த ஒரு சிறு கவனக்குறைவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரலான மேடை சம்பவம்
விழா மேடையில் முதலில் 'ஜெய் பீம்' படத்திற்காக சூர்யாவுக்கு விருது கொடுப்பதாக அறிவிப்பாளர் கூறியதும், சூர்யா மேடைக்கு சென்றார். ஆனால் மேடையில் அவரிடம் கொடுக்கப்பட்ட விருது, உண்மையில் ஏ.ஆர். ரகுமானுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருது என்பதே பின்னர் தெரியவந்தது.
அந்த விருதைப் பார்த்ததும் சூர்யா உடனடியாக, கீழே அமர்ந்திருந்த ஏ.ஆர். ரகுமானிடம் இது உங்களுக்கான விருது என்று சொன்னார். முதலில் அவருக்கு புரியாத நிலையில், பின்னர் சூர்யா விருதுடன் மேடையிலிருந்து இறங்கி வந்து, அவரிடம் காட்டியபோது தான் நடந்த குழப்பம் அனைவருக்கும் தெளிவானது.
மேடையில் இருந்தவர்கள் செய்த சிறிய கவனக்குறைவால் இந்த தவறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சூர்யா, அங்கிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்து, விருதுகளை சரியாக மாற்றி வழங்க உதவினார். இந்த தருணத்தை பதிவு செய்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, சூர்யாவின் செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
தற்போது 2016 முதல் 2022 வரையிலான திரைப்பட விருதுகள், 2014 முதல் 2022 வரையிலான சின்னத்திரை விருதுகள் மற்றும் 2015-16 முதல் 2021-22 வரையிலான மாணவர் விருதுகள் தேர்வு செய்யப்பட்டு அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சமூக சிந்தனைகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள், மக்களின் அன்றாட வாழ்க்கையை பிரதிபலிக்கும் தொடர்கள் மற்றும் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
சிறந்த நடிகர், நடிகைகள் - சிறந்த படங்கள்
திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர்களாக விஜய்சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த நடிகைகளாக கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய்பல்லவி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். சிறந்த படங்களாக மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நேற்று நடந்த விழாவின் முக்கிய அம்சங்கள்
நேற்று நடைபெற்ற இந்த விழாவில் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்த அரசு விருதுகள் ஒரே மேடையில் வழங்கப்பட்டதால், பல கலைஞர்களுக்கு இது வாழ்நாள் நினைவாக மாறியது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications