காதலர் தினத்தில் விக்னேஷ் சிவன் உருக்கமான பதிவு.. போஸ்டில் சொன்ன விஷயம் தான் ஹைலைட்.. குவியும் கமெண்ட்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் மட்டுமல்லாமல், திருமணமான தம்பதிகளும் தங்களுக்குள் இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் வகையில் போட்டோஸ், பதிவுகள், சிறிய வாழ்த்துச் செய்திகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தமிழ் சினிமா பிரபலங்களும் இந்த வரிசையில் இணைந்து, தங்கள் குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

அந்த வகையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட காதலர் தின வாழ்த்து பதிவு தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. காதல் குறித்து அவர் எழுதிய வார்த்தைகள் பலருக்கும் மனதுக்கு நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. "காதலை பிடித்துக்கொண்டால் வாழ்க்கை முழுக்க நிறைவாக இருக்கும்" என்ற கருத்தை மையமாக வைத்து அவர் பகிர்ந்துள்ள இந்த பதிவு, காதலில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கான ஒரு மோட்டிவேஷனாக இருக்கிறது.

Vignesh Shivan Nayanthara Valentine Day

நயன்தாரா குடும்ப போட்டோஸ்

இந்த பதிவுடன் சேர்த்து, தனது மனைவி நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் எடுத்த குடும்ப புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த படங்களில் குடும்பமாக ஒன்றாக இருக்கும் தருணங்கள் இடம்பெற்றுள்ளதால், ரசிகர்கள் பலரும் "அழகான குடும்ப தருணம்", "இதுதான் உண்மையான காதல்" என கமெண்ட் செய்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் தன் குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்தது ரசிகர்களுக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ் ஆக அமைந்துள்ளது.

காதலர் தின கொண்டாட்டம்

இன்று காதலர் தினத்தை முன்னிட்டு பல நடிகர், நடிகைகள் தங்கள் கணவன்-மனைவி, காதலி-காதலனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் ரொமான்டிக் பதிவுகளாகவும், சிலர் குடும்பம், குழந்தைகள் என வாழ்க்கையின் வேறு ஒரு பக்கத்தை காட்டும் வகையிலும் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்கள். இதனால் சமூக வலைத்தளங்கள் முழுவதும் "காதல் தின" கொண்டாட்ட மனநிலையிலேயே இருப்பதாக சொல்லலாம்.

விக்னேஷ் சிவன் பதிவு

விக்னேஷ் சிவனின் இந்த பதிவில்,"கைகளை திறந்தால் எதுவும் இருக்காது. ஆனால் மனசுக்குள் பார்த்தால், ஒரு உண்மையான காதல் இருக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் உன்னை அன்பாக உணர வைக்கும் அந்த ஒரே நபர் இருந்தால் போதும், அப்போ சந்தோஷமாக இரு. நீ ராஜாக்களை விட பணக்காரன். தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவன். வாழ்க்கையில் போதுமான அளவு வென்றவன். இந்த பிரபஞ்சத்தால் நேசிக்கப்பட்டவன். எந்த சூழ்நிலையையும் தாண்டி காதலில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

விக்னேஷ் சிவனின் எந்த பதிவு, காதல் என்பது இரண்டு பேருக்குள் மட்டும் சுருங்கி நிற்பது அல்ல; குடும்பமாக வளர்ந்து வரும் அன்புதான் வாழ்க்கையை முழுமையாக்கும் என்பதையும் நினைவூட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, குழந்தைகளுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள், காதல் திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கையின் இன்னொரு அழகான முகத்தை காட்டுவதாக பேசப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+