''தாத்தா பிறகேன் ராவணன் அழிக்கப்பட்டான்?''
-ரிஷிசேது
கஷ்டம் என்றால் என்ன என்கிறாள் மகள்
அது சொல்லித் தெரிவதில்லை என்கிறேன் நான்
பிறகேன் அதை சொல்ல வேண்டுமென்கிறாள் தொடர்ந்து
மெல்ல மெல்ல முட்டி ஓட்டை உடைத்து
வெளி வருகிறது ஒரு சிறு பறவை
தூரத்தில் திருப்பப்படுகிறது கேமரா
புள்ளியென தெரிந்து பின் பெரிதாகிறது வல்லூறு
சில நிமிடங்களுக்கு முன் வெளிவந்த
குஞ்சை கொத்திப் போகிறது..
மகள் இது பறவைக்கு கஷ்டமெனில்
இன்னொன்றின் உணவல்லவா என்கிறாள்
கஷ்டம் போகனும்னா கடவுளைக் கும்பிடு
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
என் அப்பா சொல்ல
''தாத்தா பிறகேன் ராவணன் அழிக்கப்பட்டான்?''
பேசாதிருந்தேன் நான்- வேறு ஸ்லோகம் வேறு கடவுள்
என விரியும் அந்த தர்கத்தில்
மகள் வென்றுவிடாதிருக்க என் மனைவியும் சேர
இறுதியில் புத்தர் நுழைகிறார்
'இட் மேக்ஸ் ஸென்ஸ்'- ஆசையே எல்லாம்
ஒரு வழியாய் முடிந்ததென நினைக்க
''ஆமாம் கஷ்டம்னா ஒன்னுமில்லையா?''
''டோன்ட் ஆர்கியூ ஷ்ரேயா'' கிட்டத்தட்ட
கத்தினாள் என் மனைவி....
மெளனமே சிறந்தது என்கிறாள்
பிறகேன் மொழி....விரிகிறது
பதிலும் கேள்விகளும்....
-ரிஷி சேது ( [email protected] )
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications