பாலையா கட்டிய அதே வாட்ச்சுடன் ஜனநாயகன் விஜய்.. சீனியர் நடிகரின் ஓவர் மசாலா படத்தின் பழைய டெம்பிளேட்
சென்னை: எப்போதுமே தெலுங்கு ஆடியன்ஸின் ரசனை வேறு, தமிழ் ஆடியன்ஸின் ரசனை வேறு. தெலுங்கில் மசாலா அதிகமாக இருந்தால் ரசிப்பார்கள், ஆனால் தமிழில் ஓவர் மசாலா இருந்தால் படம் வெற்றி பெறுவது கஷ்டம்.. அந்தவகையில் ஜனநாயகன் படத்தில் ஓவர் மசாலா இருக்குமோ? என்ற சந்தேகம் உள்ளதாக தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து கூறியிருக்கிறார்.
Fine Time Cine என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, சிவகார்த்திகேயன் ஆடியோ வெளியீட்டு விழாவில் இது "அண்ணன் தம்பி பொங்கல்" என்று பேசியிருக்கிறார்... போட்டி இருக்கக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது... போட்டி என்பது தவிர்க்க முடியாதது விஜய் தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை..

2 பெரிய நடிகர்கள் - சீனியர் மோஸ்ட் விஜய்
அதே நேரத்தில் சிவகார்த்திகேயனுக்கும் இன்று பெரிய மார்க்கெட், ரசிகர்கள் கூட்டம், பெரிய ஓபனிங் உள்ளது... பெரிய பண்டிகை பொங்கல் என்பதால், 2 பெரிய நடிகர்களின் படம் வருவது நல்ல விஷயம்தான்..
இதற்கு முன்பே வாரிசு - துணிவு மற்றும் விசுவாசம் - பேட்டை என அஜித் மற்றும் விஜய் படங்கள் நேரடியாக மோதி வெற்றி பெற்றிருக்கின்றன... கோட் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தபோது விஜய் துப்பாக்கியைக் கொடுத்த காட்சியை வைத்து, சிவகார்த்திகேயனை "நம்பிக்கை துரோகி" என்று சிலர் விமர்சிக்கிறார்கள்.. அது தவறான விமர்சனமாகும்.. துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் தந்த காட்சி, வெறும் படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி மட்டுமே...
விஜய்யின் படங்களை பார்த்து வளர்ந்தவர்தான் சிவகார்த்திகேயன்... எனவே விஜய் சீனியர் மோஸ்ட் நடிகர் ஆவார்,. ரஜினி ஒரு மூத்த நடிகர் என்றாலும் அவருக்கும் விஜய்க்கும் போட்டி இருப்பது போல, விஜய்க்கும் அவருக்கு அடுத்து வளர்ந்து வரும் சிவகார்த்திகேயனுக்கும் போட்டி இருப்பது இயல்பானது. ஒவ்வொருத்தருடைய வளர்ச்சிதான் அந்தப் போட்டிக்குக் காரணம்..
பொங்கலுக்கு அரசியல் ஆட்டம்
இந்த பொங்கல் ஒரு "அரசியல் ஆட்டமாக" இருக்கும்.. விஜய் தன்னுடைய 'ஜனநாயகன்' படத்தில் திமுகவை எதிர்த்து அரசியல் செய்துள்ளார். பக்கா அரசியல் படமாக உள்ளது.,,
'ஜனநாயகன்' டிரெய்லர் மாஸாக உள்ளது, விறுவிறுப்பாக உள்ளது, இருந்தாலும், அது தெலுங்கு படமான 'பகவந்த் கேசரி'யின் அப்பட்டமான காப்பி போல உள்ளது.. பாலகிருஷ்ணா கட்டியிருந்த அதே வாட்சைத்தான் விஜய்யும் கட்டியிருக்கிறார், எதையும் மாற்றவில்லை.
எச். வினோத் இயக்கிய 'நேர்கொண்ட பார்வை' படம் 'பிங்க்' படத்தின் ரீமேக் என்றாலும், அதில் பல மாற்றங்களை செய்திருந்தார். ஆனால் இந்த ஜனநாயகன் படத்தில் எந்த மாற்றமுமே செய்யாமல் அப்படியே எடுத்து வைத்திருக்கிறார்கள்,.,.
தெலுங்கு ஆடியன்ஸ் vs தமிழ் ஆடியன்ஸ்
தெலுங்கு ஆடியன்ஸின் ரசனை வேறு, தமிழ் ஆடியன்ஸின் ரசனை வேறு. தெலுங்கில் மசாலா அதிகமாக இருந்தால் ரசிப்பார்கள், ஆனால் தமிழில் ஓவர் மசாலா இருந்தால் படம் வெற்றி பெறுவது கஷ்டம்..
இப்படி தெலுங்கு படத்தை அப்படியே காப்பி அடித்து வைத்தால், தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று விஜய் நினைத்தாரா தெரியவில்லை.. தெலுங்கு படங்களில் கையால் ரயிலை நிறுத்துவது, ஜெயில் கம்பியை வளைப்பது போன்ற நம்ப முடியாத காட்சிகள் இருக்கும், அதை அவர்கள் ரசிப்பார்கள். ஆனால் தமிழ் ஆடியன்ஸ் உண்மைக்கு நெருக்கமான காட்சிகளையே விரும்புவார்கள். ஜனநாயகன் ஓவர் மசாலாவாக இருப்பதாக தோன்றுகிறது. அதிக மசாலா தமிழ் சினிமாக்களுக்கு ஒத்துவராது,..
எம்.ஜி.ஆர் காலத்து பாணி
மற்றொரு விஷயம், வழக்கமான அரசியல்வாதிகளைச் சாடும் விஜய் படமாகவும் இது தெரிகிறது. அரசியல்வாதிகளைப் பார்த்து "உங்களை அரசியல் பண்ண வரச் சொன்னால் கொலை செய்கிறீர்களா?" என்று விஜய் பேசும் வசனங்கள் எல்லாம் பழசான வசனங்கள்தான்..
50 ஆண்டுகளுக்கு முன்பே எம்.ஜி.ஆர் "நான் ஆணையிட்டால்" பாடலில் சாட்டையை கையில் எடுத்துவிட்டார். அதே பழைய டெம்ப்ளேட்டை இப்போது மீண்டும் பயன்படுத்துகிறார்கள். ஏற்கனவே மக்கள் பார்த்து பார்த்து சலித்துப்போன படமாகவே நான் பார்க்கிறேன் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
எப்போதுமே தெலுங்கு பட ஆடியன்ஸின் ரசனை வேறு, தமிழ் ஆடியன்ஸின் ரசனை வேறு. தெலுங்கில் மசாலா அதிகமாக இருந்தால் ரசிப்பார்கள், ஆனால் தமிழில் ஓவர் மசாலா இருந்தால் படம் வெற்றி பெறுவது கஷ்டம்.. அந்தவகையில் ஜனநாயகன் படத்தில் ஓவர் மசாலா இருக்குமோ? என்ற சந்தேகம் உள்ளது. டிரைலரும் அப்படித்தான் உள்ளது என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
