நான் கனவு காணவில்லை.. ஸ்டாலின் தான் பகல் கனவு காண்கிறார்.. உடனே பதில் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
சேலம்: "நான் கனவு காண்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் அவர்தான் பகல் கனவு காண்கிறார். பொய்யைப் பொருந்துவதுபோல சொன்னால், உண்மை திருதிருவென விழிக்குமாம். அதுபோல முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்." என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் இன்று நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், "நான் கனவு கண்டு கொண்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார். நான் கனவுலகில் வாழவில்லை. முதல்வர் ஸ்டாலின்தான் பகல் கனவு காண்கிறார். பகல் கனவு பலிக்காது ஸ்டாலின் அவர்களே..

திமுகவை பொறுத்தவரை குடும்பத்தில் உள்ளவர்கள் பதவிக்கு வர முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள்தான் பதவிக்கு வர வேண்டும் என திமுக கூட்டணி அமைக்கிறது. கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் முதலமைச்சர் ஆனார். தற்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகியுள்ளார். திமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பது போல் மாயத்தோற்றத்தை உருவாக்கியுள்ளனர்.
பொய்யைப் பொருந்துவதுபோல சொன்னால், உண்மை திருதிருவென விழிக்குமாம். அதுபோல முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு சரிவும் அதிமுகவுக்கு செல்வாக்கும் ஏற்பட்டுள்ளது. வாக்கு வித்தியாசத்தைப் பார்த்தாலே அது தெரியும்.
திமுகவில் கருணாநிதி குடும்பத்தினர் மட்டும்தான் உயர் பொறுப்புக்கு வர முடியும். மத்தியில் பொறுப்பு வாங்க வேண்டும் என்பதற்காகவே ஸ்டாலின் கூட்டணி அமைத்துள்ளார். தமிழக மக்களின் மகத்தான ஆதரவால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்." என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கோரிக்கைகளை நிறைவேற்றாததால், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனன. விரைவில் திமுக கூட்டணி உடையும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னாள் திமுக எம்எல்ஏ இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசும்போது, "திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். பக்கத்து வீட்டில் என்ன தகராறு என்று சிலர் காத்திருப்பார்கள். அதுபோல இருக்கிறார். அவர் கனவுலகில் வாழ்கிறார்.
திமுக கூட்டணி கொள்கை கூட்டணி மட்டுமல்ல; மக்கள் கூட்டணியாகவும் உள்ளது. திமுக கூட்டணிக்குள் விவாதங்கள் ஏற்படலாம்; ஆனால் விரிசல் ஏற்படாது. எங்கள் கூட்டணிக்குள் விரிசல் ஏற்படும் என எடப்பாடி பழனிசாமி கனவு காண வேண்டாம். 2026 மட்டுமல்ல, அதற்குப் பின் வரும் அனைத்துத் தேர்தல்களிலும் திமுகவே ஆட்சிக்கு வரும்" என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாகவே எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications