அந்த இரண்டு நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாது! பேசும்போதே கண்கலங்கிய இயக்குனர் வெங்கட் பிரபு
சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. வழக்கமாக ஜாலியாக, கலகலப்பாக பேசும் வெங்கட் பிரபு, அந்த வீடியோவில் ஒரு கட்டத்தில் கண்கலங்கிப் பேசுவது பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.

வெங்கட் பிரபு வீடியோ
வீடியோவின் தொடக்கத்திலேயே அவர், "அந்த இரண்டு நாட்களை என்னால் மறக்கவே முடியாது. இதுவரைக்கும் தூரத்தில் இருந்து பார்த்த ரேசிங்கை நேரில், அதுவும் பக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நாம பார்த்து ரசித்த அஜித்குமார் அங்கே இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கிறார். அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் கையெழுத்து போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த தருணத்தை பார்த்தபோது எனக்கு ஒரு விதமான பெருமையும், சொல்ல முடியாத சந்தோஷமும்... அது ஒரு வித்தியாசமான உணர்வு" என்று பேசும் போது அவரது குரல் தளர்ந்து கண்களில் நீர் ததும்பியது.
அஜித்தின் கார் பந்தயம்
இந்த உணர்ச்சிப் பின்னணிக்குக் காரணம், துபாயில் நடைபெற்ற ஆசிய அளவிலான கார் பந்தய போட்டியில் பங்கேற்று வரும் நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்தது தான். துபாயில் உள்ள உலகப் புகழ்பெற்ற Yas Marina Circuit சர்க்யூட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மோட்டார்ஸ்போர்ட்டில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜித்தை ஊக்கப்படுத்தும் வகையில் வெங்கட் பிரபு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
வெங்கட் பிரபு அஜித் ஃபோட்டோஸ்
அந்த சந்திப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் ரேசிங் டி-ஷர்ட், சாம்பல் நிற தொப்பி அணிந்த ஸ்டைலிஷ் லுக்கில் அஜித் - அவருடன் உற்சாகமாக நிற்கும் வெங்கட் பிரபு என இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்த புகைப்படங்கள் வெளியாகியதும் ரசிகர்கள் மத்தியில் ஒரே கேள்வி - "மங்காத்தா கூட்டணி மீண்டும் இணைகிறதா?" என்பதே.
மீண்டும் மங்காத்தா கூட்டணி
ஏனெனில், 2011-ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படம் அஜித்தின் 50-வது படமாக மட்டும் இல்லாமல், அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. முழுக்க நெகட்டிவ் ஷேடில் வந்தாலும் ரசிகர்கள் கொண்டாடிய அந்த கேரக்டர், வெங்கட் பிரபு - அஜித் கூட்டணியை ஒரு கல்ட் லெவலுக்கு கொண்டு சென்றது. அதனால் தான் இந்த துபாய் சந்திப்பு "மங்காத்தா 2 வரப்போகிறதா?" என்ற எதிர்பார்ப்பையும் மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.
அஜித் குமாரின் கனவு
இப்போது சினிமாவைத் தாண்டி தனது நீண்ட நாள் ஆர்வமான கார் பந்தயத்தில் முழு கவனம் செலுத்தி வரும் அஜித், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச அளவில் பங்கேற்பது அவரது ரசிகர்களுக்கு பெருமையாக பார்க்கப்படுகிறது. அந்த தருணத்தை நேரில் கண்டு பெருமைப்பட்டதாக வெங்கட் பிரபு பகிர்ந்த உணர்ச்சி, இந்த சந்திப்பை சாதாரணமாக அல்லாமல் ஒரு நினைவாக மாற்றியுள்ளது.
திரையில் ஹீரோவாக கைத்தட்டல் வாங்கிய அஜித், ரேஸ் டிராக்கில் இந்தியாவின் பெயரை உயர்த்தி நிற்பதை பார்த்த ஒரு நண்பனின் பெருமை - அதுதான் அந்த வீடியோவில் தெரிந்த உணர்வு என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த சந்திப்பு ஒரு நட்பு தருணமா? அல்லது மீண்டும் ஒரு மாபெரும் கூட்டணிக்கான தொடக்கமா? என்பது குறித்து சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications