விரைவில் திரையில் தெறி ரீ ரிலீஸ்! விஜய் ரசிகர்களுக்கு தாணு தந்த ஸ்வீட் சர்ப்ரைஸ்! இதயமெல்லாம் ஹேப்பி
சென்னை: 'ஜனநாயகன்' பொங்கலை முன்னிட்டு ரிலீசாகும் என காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சென்சார் சிக்கல்கள் காரணமாக திட்டமிட்டப்படி இந்த படம் இப்போதைக்கு வெளியாகவில்லை.. இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரபல படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.. இந்த போஸ்ட்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இளையதளபதி' விஜய் ஹீரோவாக நடித்து, 'கலைப்புலி' எஸ். தாணு தயாரித்த திரைப்படம் 'சச்சின்'. இந்த படம் கடந்த 2005ம் ஆண்டு வெளியானது.

சச்சின் தந்த ஹிட்
'சச்சின்' வெளியான அதே நாளில் ரஜினிகாந்தின் 'சந்திரமுகி' மற்றும் கமல்ஹாசனின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' படங்களும் தியேட்டர்களுக்கு வெளிவந்தன. இதில் 'சந்திரமுகி' படம் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது.
ஆனால் 'மும்பை எக்ஸ்பிரஸ்' தோல்வியடைந்த நிலையில், 'சச்சின்' படம் சராசரி வெற்றியை பெற்றது. இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த ஏப்ரல் மாதம் 'சச்சின்' படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.. திரையரங்குகளில் வசூலும் குவிந்தது..
வசூலை அள்ளி சாதனை
ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான சச்சின் படத்தில் ஜெனிலியா, ரகுவரன், வடிவேலு, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் விஜய், வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றளவும் மிகவும் பிரபலமாகும்.. 20 வருடங்கள் கழித்து ரீரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், சச்சின் படம் தொடர்பான வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகின..
அதாவது இந்த படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே சுமார் ரூ. 12 லட்சம் வசூலித்ததாக கூறப்பட்ட நிலையில் ,'சச்சின்' முதல் நாளில் மிகப்பெரிய அளவில் வசூலை பெற்றது..
இதனைத் தொடர்ந்து, தாணு தயாரிப்பில் விஜய் நடித்த மற்றொரு படமான 'தெறி' படமும் 2026ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி மீண்டும் வெளியாகும் என்று தயாரிப்பாளர் தாணு கடந்த சச்சின் ரீ ரிலீஸின்போதே தெரிவித்திருந்தார்..
விரைவில் திரையில் தெறி
விஜய் - அட்லி கூட்டணியில் உருவான 'தெறி' படம் கடந்த 2016, ஏப்ரல் 14ம் தேதி வெளியானது. அந்த படம் மாபெரும் வரவேற்பை பெற்றதுடன், தயாரிப்பு செலவை விட இரண்டு மடங்கு லாபத்தை தயாரிப்பாளர் தாணுவுக்கு பெற்றுத்தந்தது.
அதாவது இந்த படம் வெளியான 6 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை தொட்டு இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.. விஜய் நடிப்பில் வெளியான 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'தெறி'யும் 100 கோடி வசூலைத் தொட்டிருந்தது அப்போது கோடம்பாக்கத்தை ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.. இங்கு மட்டுமல்லாமல், வட அமெரிக்கா மற்றும் கனடாவில் வசூலில் 1 மில்லியனை கடந்து சாதனை படைத்தது தெறி படம்.
கலைப்புலி எஸ் தாணு
இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய போவதாக தாணு சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தபோதே ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கினார்கள்.. இப்போது தயாரிப்பாளர் தாணு மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. தன்னுடைய ட்விட்டரில் தெறி படத்தின் போஸ்டரை பகிர்ந்து, விரைவில் திரையில் என்று பதிவிட்டுள்ளார்..
ஜனநாயகன் படம் வெளியாகாமல் அப்செட்டில் விஜய் ரசிகர்கள் உள்ள நிலையில், தாணு போட்டுள்ள இந்த போஸ்ட், பெரும் உற்சாகத்தை தந்து வருகிறது.. இணையத்தில் இந்த போஸ்ட்டை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்..












Click it and Unblock the Notifications