Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெஸ்ட் ஹவுஸில் பேய்க்கதை.. ரஜினி படத்தில் விலகிய சுந்தர் சி.. அப்ப தலைவர் 173 படத்தின் டைரக்டர் இவரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் தயாரிப்பில், ரஜினி நடிக்கும் "தலைவர் 173" படத்தை இயக்குவதாக இருந்த நிலையில், மூத்த இயக்குனரான சுந்தர் சி. அதிலிருந்து விலகிவிட்டார்.. இதையடுத்து, அந்த படத்தை அடுத்து இயக்குவது யார்? உண்மையிலேயே சுந்தர் சி விவகாரத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து பத்திரிகையாளர் சுபைர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Cine Mini Time என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், "ரஜினி நடிக்கும் படத்தில் கமலும் நடிக்க மாட்டார்.. ஸ்கிரிப்ட் பணியில் வேண்டுமானால் கமலின் பங்களிப்பு இருக்கலாம்.

Thalaivar 173 Rajni Sundar C 173

தக் லைஃப் படம் மூலம், கமலுக்கு ஏற்கனவே 150 கோடி ரூபாய் கடன் உள்ளது.. அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டால், கடன் தந்தவர்கள் அமைதியாகிவிடுவார்கள்.. அதனால் ரஜினியை வைத்து, தயாரிக்க முடிவு செய்தார்.. சுந்தர் சி டைரக்ட் செய்வது என்றும் முடிவாகி, அதில் கமல் கேமியா செய்வதாகவும் முடிவானது. காரணம், ஷார்ட் டைம்மில் படத்தை முடிச்சிடுவார் சுந்தர் சி.

ரஜினி தலைவர் 173

ஆனால், ரஜினி கொஞ்சம் தயங்கினார்.. பிறகு லேட்டஸ்ட்டாக சுந்தர் சி எடுத்து வரும் படங்களின் கிளிப்பிங்க்ஸ், சீன்களை பார்த்ததுமே, அவர் இயக்க பிறகு ஒப்புக் கொண்டார்.. ஆனால், கதை எதுவுமே முடிவாகவில்லை.. அதற்குள் கமல் பிறந்தநாள் வந்ததால், அன்றைய தினம் படத்தின் அறிவிப்பை வெளியிட்டுவிட்டனர். அனைவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ, வீடியோவும் வெளியிட்டுவிட்டனர்.

இதற்குபிறகு, ஈசிஆரில் உள்ள ஐடியல் பீச்சில்தான் சினிமா டிஸ்கஷன்கள் நடக்கும்.. எனவே சுந்தர்சி தன்னுடைய அசிஸ்டன்ட்ஸ் எல்லாரையும் கூட்டிட்டு போய், ஒரு அவுட்லைன் கதை ரெடி பண்ணார்.. பிறகு அந்த கதையை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மூலமாக ரஜினிக்கு சொல்லப்படுகிறது. காரணம், ஐஸ்வர்யாவும் அந்த படத்தின் ஒரு தயாரிப்பாளர் ஆவார்..

ஐடியல் பீச் கெஸ்ட் ஹவுஸ்

பிறகு ரஜினியே லைனில் வந்து சுந்தர் சியிடம் பேசினார். கதையை கேட்டுவிட்டு வேண்டாம் என்று மறுத்து, எனக்கு கொஞ்சம் கமர்சியலா பண்ணுங்கன்னு சொல்லி இருக்கார்.. உடனே சுந்தர் சியும், இன்னொரு கதை ரெடி செய்தார்.. ஆனால் அதுவும் ரஜினிக்கு பிடிக்கவில்லை.

இது சுந்தர்சிக்கு பயங்கர அப்செட் ஆகிவிட்டது.. என்ன செய்வதென்று தெரியாமல் ஐடியல் பீச்சிலேயே 3, 4 நாட்களாகவே குழம்பியிருக்கிறார்..

முக்கியமான சில முக்கியமான தயாரிப்பாளர்கள், நெருங்கிய நண்பர்கள் சுந்தர் சியிடம், "ரஜினிக்கு உங்க மேல ஒரு கான்ஃபிடன்ட் இல்லை.. ஒவ்வொரு சீனிலும் மாற்றங்கள் செய்ய சொல்லலாம்.. இதனால் 2 தரப்புக்குள்ளும் சரியான அண்டர்ஸ்டாண்டிங் வராது... அதனால், இந்த ப்ராஜெக்ட்ல நீங்க தொடர்ந்து ட்ராவல் பண்றது சரியா இருக்குமான்னு தெரியல" என்று கூறியிருக்கிறார்கள்.

கமல், ரஜினி கறார் முடிவு

ஆனால், இதை கமல், ரஜினியிடம் எப்படி சொல்வது, எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை.. பிறகுதான் வேறு வழியில்லாமல், ட்வீட் பதிவிட்டு, அறிக்கையும் வெளியிட்டார்.. இது கமல், ரஜினி இருவருக்குமே தெரியாது.

அந்த நேரத்தில் கமல் டெல்லியில் இருந்தார்.. சுந்தர் சியின் ட்வீட்டை பார்த்ததுமே குஷ்பு மூலமாக அந்த ட்வீட்டை டெலிட் செய்ய வைத்தார்.. இதற்கு பிறகு, இவர்களை சமாதானம் செய்து வைக்க குஷ்பு முயன்றார்.. ஆனால், தங்களை கலந்தாலோசிக்காமலேயே சுந்தர் சி அறிக்கையை வெளியிட்டுவிட்டதால், கமல் ரஜினி இருவருமே சுந்தர் சி வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்துவிட்டனர்.

பேய்க்கதை சொன்ன சுந்தர் சி

சுந்தர் சிக்கு பிறகு நிறைய டைரக்டர்கள் கதையை சொல்லி வருகிறார்கள்.. . இதில், கார்த்திக் சுப்புராஜ் அப்படத்தை இயக்க வாய்ப்புள்ளது. ஆனால் அது உறுதியாகவில்லை.

தொடர்ந்து பேய் படங்களாகவே சுந்தர் சி எடுத்து வருகிறார்.. ரஜினியை பேய் போல காட்ட முடியாது.. ஆனால், ரஜினி எதிர்பார்ப்பது, பழைய சுந்தர் சி-யின் என்டர்டைன்மென்ட், காமெடி நிறைந்த ஸ்கிரிப்ட்டை கேட்கிறார்.. அதாவது உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி போன்ற கலகலப்பாக படங்கள் போல ரஜினி எதிர்பார்க்கிறார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+