விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், விஜய் தலைமையிலான அரசியல் கட்சியும் சமீப காலமாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. குறிப்பாக அவர் தனி விமானத்தில் பயணம் செய்தபோது ஏற்பட்டதாக கூறப்பட்ட ஒரு சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியது.
விமானப் பயணத்தின் போது விஜயின் கைப்பையில் இருந்து கத்திரிக்கோல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனால் விமான பணியாளர்கள் அவரை சில மணி நேரம் தடுத்து நிறுத்தியதாகவும் செய்திகள் வெளியானது. அதோடு, அவருடன் பயணம் செய்த ஆதவ் அர்ஜுனா கைப்பையில் மது பாட்டில் இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டை ஆதவ் அர்ஜுனா வெளிப்படையாக மறுத்து விளக்கம் அளித்தார்.

இதற்கிடையில், விஜயின் கட்சியில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் அளித்த பேட்டி இன்னும் பெரிய சர்ச்சையை கிளப்பியது. அந்த பேட்டியில் அவர், "விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாது, பொதுக்கூட்டங்களிலும் அவர் குடித்துவிட்டு தான் பேசுவார்" என்று கூறியதாக செய்திகள் பரவின. இந்த குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியது.
அனு மோகன் பகிர்ந்த அனுபவம்
இந்த சூழலில், விஜயுடன் சில படங்களில் இணைந்து நடித்த நடிகர் அனுமோகன் ஒரு பழைய பேட்டியில் கூறிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, ஒரு படப்பிடிப்பு இடைவேளையில் தனியாக நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போ எல்லாம் நான் அதிகமா சிகரெட் பிடிப்பேன் இப்போ நான் அதை விட்டு விட்டேன். அந்த நேரத்தில் விஜய் அந்த வழியாக வந்தார்.
என்னைப் பார்த்ததும் உடனே திரும்பி சென்றார். என்னாச்சு என்று கேட்டபோது, "அண்ணே, நீங்க சிகரெட் பிடிச்சிட்டு இருக்கீங்க... அந்த வாசனை எனக்கு ஒத்துக்காது" என்று மிகவும் மரியாதையாகச் சொன்னார். அதற்குப் பிறகு, "இது உடலுக்கும் நல்லது இல்ல... முடிந்தவரைக்கும் விட்டுருங்க" என்று அக்கறையோடு அறிவுரை கூறியதாக அனு மோகன் தெரிவித்தார்.
ரசிகர்கள் கருத்து
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விஜய் மீது வந்த குற்றச்சாட்டுகளுக்கு இது ஒரு பதிலடி என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
"புகை, மது போன்ற பழக்கங்களையே தவிர்க்கச் சொல்லும் மனிதர்... அவர் மீது இப்படி குற்றச்சாட்டு வருவது நியாயமா?" என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சர்ச்சைகளும், ஆதரவும்
ஒருபக்கம் அரசியல் பிரவேசம் காரணமாக அதிக கவனத்தில் இருக்கும் விஜய், மறுபக்கம் பல்வேறு விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார். ஆனால், அவருடன் பணியாற்றியவர்கள் பகிரும் அனுபவங்கள் ரசிகர்களிடையே அவருக்கான நல்ல பெயரை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்கிறது.
இப்போது பரவி வரும் இந்த அனு மோகன் பேட்டி, "விஜய் நிஜத்தில் எப்படிப்பட்ட மனிதர்?" என்ற கேள்விக்கு ரசிகர்கள் மனதில் ஒரு வேறு கோணத்தை உருவாக்கியுள்ளது.
-
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
நீலாங்கரை சாலையில் திடீரென நின்ற முதல்வர் கான்வாய்.. சாலையில் இறங்கி மக்களை சந்தித்த விஜய்! -
சிரிக்க கூட முடியாத அளவிற்கு.. அப்செட்டான விஜய்.. மனசை குடையும் 2 விஷயங்கள்! என்ன நடந்தது? -
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. எந்தெந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
தவெக அரசுக்கு எதிராக நூதன போராட்டம்... முதல்வருக்கு பார்சலில் அனுப்பிய ஹியரிங் எய்டு! -
"அன்னைக்கு காரி துப்பினவங்க... இப்போ போட்டோ எடுக்க வர்றாங்க!" முதலமைச்சருக்காக வருத்தப்பட்ட பெப்சி விஜயன் -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
கியரை மாற்றிய விஜய்.. அஜித்துக்கு திருப்புமுனை! காலத்தை வென்ற பாடல்கள்! 1999ம் ஆண்டு தமிழ் சினிமா -
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன்











Click it and Unblock the Notifications